பணக்கார இறைச்சலும், அரசியல்வியாதிகளின் குரைச்சலும்: கவிஞர் தணிகை
விவரமறியாத சிறுவயசு, யார் அதிகம் பட்டாசு வெடிக்கிறார்களோ அவர்கள் பணக்கார வீட்டுக்காரர்கள் என்று எண்ணுவார்கள், வயசு கூடக் கூட பணக்காரர்கள் என்பார் மீது இருந்த பார்வை முற்றிலும் மாறிப் போயிற்று.
பணக்காரர்கள் என்றால் பெரிய ஆட்கள் என்ற எண்ணம் மாறி எந்த அளவுக்கு பணமும், வீட்டின் அடையாளமும் காரும், வாகனங்களும், சொத்தும் இருக்கிறதோ அந்த அளவு அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள், அந்த அளவு அரசை மட்டுமல்ல சமுதாயத்தை பொது மக்களை அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள், அந்த அளவு அரசின் கொள்ளைக்காரர்களோடு கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் என்றெல்லாம் பொருள் தெரிய ஆரம்பித்து விட்ட காலம்....
அது போல ஆனால் அதை விட அதிகமாக அரசியல் வியாதிகள் அதில் உள் கருவாக பணி புரிவோர், மக்கள் பிரதிநிதிகள் அரண்மனை வாழ்வும், கணக்கிலடங்கா சொத்துகளும், பினாமிகள் பேரிலும் அன்டர் கிரவுன்ட் வாழ்க்கையும் அவர்கள் தூய்மை எத்தகையது எனப் புரிய ஆரம்பித்து விட்ட காலம்...
மாநிலத்திலும் மத்தியிலும், காங்கிரஸ் சரியில்லை, என காமராசரால் கே பிளான் கொண்டு வரப்பட்டு அது நேருவால் பாராட்டப்பட்டு கட்சியில் பதவி இருப்பார் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது, அரசுப் பதவியில் இருப்பார் கட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என தாமே முதல்வர் பதவியிலிருந்து விலகி அனைவர்க்கும் வழிகாட்டினார் காமராசர். நேருவே அந்த கட்டுப் பாட்டு வளையத்திற்கு கட்டுப் பட்டு பாராட்டினார்.
ஆனாலும் காங்கிரஸ் வீழ்ந்தது, மாநிலத்தில் தி.மு.க தோன்றியது உதய சூரியன் சின்னத்துடன், மத்திய ஆட்சியில் ஜனதா, ஜனதா தள், கூட்டணி ஆட்சிகள், இப்போது பாரதிய ஜனதா கட்சி என மாறி விட்ட போதிலும் மக்களின் நிலை மகாத்மா சொல்லியபடி எண்ணியபடி மாறுவதற்கு மாறாக கீழ் தரத்துக்குப் போய்விட்டது கடந்த 70 ஆண்டுகளாக இறங்கியபடியே வந்து கொண்டிருக்கிறது.
அவர் அப்போதே சொன்னார் விடுதலை பெற்றவுடன், அரசு அமைக்கும் காங்கிரஸ் அமைச்சர்களைப் பார்த்து நீங்கள் அணிவது முள் முடி...பொருளாதார ஆசைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்றார்.அனைவரும் சிக்கிக் கொண்டனர். நாடும் சிக்கிக் கொண்டது
தேர்தல் காலத்தில் வாக்குக்கு பணம், பிரியாணி, மது, பேரம், வாக்கு வங்கி சாதி என சிக்கிக் கொண்டது.இப்போது மதம் என்ற் போதையிலும் சிக்கிக் கொண்டது.
எந்தவித சிந்தனையுமின்றி மதுபானக் கடைகளை அரசே நடத்தி மக்களின் காசை கையை விட்டு பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொள்வதுடன், அவர்களை சிந்திக்க விடாமல் செய்து மடையர்களாக, விலங்குகளாகவே வைத்து நாடு, தலைமை, ஆட்சி, அரசு, கட்சி நாடகங்கள் என நடத்தி வருகிறது எல்லாமே புரிந்து போனது
இதில் எல்லாம் இல்லாமல் தூய்மையாக அல்லது தவறுகளை, குறைவாக செய்து அல்லது குறைவாக ஏற்றுக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது.
அதுவும் விவேகானந்தர் தியானம் செய்வாரின் எண்ணிக்கை இலட்சத்தில் ஒருவருக்கே அந்த வேட்கை இருக்கும் என்று சொல்வாரே அது போல, அது இப்போது கோடிக்கணக்கான மக்களில் ஒருவருக்கே அது போல எண்ணம் தோன்றும் என்பது போல நாட்டை சரி செய்ய வேண்டும், அதுவும் எந்த வன்முறையும் நிகழாமல் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பார் மிகக் குறையாகவே இருப்பார்.
ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பேரில் நடப்பதை வேறு வேறு முறைகளில் மாற்றி விடலாம் என்று போராடும் சிறு குழுக்கள் எல்லாம் தமது வேறுபாடு மறந்து எப்போது வெகு ஜன நீரோட்டத்தில் சேர்வது எப்போது இந்த நாட்டுக்கும் தேவையான மக்களுக்கும் நேர்மையான வழியில் ஆட்சியும் அதிகாரப் பரவலும் மக்களுக்கான ஆட்சியும் நன்மைகளும் கிடைப்பது என்றுப் பார்த்தால்...அருகே வர உயிர் கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. ஊடகத் துணை தமன்னாவுக்கும், ஹன்சிகாவுக்கும் அரைப்பக்கம் ஒதுக்கி வருகிறது. ஆக்க பூர்வமான நிகழ்வுகளுக்கு ஒரு மூலையில் யாரின் கவனத்தையும் கவராத வண்ணம் இடம் கொடுக்கிறது. பல பத்திரிகைகள் அப்படி கூட இடம் கொடுப்பதுமில்லை.
எப்படியாவது புறப்பட்டேயாக வேண்டும்... புது எழுச்சி...எங்கிருந்தாவது...யார் மூலமாவது... நம் மூலமாவாது...
பலிகடாக்களை விட களப்பலிகள் அதிகம் தேவைப்படும் என நினைக்கிறேன்.
இனியும் ஒரு எழுச்சி தேவைப்படுகிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எழுச்சி தேவைத்தான படுகிறது
ReplyDeleteநன்றி நண்பரே
thanks for your feedback on this post vanakkam.
Deleteபணக்கார இறைச்சலும், அரசியல்வியாதிகளின் குரைச்சலும்: கவிஞர் தணிகை - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam
ReplyDeletethanks for your sharing of this post and comment sir. vanakkam. please keep contact
Delete