சிரிப்பு வெடியா நெருப்பு வெடியா? ...கவிஞர் தணிகை
இராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி, எடப்பாடி பழனிசாமீ முதல்வர் இருக்கும் எடப்பாடியும், சேலமும்தான் இனி தமிழ் நாட்டின் தலைநகர், எம்.ஜி.ஆர் திருச்சிக்கு சென்னைத் தமிழ் நாட்டின் தலைநகரை மாற்றச் சொன்னது போல...இது எப்படி இருக்கு, அப்படி எடுத்துக் கொள்ளலாமா? ஒரு பேச்சுக்கு சொன்னேன்... நிர்வாக வெடி...
வழக்கம் போல நடைப்பயிற்சி ஆனால் நாளும் கோளும் நேரமும் திருவிழாப் பருவ காலமும் வெடிகளும் இடையுறுவதால் கொஞ்சம் நேரத்திலேயே சென்று திரும்பினேன், இருபக்கமும் வயல் வெளிகளும் பச்சையுமாய் இருக்கும் தார்ச்சாலை ஒரு குடிமகன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் அருகே சாலையிலேயே நிற்கவும் முடியாமல் ஆடியபடி தனது குறியை பார்த்தபடி இருந்தான், சிறு நீர் கழித்து விட்டான் என்றே நினைக்கிறேன், திருவிழா கருத்தில் நிறைய வாகனங்கள் ஆணும் பெண்ணுமாய் சுமந்தபடி,,,கத்தி எடுத்து அப்படியே.....இல்லை இல்லை நான் வன்முறையாளனாய் இல்லை, அவன் மது அண்ணன் பிடியில் இருக்கிறானாம். திரு விழா வெடித்திருவிழா...
அது ஒரு சாலை சந்திப்பு, இரண்டு அல்ல மூன்று காக்கிசட்டை அண்ணன் காவலர்கள், அந்தப்புறம் போகும் வாகனங்கள் எல்லாம் தயங்கியபடியே, அவர்கள் அவற்றை எல்லாம் தொந்தரவு செய்யாதபோதும்... பய வெடி, பய நெடி
குடிக்கக் கூடத் தண்ணீர் இல்லை என கூப்பாடு போட்டு வேண்டாத தெய்வம் எல்லாம் வேண்டி மகமாயி மாரி காளி எல்லாம் கண்விழித்து மழையும் பெய்து அணையும் முக்கால் பங்கு நிரம்பி இந்த வாரம்தான் தண்ணீர் ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறது ஆனால் தண்ணீர் போகும் பாதை எல்லாம் ஒரே விரயம் ஆங்காங்கே தொடர்பு ஏற்படும் வழிகளில் நீர்ச் சந்திப்புக் குழாய்களில் எல்லாம்...கேட்பாரின்றி.. பண்படாத மனிதர் திருந்தாத நிர்வாகம்...சீர்திருத்த வெடி...
தண்ணீர் வரும் குழாய்கள் சுற்றி ஒரே புதர்க்காடாய், செடிகளும் கொடிகளும் படர்ந்து கிடக்க, பாம்பு, பல்லி, ஓணான், பூச்சி இனங்கள் படையெடுக்க கவலைப்படாமல் சாயந்தரம் கரு இருட்டு வேளையிலும் குடி நீருக்கும் நீருக்கும் குடங்களுடன் நீர்க்குழாய்களை முற்றுகை இடும் பொறுப்பற்ற மக்கள்...அனுதாப வெடி...அக்கறை வெடி...
சாதரணமாக வங்கியில் பணம் போட்டு எடுத்து வந்து லெட்ஜரில் வரவு செலவு வைத்து ஆள் பார்த்து அனுதாபப் பட்ட வங்கிப் பணியாளர்கள் எல்லாம் புறம் தள்ளி கணினி வழியில் ஒரு புள்ளி தவறாகப் போனாலும் கணக்கையே முடக்கித் தள்ளும் வலைதளக் கணக்குகள்....படிக்காத பாமரனுக்கு ஏமாற்றுப் படிகள், சாவு வெடி...
வாட்ஸ் ஆப் வந்தாலும் வந்தது எப்பேர்ப் பட்ட செய்திகளையும் ஒரே நொடியில் அனைவர்க்கும் சேர்க்க....அறிவியல் வெடி...அதிலும் நில வேம்பு குடிக்காதே, குடி என்றும், தீபாவளியில் பட்டாசு வெடிக்காதே , வெடி என்றும் இரு வேறு துருவக் கருத்து வெடிகள்...குழப்ப வெடி.. வெடிக்காமல் இருப்பது போல் இருந்து வெடித்து விடப் போகிறது எச்சரிக்கையாக இருங்கள்
தீபாவளியின் மவுசு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது பற்றி மகிழ்ச்சி வெடி...ஒரே தித்திப்பூ...நெடி...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
ReplyDeleteஇனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
thanks for your feedback this post Raji...vanakkam.please keep contact.
Deleteவிதம் விதமான வெடிகள் .. வரிசைப்படுத்திய விதம் அழகு
ReplyDeleteonce again thanks madam. best wishes
Deleteஉண்மைதான் நண்பரே
ReplyDeleteஆண்டிற்கு ஆண்டு வெடிச்சத்தம் குறைந்து கொண்டேவருகிறது
thanks for your feedback on this post. vanakkam.
Delete