Sunday, October 1, 2017

ஆடலுடன் பாடலைக் கேட்டேன் இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம் ஸ் ஆ ஸ் ஆ ஸ் ஆ....கவிஞர் தணிகை

ஆடலுடன் பாடலைக் கேட்டேன் இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம் ஸ் ஆ ஸ் ஆ ஸ் ஆ....கவிஞர் தணிகை
Related image


சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்காக நேற்று சேலம் 5 சாலைப் பகுதியிலிருந்தே இந்த ஸ் ஆ,ஸ் ஆ, நான் ஆணையிட்டால்...என சாலையெங்கும் பாடல் ஆடல் களியாட்டங்கள். கூட்ட நெரிசல், வாகன நெருக்கடி இதென்ன அரசு விழாவா? கட்சி விழாவா? சுமார் 50000 பேருக்கும் மேல் அரசின் மக்கள் நல உதவிகள் வழங்கப்பட்டதாகவும், கூட்டம் கூட்டியிருந்தனர் முதல்வர் மாவட்டம் என்பதால் ஒரு இலட்சம் பேருக்கும் மேல் கூட்டம் கூட்டியாகவேண்டும் என்ற இலக்குடன்.

4.45 அல்லது 5 மணி சுமாருக்கு விழா முடிந்து விட்டதாகவும் செய்தி, ஆனால் சுமார் 1 மணியிலிருந்தே மக்கள் பிரியாணி சோற்றுப் பொட்டலங்களுடன் நெரிசலில் சிக்கியதாக தப்பி வந்து எங்களது பேருந்தில் ஏறிக்கொண்டத் தொண்டர்கள் பேசிக் கொண்டார்கள்.

இன்னும் இப்படி எத்தனை நாட்கள் எம்.ஜி.ஆரை வைத்தும், எம்.ஜி.ஆரின்ன பாட்டை வைத்தும் ஓட்டப் போகிறார்கள்?  அதல்லாமல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஜெவின் ஆளுயரப் படம் எல்லா இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் இன்றைய முதல்வர் எடப்பாடியின் படங்களும் பன்னீருசெல்வத்தின் உருவப் படத்துடன்.

பேரறிஞர் அண்ணா பூங்காவில் முன்னால் முதல்வர் ஜெவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் நினைவு மண்டபங்கள் அமைக்க இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக செய்திகள்.

சிவாஜி மணி மண்டபத்தை ஓ.பி.எஸ் துணை முதல்வர் திறந்து வைக்க கமலும் ரஜினியும் கலந்து கொண்டுள்ளனர், முதல்வர் கலந்து கொள்ளாது தவிர்த்தது பற்றிய அரசியலும், பன்வாரிலால் கவர்னர் தமிழகத்துக்கு தனி ஆளுஞராக வந்ததும் நிறைய அரசியல்.

இன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் மீட்டிங், மற்றும் அக்டோடபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் எல்லாம் வாங்கி அணியுங்கள் என ஒரு பக்கம் மதுக்கடைகளை விட மாட்டோம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் அரசு வேதாளம் மந்திரம் ஓதியதைப் போல ஓதிக் கொன்டிருக்கிறது முதல்வரின் குரலுடன்.

மாவட்டம் வாரியாக அடுத்தடுத்து இந்த விழாக்கள் நடத்தி தம்மை தக்கவைத்துக் கொள்ள இந்த அரசும் முதல்வரும் முயன்று வருகிறார்கள். முன்னால் நாமக்கல்லில் நடந்தது, நேற்று சேலத்தில், அடுத்து தர்மபுரியில் இப்படி நாடெங்கும்.... தமிழ் நாடெங்கும்...

Image result for mgr centenary at salem

ஆமாம் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா நடத்தும் இதே அரசு இதே போல காமராசருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு, இன்னும் அரசாண்ட அத்தனை முதல்வருக்கும் நடத்துமா? இதெல்லாம் தேவையா என மக்களிடம் பரவலாக பேசிக் கொள்கின்றனர். மேலுன் தனியார்  கல்லூரி, பள்ளிகளின் அத்தனை வாகனங்களும் இந்த பெருவிழா நோக்கியே திருப்பி விடப்பட்டன.அரசின் நிர்பந்தம் இவர்கள் கட்சியின் பந்தம் விழாவாக....விழலுக்கு இறைத்த நீராக...அதில் இது போன்ற வாயும் வயிறுகளும் ஆடிப் பாடிப் பிழைப்பாரும் ஒரு நாள் வயிற்றை நிரப்பவும், மதுக்குடியில் ஆடிப்பாடவும்  சினிமாவை எம்.ஜி.ஆர் சினிமாவை அதன் பாடலை மறவாமல் மனப்பாடம் செய்து பாடி ஆடிக் கொண்டிருந்த வேடிக்கைதான் தமிழகத்தின் இன்றைய காட்சிகளாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment