Monday, October 30, 2017

வாய்ச் சுத்தம்: கவிஞர் தணிகை

வாய்ச் சுத்தம்: கவிஞர் தணிகை

Image result for oral hygiene

உண்மையாக பேசுவாரை வாய்ச் சுத்தம் உடையார் என்பார் பெரியார் ஆனால் இது அந்தப் பொருள் பட சொல்லப்படுவதல்ல மாறாக உடல் ஓம்பும் முறைகளின் கீழ் வருவதே. பயம் வேண்டாம். படியுங்கள்.

மிக முக்கியமான இந்த உடலோம்பும் முறைகள் பற்றி ஏற்கெனவே மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் டாட் காமில் எழுதி இருந்தேன் அது இப்போது பயனில் இல்லை என்பதால் இதை இங்கே மறுபடியும் சொல்ல முயல்கிறேன்.

வாய்ச் சுத்தமும், ஆசன வாய் சுத்தமும் சரியாக பராமரிக்கப்பட்டால் மனித உடலுக்கு ஏற்படும் வியாதிகளிலிருந்து பாதிக்குப் பாதி உங்களுக்கு விடுதலைதான். இன்று வாய்ச் சுத்தம் பற்றி மட்டும் பார்ப்போம்.

வாய்ச் சுத்தம்:
‍000000000000000

உண்மையில் சொல்லப் போனால் மனிதர்களுக்கு எல்லாவற்றையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் அதை சரிவர அவர்கள் தெரிந்து கற்றுக் கொடுக்கிறார்களா? அப்படி சொல்லிக் கொடுக்கப் பட்டாலும் அவற்றை கற்றுக் கொள்வார் சரி வர கற்றுக் கொள்கிறார்களா அதைக் கடைசி வரை கடைப்பிடிக்கிறார்களா என்பதெல்லாம் கேள்விக் குறிகள்.

ஒருவர் அப்படி கற்றுக் கொண்டார் எனில் அவர் , அவர் குடும்பம், அவர் நட்பு ஏன் அவரைத் தொடர்பு கொள்ளும் அனைவர்க்குமே அந்தக் கல்வி அறிவு சென்று சேர்ந்து விடும். அதைத்தான் நாம் கல்வி எனச் சொல்ல வேண்டும்

பொதுவாக அந்தக் காலத்தில் ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழி பல் சுத்தம் செய்யலுக்கும் வாழ்க்கைக்கு வேண்டியவற்றையும் சுட்டிக் காட்டும் ஆனால் அதெல்லாம் எந்த அளவு சரியானது என்று ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

2 நிமிடத்திற்கு மேல் பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்கு மேல் பற்பசையை பயன்படுத்தக் கூடாது. உறங்கி விழித்ததும் பல் துலக்குவதை விட உறங்கும் முன் பல் துலக்கி வாயை சுத்தம் செய்வது மிகவும் அத்தியாவசியமான பழக்கம் இதை வழக்கமாகக் கொள்வது ஆரம்பத்தில் கைக்கொள்வதும் கடினமே.

பற்பசையைத் தேர்ந்தெடுக்கும்போது பச்சை அடையாளக் குறியிட்ட அதாவது அந்த பற்பசையை வைத்திருக்கும் அந்த மேலுறை மேல் கறுப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை இப்படி வண்ணங்களை சிறு சதுரமாக அல்லது செவ்வகமாக போட்டிருப்பார்கள். நாம் பச்சை அடையாளம் உள்ளதையே தேர்வு செய்ய வேண்டும். மேலும் உபயோகப்படுத்தும் பிரஸ் மிகவும் மென்மையானதாக சாஃப்டாக இருக்க வேண்டும். அந்த பிரஸ் உருவம் உருக்குலைந்த  உடன் மறுபடியும் புதிய பிரஸ்ஸை வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆக மேற்சொன்ன அளவு பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு எல்லாரும் செய்வது போல வாயில் நீளவாக்கில் ஒரு புறமிருந்து இன்னொரு புறத்துக்கு பிரஸ்ஸை செலுத்தி பற் தேய்ப்பது மிகவும் தவறு. அதனால் பல் எனாமல் போய் சீக்கிரம் பற் கூச்சம் ஏற்படும், ஈறு தேய்ந்து பற்கள் அசைவு கொடுக்க ஆரம்பிக்கும்.

Image result for oral hygiene

எனவே பற்கள் மேல் தாடையில் மேல் இருந்து கீழாகவும் கீழ் இருந்து மேல் நோக்கி கீழ் தாடையில் இருப்பதால் அதனிடையே இருக்கும் இண்டு இடுக்கு, சந்தில் சிக்கியுள்ள மாட்டியுள்ள உணவுத் துணுக்குகளை வெளியேற்றுவதுதான் பல் துலக்குவதன் மிக முக்கியமான நோக்கமே. எனவே பிரஸ்ஸை கீழ் பற்களுக்கு மேல் நோக்கியும், மேல் புற பற்களுக்கு கீழ் நோக்கியும் செலுத்த வேண்டும், கடைவாய்ப் பற்கள் மேலும் , உள் வாயுள் உள்ளிருந்து வெளி நோக்கியும் செலுத்தி சிக்கியவற்றை நீக்க முயலவேண்டும் மேல்  கடைவாய்ப் பற்களை மேல் நோக்கிய பிரஸ் , கீழ் கடைவாய்ப் பற்களை கீழ் நோக்கிய பிரஸ் செலுத்துவதும் இருக்க வேண்டும்.

அடுத்து நாக்கை பிரஸ்ஸின் பின் புறம் திருப்பு அதில் உள்ள கோடுகள் மூலம் நன்கு வழிக்க வேண்டும்.

Related image

அதன் பின் நன்றாக நீர் கொண்டு அலசி வாயைக் கொப்பளித்து விட்டு ஈறுகளை நன்றாக அழுத்திக் கொடுக்க வேண்டும். மேலண்ணம் தூய்மை செய்ய தமது வலது கை கட்டை விரலை வைத்துப் பாருங்கள் அது அதற்காகவே படைக்கப்பட்ட பொருத்தமுடையதாக தோன்றும், ஜாடிக்கேத்த மூடி என்பார்களே அது போல , எனவே வலது கை கட்டை விரல் கொண்டு தேய்த்து சுத்தம் செய்து கொள்ளலாம்.

இப்படி செய்வதுதான் முழுமையாக பல் துலக்கி வாயைச் சுத்தம் செய்வதன் வழிமுறை. மேலும் முடிந்தால் ஒரு சிறு தேக்கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்து வாயில் விட்டு நன்கு பத்திலிருந்து 20 நிமிடம் கொப்பளித்து வந்தால் அந்த நல்லெண்ணெய் பால் வண்ணமாக வெள்ளையாய் மாறுவதுடன், மேலும் கொப்பளிக்கும்போது எண்ணெயின் கடினத் தன்மை மாறி பச்சைத் தண்ணீராய் கனம் குறைந்திருக்கும் அப்போது வெளியே துப்பி விடலாம். இவ்வாறு செய்வதால் உடல் சூடு குறையும், ஏன் இரத்தக் கொதிப்பு போன்ற உடல் சமநிலை இல்லாதாருக்கும் கூட இரத்த அழுத்த நிலை சம நிலையடைய வாய்ப்புண்டு.
Image result for oral hygiene


மேலும் இந்த எண்ணெய் விட்டு நீரான திரவத்தை தொடர்ந்து ஒரு செடி மேல் துப்ப ஆரம்பித்தீர் என்றால் அந்த செடி சில நாளிலேயே கருகி உயிர் விட்டிருப்பதைக் காணலாம். அந்த திரவத்தில் அவ்வளவு விஷமிருக்கும்.

நல்லெண்ணெய் கொப்பளிக்காமல் மவுத் வாஸ் செய்வாரும் உண்டு. அதை எல்லாம் நாம் இங்கு குறை சொல்ல முனையவில்லை. அது அவரவர் விருப்பம்.

இந்த எண்ணெய்க் கொப்பளிப்பு காலை மட்டும் செய்தால் போதும், இரவுப் படுக்கைக்கு முன் செய்யவேண்டியதில்லை. பல் துலக்கினாலே போதுமானது.

இப்படி எல்லாம் செய்வதுதான் பல் துலக்கி வாய் சுத்தம் செய்வதன் முழு செயல்பாடு முழு பயன்பாட்டை உடல் சுகாதாரத்திற்கு கொடுக்கும் . அல்லாமல் முறை தவறி வாய் சுத்தமின்றி பல் துலக்கத் தெரியாமல் நாடெங்கும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். நீங்கள் தெரிந்து கொண்டு பயன் அடைய, பிறர்க்கும் சொல்லி பயனடைய வைக்க வாழ்த்துகள்.

Image result for oral hygieneImage result for oral hygiene

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: இந்தப் பதிவின் தொடர்ச்சியாக, அடுத்து ஆசன வாய்ச் சுத்தம், நிறைவான நடைப்பயிற்சி பற்றி இனி வரும் நாட்களின் பதிவு தொடர்ந்து இருக்கும். பயன் பெறுக.

நன்றி.
வணக்கம்.

2 comments: