Sunday, October 1, 2017

ஸ்பைடர் கருப்பன்: இரண்டு சினிமாவின் இரண்டு பக்கங்கள்: கவிஞர் தணிகை

ஸ்பைடர் கருப்பன்: இரண்டு சினிமாவின் இரண்டு பக்கங்கள்: கவிஞர் தணிகை
Related image


ஸ்பைடர்: 27.09.17ல் வெளியான இந்தப் படத்தை எவருமே பார்க்கலாம். முருகதாஸின் படம் நன்றாக வந்திருக்கிறது. மகேஷ்பாபு உணர்வுகளைப் பிரதிபலிக்காத அந்த முகம் எதற்கு என்று கேட்கலாம். ஆனால் இதற்கு என்று பொருந்தும்படியாக முருகதாஸ் பயன்படுத்தி தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிலுமே நன்றாக கல்லா கட்டி விடுவார் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்

பரத்தை சிறிது நேரம் பயன்படுத்தி இயக்குனர் எஸ்.ஜே.சூரியா பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். அந்த சிறுவன் உணவில்லாத காரணத்தை மையப்படுத்தி பிற மனிதரைக் கொன்றால்தான் தமக்கு உணவு கிடைக்கும் என்ற வாய்ப்பை பயன்படுத்தி முதலில் உணவுக்காக கொலை செய்கிறான் அதுவே காலப்போக்கில் பிறரின் அழுகை, துன்பம்,அவனுக்கு சிரிப்பாயும் மகிழ்வாயும் ஆகி ஒரு சேடிஸ்ட்டாக அதாவது ஒரு குரூரமான மனிதனாக மாறி பிறர் துன்பத்தில் இன்பம் காண்பானாகி எண்ணிலடங்கா கொலைகளுக்கு காரணமாகிவிடுகிறான் . அதே குரூரமான இளைஞர் தமது சகோதரன் கொலை செய்யப்படும்போது வருத்தப்படுகிறான், கண்ணீர் சிந்துகிறான் அதற்கு பழி வாங்கவும் கொடுரூமாக முற்படுகிறான்.

ஆனால் இதிலிருந்து எல்லாம் துன்பப்படுவாரை காப்பாற்ற முனையும் பாத்திரம் மகேஷ்பாபுவுக்கு, தமிழுக்கு இது புதுவிதமான கதை. படம் முடியும்வரை நாம் வேறு எதிலும் கவனம் செலுத்தாதபடி ஆர்வமாய் பார்க்கத் தூண்டும் படம். மகன் சொன்னான் இது ஆங்கிலப்படத்தின் ஸ்பைடர்மேன், பேட்மேன், சூபர்மேன் போன்றவற்றின் பாதிப்பு  பதிப்பு என.

எது எப்படி இருந்தாலும் இது போன்ற வேலைக்குத்தான் போவேன் என்ற கதாநாயகன் நம்மை படம் பார்க்க வைக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூரியா பாத்திரம்தான் மையமாகி நின்று படத்தை வேகமாக நகர்த்துகிறது. மேலும் அவர் பலம் பொருந்திய மாபெரும் தனிமனித வில்லனாகி இருக்கிறார். அனாயசமாக கொடுத்த பாத்திரத்தை உயிர் கொடுத்து நிறைவு செய்துள்ளார்.

120 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் முதல் 2 நாளிலேயே 72 கோடி பணத்தை எடுத்து விட்டதாக செய்திகள் உள்ளன.
ரகுல் பிரீத் சிங் அழகாக இருக்கிறார்.  நல்ல விறுவிறுப்பான படம்.
பார்க்காவிட்டால் ஒரு நல்ல படத்தை இழந்த உணர்வு வரலாம். எனவே மாறுபட்ட கதையுடன் தீவிரமான வேட்கையுடன் நல்ல உழைப்புடன் முருகதாஸ் படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்லும்படியாக நிறைவு செய்கிறார் அனைவரிடமும் 4% இந்த சேடிஸ்ட் மனப்பாங்கு உள்ளது இது போன்ற மனிதர்களிடம் அது 15 % உள்ளது என்ற செய்தியுடன் கொடுத்துள்ளார். எனவே

நாம் இப்போது பெரும்பாலும் படங்களைப் பார்த்து விமர்சனமே தருவதில்லை. ஆனாலும் நல்ல படம் பற்றி சொல்லியேயாக வேண்டுமல்லாவா? அப்படி ஒரு நல்ல படமான குரங்கு பொம்மை படம் பற்றி கூட சொல்லாமல் விடுபட்டு விட்டது. எனவே நல்ல கதையுடன் இருக்கும் படங்கள் திருப்தி தருபவையாக அமைந்து விடுகின்றன. அவை நல்ல முடிவைத் தரும் என்று சொல்லவும் வேண்டுமா? நூற்றுக்கு 50 தாராளமாகத் தரலாம். நமது மறுபடியும் பூக்கும் வலைப்பூ படிப்பாரை படம் பார்க்கும் ஆர்வமுள்ளாரை இந்தப் படத்தை துணிந்து பார்க்க நம்பிக்கையூட்டுகிறது.

மற்றபடி இந்த படத்துக்கு பின்னணி நன்றாக இருந்தது, பாட்டு நன்றாக இருந்தது, ஒளிப்பதிவு நன்றாக இருந்தது , எடிட்டிங் அப்படி இப்படி என்று எல்லாம் சொல்லவே அவசியமில்லை...நிறைவான ஒரு படம்.வித்தியாசமான படம் என்றும் சொல்லலாம்.


கருப்பன்:
 ஒரு நடிகர் படம் ஓடுகின்றன என்றால் ஒரு நடிகருக்கு மார்கட்டு, ஒரு நடிகைக்கு மார்கட்டு இருந்தால் போதும் அவரை சலித்துப் போகச் செய்து நீர்த்துப் போகுமளவு செய்து விடுவார்கள் இந்த தமிழ் சினிமா உலகத்தார். அப்படி மக்கள் செல்வன் என்று பெரிய டைட்டில் கார்ட் போட்டு சேதுபதியை விஜய் சேதுபதியை மையமாக வைத்து இந்த கருப்பன் எதிலுமே ஒர் ஆழமின்றி ஜல்லிக்கட்டு, கிராமம், சூழ்ச்சி, பொருத்தமில்லா காதல், ஒட்டுதல் இல்லா வன்முறை என பெரிதும் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் நகர்ந்து செல்லும் படம். ஊர்ந்து செல்லும் படம் என்றும் சொல்லலாம் இதைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ஏதும் இழப்பு ஏதுமில்லை. நேரம் நகரவே படுத்துகிற படம்.

Image result for karuppan tamil movie


தன்யா, பாபி சிம்ஹா, பசுபதி, ரேணுகா, காவேரி, சிங்கம் புலி இப்படி எல்லாமே நடித்திருக்கிறார்கள். ஆழமாக இல்லாமல் எல்லாமே பார்த்து பார்த்துப் புளித்துப் போன காட்சி அமைப்புகள். ஜல்லிக்கட்டு, கிராமம், காதல் ,குடும்பம், குடி கூத்து, குத்தாட்டம் இப்படியாக எதிலுமே பெரிதாக ஆர்வம் ஏற்பத்தாத கருப்பன். எதையுமே எதிர்ப்பார்க்காமல் இருந்தால் கருப்பனிடம் ஏமாறவும் ஏதுமிருக்காது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: