Monday, October 16, 2017

உலக உண(ர்)வு தினமாமே? பித்தலாட்ட அரசுகளும், பொறுப்பற்ற குடி மக்களும்: கவிஞர் தணிகை

உலக உண(ர்)வு தினமாமே? பித்தலாட்ட அரசுகளும், பொறுப்பற்ற குடி மக்களும்: கவிஞர் தணிகை

Image result for shame very shame

அக்டோபர் 16 உலக தினம் என்றும் இந்தியா உலகப் பட்டினிப் பட்டியலில் 117 நாடுகளின் வரிசையில் 100வது இடத்திலும் இருக்கிறது என்றும்,சுமார் 50% கர்ப்பிணிப் பெண்களுக்கு சரியான கவனிப்பு இன்றி ஆண்டுக்கு 3 இலட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்பதும் சுமார் 15லிருந்து 16 கோடி பேர் உலகெங்கும் வறுமையில் மடிந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் உலகை மகிழ வைக்கும் செய்திகள்...பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்னும் சொல்லுக்கேற்ப...

வீர சிவாஜிக்கு மராட்டியத்தில் உலகிலேயே மாபெரும் உயர சிலை  4000 கோடியில் அமைப்பதும், படேலுக்கு குஜராத்தில் சுமார் 3000 கோடி செலவில் அமைப்பதும் மாபெரும் சாதனைகள் என பாரதிய ஜனதா அரசு பறை சாற்றி வருகிறது.

இங்கே படித்த இளைஞர் எவருக்கும் இந்தியாவில் அங்கீகாரமோ பணிக்குத் தக்க ஊதியமோ இல்லை. ஆதார் கார்ட் இணைக்கப்படாததால் ரேஷன் பொருட்கள் வழங்காமல் வறுமையில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தபடி இருக்கின்றன.

இன்னும் எமது தமிழ் நாட்டு விவசாயிகள் வங்கிக்கடனை தள்ளுபடி செய்யச் சொல்லி டெல்லியின் போராட்டக் களத்தை விட்டு திரும்பவேயில்லை

அமெரிக்கா இன்னும் விவசாய நாடு, டென்மார்க் நல்ல வாழ்வின் வளத்தில் உலகின் முதல் முன்னணி நாடாக விளங்கி வருவதும் இன்னும் விவசாய நாடு என்னும் அடையாளங்களை வானுயர உயர்த்திப் பிடித்துக் காட்டிக் கொண்டு இருக்கையில் இங்கே இந்தியா வறுமைப் பிடியில் தம்மைத் தள்ளியபடி விவசாயத்தையும் அழித்து வருவது எதிர்காலத்தை பயக் குழியில் வீழ்த்தி ஏழை மக்களை விவசாய மக்களை மரண குழியில் வீழ்த்துவதாகும்.

உலக உணவு தினம் என்ற நாளில் இந்தியாவில் திண்டாடி வரும் வறுமையில் தள்ளப்பட்டு வரும் படித்த இளைஞர்களை இந்தியாவின் மாபெரும் மக்கள் தொகையுள்ள சக்தியை கணக்கில் கொள்ள வேண்டும்...

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கிழக்கிந்திய நாடுகள், எண்ணெய் வள நாடுகள் அனைத்திலுமே இந்தியர்களை அந்த நாடுகளில் பணிக்குச் சென்றுள்ள நம் இளைஞர்களை அந்த அந்த நாட்டுக்காரர்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டனர் அவர்கள் வாய்ப்புகளை பிடிங்க வந்திருக்கும் பேய்களாக...

இந்நிலையில் உலகெங்கும் போய்க் கொண்டிருக்கும் நம் இளைஞர்களுக்கு எங்கும் பணி கிடைக்காச் சூழல் ஏற்பட்டால், அல்லது துரத்தி அடிக்கப்பட்டால் நிலை என்ன ஆகும் என யோசித்துப் பார்க்காத அரசும், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத அவற்றை மாற்ற நினைக்காத பொறுப்பற்ற குடிமக்களும் எதிர்கால இந்தியாவின் அபாய விஷக்கிருமிகள்...

ஏன் எனில் இப்போது  ஒரு தச்சர், ஒரு கருமான், ஒரு கொல்லன், ஒரு கட்டடத் தொழிலாளி கட்டளையிட்டு ஒரு நாளுக்கு தாம் விரும்பும் கூலி பெற அமைப்பு இருக்கிறது. அதை வாங்கி உடனே திருப்பி மதுபானக் கடையில் அரசுக்கே செலுத்த மதுபான அமைப்பு அரசு இருக்கிறது. அவர்கள் பாடு தேவலாம்...

ஆனால் படித்த இளைஞர்கள் நாடெங்கும் கேள்விக்குறி எழுப்பி வருகிறார்கள்.
Image result for shame very shame
முதுகலை பட்டம் படித்தவர்கள் ரூபாய் 4000க்கும் இரண்டாயிரத்துக்கு வேலை கிடைத்தால் மகிழ்வடைகிறார்கள், மருத்துவருக்கும், தொழிற்கல்வி படித்தோருக்கும் கூட வேலை கிடைப்பது அரிதாகிவிட்டது. தனியார் அமைப்புகள் கல்விக்கூடங்கள் அவர்களை உறிஞ்சத் துவங்கி பல காலம் ஆகிறது. பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் இரண்டாயிரம் கிடைத்தால் அதிகம் என்று பணிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். படித்து விட்டு சும்மா எப்படி இருப்பது என...

இந்த நாட்டில் மத்திய மாநில அரசுகள் தனியார், மற்றும் அரசுப் பணியாளர்கள் அனைவர்க்குமே அவர்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் மாத ஊதியம் 15,000 முதல் 20, 000 வரை நிர்ணயித்து வழங்கும் ஆணை பிறப்பிக்காமல் இருப்பதே அந்த அரசின் கீழ்மையை காண்பிக்கிறது. எப்படி ஒரு பெண்ணோ ஆணோ, மாதமொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாயில் தனி மனிதராக இருந்து கூட வாழ்வு நடத்த முடியும், உண்ண முடியும், உடை உடுக்க முடியும், தங்கி வீட்டில் இருக்க முடியும், மருத்துவம் பார்க்க முடியும், பயணம் போக்குவரத்து எல்லாம் போய் வர முடியும்?  இதை எல்லாம் எண்ணிப் பார்க்காத அரசு சாதனைகளை நிகழ்த்தி உலக அரங்கில் உயரப் பார்க்கிறது.

விவசாயிகளின் நலனை புறந் தள்ளி விட்டு , விலைவாசி உயர உயர சென்று கொண்டிருக்க ஊதியத்தை அதுவும் அரசுப்பணியாளர்களுக்கு மட்டும் உயர்த்திக் கொடுத்தபடி , தனியார்மயம், தாராளமயம், உலக மயம் என்று அதே ஒரே வழியில் சென்று கொண்டு எப்படி சீர்திருத்தம் செய்து எப்படி எல்லா மக்களுக்கும் உணவளிக்க முடியும்?

இதில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தில் முழுத் தோல்வி, அந்நிய நாட்டில் வைக்கப்பட்ட இருப்புத் தொகை மீட்டு வரலில் முழுத் தோல்வி, எல்லாத் திட்டங்களுமே மக்கள் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஊழல் செய்யவில்லை என்று முழுப்பூசணியை சோற்றில் மறைத்தபடி அரசாண்டு கொண்டு ஏமாற்றி வருவது எப்படி நியாயம்? மத்திய   சரக்கு விற்பனை வரி இந்தியா எல்லாம் ஒன்றே விலை குறையோ குறை என்று குறைந்து விடும் என்று மனிதர் உண்ணும் உணவுக்கு வரி போட்டு மக்களை வதைத்து வரும் இந்தக் கொடுமையை, இந்த அரசை, இதை மாற்றியே ஆக வேண்டும் இல்லையேல் இந்த ஆட்சி மறுபடியும் வந்தால் வெட்கம்.

மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா? பொது இடத்தில் எப்படி பழகுவது? ஒழுக்கம் கடைப்பிடிப்பது? போக்குவரத்தில் இரண்டு ஆள் அமரும் இருக்கையில் ஒரே ஆள் எப்படி அமர்ந்து மற்றவர்க்கு இடம் அளிக்காமல் அரசு ஓட்டை வண்டிகளில் பயணிப்பது,,,, அந்த ஓட்டுனர் ஏற்றிச் செல்லும் அரிசி பருப்பு எண்ணெய் மூட்டை டின்களுக்கு சரக்கு லக்கேஜ் கட்டணம் போடாமலும் பயணியர் கொண்டு வரும் பொருளுக்கு லக்கேஜ் தவறாமல் வாங்குவதுமாக  அதை எல்லாம் எவருமே தட்டிக் கேட்காதாரக...நாட்டுக்கு சேவை செய்வார் பேருந்து பயணத்தில் செல்லும்படியும், நாட்டை அரசியல் என்ற பேரில் குட்டிச் சுவராக்கிடும் அரசியல் வியாதியை புதிய இனோவா காரிலும் பயணம் செய்ய வாய்ப்பளித்த இந்த நாடும் மக்களும்....

Image result for shame very shame

மகா வெட்கம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

2 comments:

  1. மிகவும் அருமையான சமுதாய அக்கறை கொண்ட பதிவு.

    ReplyDelete
  2. thanks for your feedback on this post veka nari. vanakkam.

    ReplyDelete