Sunday, October 29, 2017

முடக்கு அறுத்தான் கீரை: கவிஞர் தணிகை

முடக்கு அறுத்தான் கீரை: கவிஞர் தணிகை

சித்த மருத்துவத்தில் வாதம் கபம் பித்தம் என மூன்று வகையான உடல் இருப்பதைப் பார்த்து அதற்கேற்ற மருந்து கொடுப்பார்கள் மருத்துவர்கள்.

வாதம்  என்பதில் இணைப்புகள், மூட்டுகள் , வாயுப் பிடிப்புகள் என கை கால்கள் மற்றும் உடல் உறுப்புகளை செயல் படாமல் வைத்து விடும் வியாதி வாதம் எனப்படுகிறது.

கபம் என்றாலே ஆஸ்த்மா, சளி,  குளிர் போன்றவற்றால் பாதிக்கப்படும் உடல் நிலை

பித்தம் என்பது பித்த நீர் சுரப்பு, உடல்கிறு கிறுப்பு வந்து தலை சுற்றல், எடுத்துக்காட்டாக நிலக்கடலை சாப்பிட்டால் சிலருக்கு பித்தம், வாந்தி, குமட்டல் போன்றவை இருக்கும் இதற்கு நிலக்கடலை சாப்பிடும்போதெல்லாம் பனை வெல்லம் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்பார்கள் ஏன் எனில் அதில் இருக்கும் சுண்ணாம்பு சத்து அதை ஈடுகட்டி விடும்

இப்போது இதைப் பற்றி எல்லாம் பேச இந்தப் பதிவில்லை. முடக்கு அறுத்தான் கீரை பார்த்திருக்கிறீர்களா?

நான் வேப்ப இலை, கற்பூரவல்லி ...ஓமவல்லி, கொய்யா இலை மற்ற மூலிகைகள், சப்போட்டா அரைத்துக் குடிப்பது, இப்படி உள்ளுக்கு சாப்பிடும் ஆவாரை, வில்வம், இனிசுலின் யாவற்றையுமே மென்று சாப்பிடும் ஆட்டுக் குட்டி இனத்தைப் போன்றவன்

விஷத்தையே கொடுங்கள் குடித்துப் பார்த்துவிட்டு ருசி எப்படி இருக்கிறது எனச் சொல்லி விடுகிறேன் என பெருமை பேசித் திரிபவன்.

அதே போல எதுவாக இருந்தாலும் கொஞ்சம் ருசி பார்த்து விடுவது என்பதில் குறியாக இருப்பவன். ஆனால் அதற்காக பீடி, சிகரெட், மது, கள், சாரயாயம் எல்லாம் என்று நினைத்துக் கொள்ளாதீர். உட்கொள்ளும் மருந்துப் பொருட்களைப் பற்றி மட்டுமே இங்கு பேசுகிறோம்.
Related image




அப்படிப்பட்ட எனக்கு இந்த முடக்கறுத்தான் கீரையை அரைத்து சட்டினியாக சாப்பிட்டாலும் கசப்பு அதிகமாக நாக்கை கெடுக்குமளவு இருக்கிறது என இன்று வணக்கி கீரையாக சோற்றில் வைத்து சேர்த்து சாப்பிட்டுப் பார்த்தேன் அப்போதும் அது மிகவும் கசப்பாகவே இருக்கிறது.


Related image

எனவேதான் அரிசி மாவு போன்றவற்றில் போட்டு அரைத்து தோசை, இட்லி போன்றவற்றில் போட்டு சாப்பிட்டுவிடுகிறார்களாம். இது மூட்டு வலிக்கு நல்ல  மருந்து. அதுவும் எங்கள் வீட்டில் முருங்கைக் கீரை ஒரு பக்கம் செய்தபடி இது வேறா என இலையை மட்டுமல்லாது இதன் கொடித்தண்டையும் சரியாக பிய்த்தெடுக்காமல் போட்டு செய்து விட்டார்கள்...ஆகா ஒரே கசப்பு போங்கள்...

ஆனால் கசப்புதான் நல்லதாமே...

Related image


இனிப்பு தான் கெட்டதாமே...அஸ்காவுக்கு விலை ஏற்றினால்தான் என்ன இரு மடங்கு ...பாரதிய ஜனதா அரசுக்கு , தமிழக அரசுக்கு மக்கள் மேல் எவ்வளவு நல்ல எண்ணம் தெரியுமா இல்லையெனில் இந்த ரேசன் அஸ்காவுக்கு 13.50 ரூவிலிருந்ததை 25க்கு ஏற்றியிருப்பார்களா? எல்லாம் மது சுலபமாக தேடாமல் உடனடியாக டாஸ்மாக் அரசுக் கடைகளில் கிடைக்க வேண்டும் என்பது போன்ற நல்ல எண்ணம்...யாருக்கும் சர்க்கரை வியாதி வந்து விடக்கூடாதல்லவா? அஸ்காவில் இருப்பது பெரும்பாலும் கரி மேலும் கெமிகல்தானே...உங்கள் உடல் நலம் கெட்டுவிடக்கூடாது என்றுதான் அதை அரசு செய்திருக்கிறது. எதை செய்தாலும் அவர்களை அரசை குறை சொல்லக்கூடாது அன்பர்களே. திட்ட வேண்டாம். சிகரெட் விலை ஏறட்டும், மது விலை எகிறட்டும், அது போல அஸ்காவின் விலையை ஏற்றி நாட்டுச் சர்க்கரை பனைவெல்லம், நாட்டு வெல்ல விலையை எல்லாம் குறைக்கட்டுமே...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. வாதம், கபம் ,பித்தம் இது மூன்றுக்குத்தான் ஒரு காலத்தில் வைத்தியம் பார்த்தார்கள்
    இன்றோ புதிது புதிதாய் நோய்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. கத்திரிக்காய் போட்டு காரக்குழம்பு வைத்தாலும் நல்லா இருக்கும் சகோ. விரைவில் பதிவிடுகிறேன். எங்க வீட்டுல நிறைய இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post amma. vanakkam. please keep contact.

      Delete
  3. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete