Saturday, October 14, 2017

எதுவும் கடந்து போகும் இதுவும்: கவிஞர் தணிகை

எதுவும் கடந்து போகும் இதுவும்: கவிஞர் தணிகை

Related image


குளித்தலை நீர்வழிச் சாலை கருத்தரங்குக்கு செல்லும் வழியில் சேலத்தில் வழக்கறிஞர் நண்பர் ஒருவர் காரில் பிரபாத் தாண்டி சென்று கொண்டிருந்தோம் திரும்பிப் பார்த்தேன் ஒரு சந்தின் முனையில் "சிந்தனையாளர் அர்த்தனாரி" மறைவு குறித்து ஒரு போஸ்டர் சொல்லியது, மறுபக்கம் நான் அடிக்கடி சென்று புழங்கிய அன்பு சகோதர நண்பர் கொ.வேலாயுதம் அவர்கள் வீட்டில் நாங்கள் தமிழக இலட்சியக் குடும்பங்கள் இயக்கம் நடத்தியபோது பயன்பட்ட அலுவலக அறையின் மேல் அந்த போர்டு மட்டும் பழமையை எனது பழைய எண்ணங்களுக்கு பறை சாற்றியபடி இன்னும் அகற்றப் படாமல் மாட்டியே இருந்தது.

தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் குரல் ஒன்றும் அப்படிப்பட்ட காந்தக் கவர்ச்சி உடையதெல்லாம் அல்ல ஒரு எளிமையான கரகரப்புடைய குரல் ஆனால் அவரை எனக்கு பரிச்சயம் குரல் வழி மட்டுமல்ல, எனது புதுப் புத்தக வெளியீடும் அவருடையதும் ஒரு முறை தினமணி வார மலரில் ஒன்றாக வந்திருந்ததும் இருவருடைய புத்தகங்களும் அட்டைப் படத்துடன் வெளியிடப்பட்டிருந்தது.

 மனிதர் சொல்லும் சம்பவங்களில் பேசும் பேச்சில் இயல்பாகவே ஒரு நகைச்சுவை இழையோடும் கடைசியில் ஒரு முத்தாய்ப்பு முடிவில் ஒரு செய்தியை நமக்கு சொல்லாமல் சொல்லி விட்டுச் செல்வார் அதன் எண்ண அலைகள் வெகு நேரம் மிதந்தபடியே இருக்கும். அவர் சொல்லிய செய்தியிலும் ஒரு தோற்ற ராஜாவின் கடைசியாக நினைத்த பாறை விளிம்பின் பயணமும் எதுவும் கடந்து போகும் இதுவும்கடந்து போகும் என ஒரு துறவி இவருக்கு எங்கிருந்தோ வந்து அங்கும் நீதி சொல்லி தேற்றி அதன் பின் அந்த பாறை விளிம்பில் நின்று உலகை விட்டே போகவிருந்த ராஜாவின் கதை திருப்பு முனைக்கு வந்து மறுபடியும் இராஜ்ஜியத்தை வென்று கைப்பற்றி நாடண்ட கதையும் .... இன்னும் குரல் ஒலிக்கிறது மனித அசைவுகள் நின்று விட்ட போதும்....

இப்ப எதுக்கடா தென்கச்சி சுவாமிநாதன் என்கிறீர்களா? ஆம் எல்லாமே கடந்து போகும் இதுவும் கடந்து போகும் என்ற கதைக்குத்தான். இன்னும் குரல் ஒலிக்கிறது மனித அசைவுகள் நின்று விட்ட போதும்....
Image result for everything passes this will too

 மலை வாழ் மக்கள் மேம்பாட்டுத்திட்டம் திட்ட அலுவலர் ,நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள், இப்போது கல்லூரி வாழ்க்கை. மக்கள் தொடர்பு அலுவலர்...தணிகைத் தொடர்....

சிந்தனையாளர் அர்த்தானாரிக்கு வயது 93. முடிந்தது வாழ்வும். இவர் எளிய வெண்ணிற ஆடையை மட்டுமே அணிவார். அனைவருமே இவரை பேசச் சொல்லி அழைத்தால் இவர் கைக்காசை செலவளித்தும் வந்து சேர்ந்து கொள்வார், பேச்சில் பண்டம், எல்லா துக்கஙக்ளையும் துடைத்து விடும் சக்தி படைத்த ஒரே கடவுள், ஒரே பிரார்த்தனையும் உண்டா என்பார்? வாடிக்கையாக. சிறு அளவில் நன்கொடையும் கொடுப்பார் நிகழ்ச்சிகளுக்கு.

 நாங்கள் சுமார் ( சரியாகச் சொன்னால் 1982‍ ,83லிருந்து) 80களிலிருந்தே பொதுவாக ஒரே மேடையை பல முறை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவரின் மகன்கள் எல்லாம் சேலத்தில் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள், ஓ.பி. டெக்ஸ், ஓ.பி குழுமம் என ஒரு முறை அவரது மகன் வீட்டில் கூட ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.

இவர் நங்க வள்ளியில் எளிய வாழ்வை வாழ்ந்து வந்தார். ஆனாலும் இவரிடம் போலித்தனம் இருந்தது என்பதால் எங்கு நாங்கள் இருந்தாலும் மோதிக் கொண்டே இருப்போம் கருத்து மோதல்கள்தான். கம்யூனிஸ்ட் என்பார் ஆனால் எல்லா மேடையிலும் பார்க்கலாம். இவருக்கு திருச்சி மாநாட்டில் அப்போது அந்த இயக்கத்துக்கு பேர் காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம்..சசிபெருமாள், சின்ன பையன் இப்படி எல்லாமே அடுத்த படியில் இருப்பவர்கள்... இவருக்கு காந்திய மாமனிதர் என்ற ஒரு பட்டம் கொடுக்கலாம் என கூட்டம் தீர்மானம் போட... நான் கடுமையாக எதிர்த்தேன்...

இவர் என்ன காந்தியம் செய்திருக்கிறார் எனப் பட்டியல் இடுங்கள், ஆய்வுக்கு வைப்போம் அதன் பின் பட்டம் கொடுப்போம் என்று நான் வெகுண்டெழுந்து குரல் எழுப்பிய உடன் அவருக்கு உடனே கோபம் வந்துவிட்டது என்னை மரியாதைக் குறைவாக அவன், இவன் என ஏக வசனத்தில் பேச ஆரம்பித்து விட்டார்....

Image result for everything passes this will too

ஆனால் அவருக்கு அந்தப் பட்டம் கொடுக்கப்படவில்லை. நெடு நாட்கள் நான் இயக்கம் பக்கம் தலைவைத்துப் பார்க்காமலிருக்க...தலைமையும், நண்பர்களும் என்னை மறுபடியும் பொறுப்பேற்க வற்புறுத்தினார்கள்...ஏன் இப்படியும் இருக்க முடியுமா இவ்வளவு நாள் தொடர்பு கொள்ளாமல் என ஏங்கினார்கள்...அந்த சம்பவத்திலிருந்து அர்த்தனாரி வருவதில்லை என்றும் சொன்னார்கள்... நீங்கள் சொல்லியது சரிதான்...ஆனால் அந்த வேகமும் கோபமும் யாராலும் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது என்றார்கள். அதுதான் உண்மையின் வலிமை .

எனது முதல் நூலான "மறுபடியும் பூக்கும்" என்ற நூலை எந்தவித வெளியீட்டு விழாவும் எவரின் முன்னுரை, அணிந்துரை இன்றியும் வெளியிட்டு கையில் எடுத்துக் கொண்டு நாயாய் பேயாய் அலைந்து விற்பனை செய்து கொண்டிருந்தேன். ஜலகண்டாபுரத்தில் குன்றக்குடி அடிகளார் கூட்டம் ஒன்று அவரை தனியாக ஓட்டலில் சந்திக்க அழைத்தார்கள் அதையும் மறுத்தேன் ஏன் மறுத்தேன் என்ற காரணம் எனக்கு இப்போதும் விளங்கவில்லை. ஆனால் ஏதோ பிடிக்கவில்லை என்பது மட்டும் நினைவில் இருக்கிறது. எனது நூலை  பார்த்த மேட்டூர் தமிழாசிரியர் கோ.பெ.நாராயணசாமி என்பார் மேட்டூர் தமிழ் சங்க விழா நடக்கிறது  அதில் உங்கள் தமிழ் நூலை வெளியிடலாம், விழாவுக்கு நீங்களும் ஒரு சிறு தொகை கொடுங்கள்  அனேகமாக அது அன்று ரூ 500 ஆக இருக்கலாம்.
அதற்கு நாங்கள் புத்தகம் வாங்கி தொகையை ஈடு செய்து கொடுத்து விடுகிறோம் என்றும் போஸ்டரில் நூல் வெளியீடு பற்றி குறிப்பிட்டு  மேட்டூர் பொது ஜன சேவா சங்க பள்ளித் திடலில் தமிழ் சங்க விழா நடத்தினார்.  பல போட்டிகள் நிகழ்வுகள் எல்லாம் பட்டி மன்றம் எல்லாம் இருந்தன‌

தமிழருவி மணியன் அன்று சிறப்பு விருந்தினர். எனது நூலை வெளியிட்டார்கள் ஒரு பக்கம் சிந்தனையாளர் அர்த்தனாரி, மறுபக்கம் கோனூர் பெருமாள் இன்ன பிற நண்பர்கள். நூல் வெளியீட்டு உரையை எனக்கு அணிவித்த பொன்னாடையை மடித்து வைக்காமல்  சில வெளிநாட்டுக்காரர்கள் கூட்டத்தில் அப்படிச் செய்வதைப் பார்த்திருந்த நானும் அப்படியே செய்து உரையாற்றினேன். கவிஞர் தணிகை என்பார் அதிலிருந்தார்.

அந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1992 என இன்னும் அடையாளப் படுத்துகிறது அந்த நூலின் பிரதிகள்.

Image result for everything passes this will too

 சேலத்தில் தமிழ் சங்கத்தில் தமிழின் முன்னணிக் கவிஞர்கள் முன்னிலையில் வெளியிட முயன்றதற்கு அமைச்சர் ராஜாராமின் மூத்த சகோதரர் ஜெயசீலன் உதவினார். அவர் அப்போது கைப்பந்துக் கழகத்தின் புரவலர்....ஆனால் க.வை.பழனிசாமி என்னும் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் புரிந்த ஒரு கவிஞர் தடுத்து விட்டார்.

நிறைய நிறைய மனிதர்கள் சம்பவங்கள்...எல்லாம் கடந்து போய்விட்டன...இயக்க முறைகளில் மாவட்ட அளவில் பணி செய்த என்னை மாநில அளவில் எதிர்பார்த்த போது எனது அளவீடு எனக்கு விளங்கி இருந்ததால் அதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

கோவிலாக இருந்தாலும், இயக்கமாக இருந்தபோதும் தலைமைக்கு அடுத்த இடத்தை, அல்லது கபாலீஸ்வரர் கோவிலில் பொருளாளராக இருந்து கட்டியது போல... துணை நிலையில் இருப்பது என்றே முடித்துக் கொண்டிருந்தேன் அதன் பின் அடுத்த படியில் உள்ளவர்களுக்கு வழி விட்டிருந்தேன். ஆனால் பத்திரிகை , எழுவது , மேடையில் பேசுவது ஆகியவற்றில் முதல்வனாக இருந்தேன்...கவியரங்கமாக இருந்தபோதும் பேச்சு அரங்குகளாக இருந்த போதும், இன்குலாப் என்னும் சாகுல் அமீதை எல்லாம் அப்போது சந்தித்ததுதான். தி.க.வின் அருள் மொழியுடன் கூட அப்போது சக தோழனாக நின்று நடந்து பேசியது நினைவில் இருக்கிறது இருவருக்கும் பாரதி, பாரதி தாசன் பற்றிய உயரத்தில் வேறுபட்ட எண்ணக் கோணங்கள் இருந்த போதும்...

ஒருக்கால் ஒரு வேளை நானும் தலைமையை ஏற்று நின்றிருந்தால் மேலும் உயரத்தை தொட்டு சாதித்திருக்கலாம்தான்...ஆனால் உடலும் இன்று குடும்பத்துக்கு ஒரே மகனுக்கு ஆவது போல ஆக இருந்திருக்குமோ...நான் இருந்திருப்பேனா என்பது கேள்விக்குறிதான்...கெட்டுப் போன உடல் நலம் உடையவனாக இருந்ததால், அவ்வப்போது உடல் அச்சுறுத்தியபடியே பயமுறுத்தியபடியே இருந்ததால்...நான் இன்னும் இருக்கிறேன்....உதவியபடியே இருக்கிறேன். அதுவும் கூட நல்லதுதான் என இப்போது படுகிறது...

ஆமாம் பெரிய காந்தியாகத்தான் போறே? என்பார் எனது தந்தை... அது போல இந்த அர்த்தனாரியும் நானும் ஒருவரை ஒருவர் கத்தரிக்கோல் போல ஒட்டியபடியே வெட்டியபடியே இருந்தாலும் அந்த மனிதரின் இழப்பு என்னையும் பாதிக்கிறது ...எனக்கும் அவருக்கும் ஒரு துளி ஒற்றுமை இல்லாதபோதும் ...அவரும் தந்தை வடிவத்தைப் போல...பெரியாரும் அண்ணாவும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ...அந்த எடுத்துக்காட்டு இங்கு பொருந்துமோ பொருந்தாதோ? வேலாயுதம் நல்ல நண்பர், அன்றும் இன்றும் என்றும் என் மூத்த சகோதர நண்பர் அவருடன் என் வாழ்வு பயணித்த இயக்க காலத்தில் இவர் போன்ற நண்பர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் இவர் போன்ற நபர்களுடன் எல்லாம் நான் பயணம் வர வேண்டி நேர்ந்தது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. தங்களின் நினைவலைகளோடு நானும் பயணித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. thanks for your feedback on this post vanakkam

    ReplyDelete