Sunday, May 21, 2017

ஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக:கவிஞர் தணிகை

ஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக:கவிஞர் தணிகை

Image result for vadivelu



மழையர் பள்ளி என்றும் தனியார் பள்ளி என்றும் வாகனத்திலும், குறைவான ஊதியத்தில் வேலைச்சுமையைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் ஆசிரியர் குலத்தை வைத்து ஆள் பிடிக்க வாராங்கப்பா ஆள் பிடிக்க வாராக!

அடுத்து இவக பள்ளிப் பிள்ளைகளை வேன் ப்ரீ, ஆயா ப்ரீ, என்று வாரிக் கொண்டு போன பின்னே ஓர் பள்ளியில் ஓர் மாணவனுக்கு 3 ஆசிரியர் இருக்கோம் என அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பக்கத்துப் பள்ளி மாணவ மாணவியரைக் கூட்டி அணி வகுப்பு ஊர்வலம் என நடத்தி ஆள் பிடிக்க பார்ப்பாங்கப்பா ஆள் பிடிக்க பார்ப்பாக..

கல்லூரி ஆசிரியர்களை களத்தில் இறக்கி இது இருந்தால் அது, அது இருந்தால் இது என கவுன்சிலிங்கிற்கும் கூட நாங்க எங்க செலவுல கூட்டிப்போறோம் பத்திரிகை பேட்டி போட்டி என அவர்களுக்கு எல்லாம்கமிசன் வெட்டி ஆள் பிடிக்கப் பார்ப்பாங்கப்பா ஆள் பிடிக்க பார்ப்பாக...

தரம் இருந்தால் தானா வாராக எதுக்கு இவ்வளவு கஷ்டம்? என்றால் அவகளும் பிழைக்க வேண்டாமா கார், ஏசி, என அவக பிள்ளைக வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனம், விமானப் பயணம் என ஆடம்பரமாக வாழ வேண்டாமா? அதை உங்களிடம் சொல்ல முடியுமா ?

இந்த நாட்டில் கல்வி, மருத்துவம், நிலம், நீர் , கட்டடங்கள், கட்டுமானங்கள் எல்லாமே பொதுவுடமை, அரசுடைமை ஆனால் மட்டுமே எல்லாம் உருப்படும் உருவாக்கப்படும். எத்தனை ட்ரஸ்ட்கள் எத்தனை ஏமாற்றுகள்...கல்லூரிகள் பல்கலைகள், கோவில்கள், சாமிகள், மதங்கள், சாதிகள், இனங்கள்....

2020ல் கலாமின் கனவு நிறைவேற இன்னும் 3 ஆண்டு கூட இல்லை. கலாமின் கனவுக்காலம் காலமாகிவிட்டது...

சரவண பவன் போன்ற நல்ல சுவையான தரமான உணவு தயாரித்துப் பரிமாறும் விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனம் எல்லாம் கூட அதிகாலை முதலே மனிதரை நிறுத்தி சீருடை கொடுத்து, குடை கொடுத்து அதில் கம்பெனி பேர் எழுதி, பதாகை கையில் கொடுத்து வாங்க வாங்க என அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்... வழியில் செல்வோரை வாகனத்தில் வருவார் போவோரை எல்லாம்...

 பசி இருந்தால் தேவையிருந்தால் தானாக வருவார்களே. எதற்கிந்த பிச்சைக்காரத்தனம் பழநியில் பஞ்சாமிர்தம் விற்க, பூஜை சாமான் விற்க, தங்க குளிக்க எல்லாம் ஒரு கூட்டம் ஈ மாதிரி மொய்க்குமே அது போல திருப்பதியில் லட்டுக்கும், பெண்பிள்ளை பிடிக்கவும் ஒரு புரோக்கர் கூட்டமும் அலை மோதுமே அப்படி,

சமயத்தில் கூட்டத்தில் பாக்கெட் அடிப்பார்கள், கூட்டத்தில் அலைமோதி தனியாய் வந்து பார்த்தால் தான் பாக்கெட் பறிபோனதும் பைகளில் ஆடைகளில் வேட்டிகளில் பிளேடு அறுபட்ட அடையாளம் வாய் கிழிந்து ஏமாற்றிச் சிரிக்கும்.  அது போல... தேவையிருந்தால் வருவார்களே அதை விட்டு விட்டு எதற்கிந்த ஏறிவிழும் போட்டிகள் இவை யாவும் தேவைக்கல்ல...ஆடம்பர சொத்து சேர்ப்புக்கு. அத்யாவசியத் தேவைக்கல்ல...

கடை வாசலில் முயல், மிக்கி மௌஸ், கரடி பொம்மைகள் சிறு குழந்தைகளை சிரிக்க வைக்கின்றன ஆடிப் பாடி       கூலிக்கு மனிதர்கள் உள்ளிருந்து அழுது கொண்டிருக்க‌
, அதில் சிலர் தரும் Tips 10ரூபாயும் 50 ரூபாயும் டாஸ்மாக் போகிறதா? அல்லது அவர் குடும்பத்துக்கு தின்ன உணவாகப் போகிறதோ?

மனிதம் மிகவும் கேவலமாக அதன் முகத்தின் மேலே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிறது தங்கள் கழிவுகளை தாங்களே உட்கொண்டு..

இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் மிகவும் கேவலான நிலைக்குப் போய்விட்டதை இதெல்லாம் அடையாளப்படுத்துகின்றன. எது எடுத்தாலும் ஒரு இடைத்தரகு, புரோக்கர், கமிஷன் யாவும்..இது இல்லாமல் நேரடியாக அவரவர் கவுன்சிலிங், நீட்,அவரவர் நேரடி அணுகுமுறை இந்த இடைத்தரகு புரொக்கர் கமிஷன் முறை ஒழிந்தால் தான் எதுவும் உருப்படும், உருவாக்கப்படும்.

அரசுப் பணிக்கு அததற்கு ஒரு விலை இருப்பதால் தகுதி இருப்போரும் அதற்குண்டான விலையை இலஞ்சத்தை முன் பணத்தை புரட்ட முடியாததால் தனியார் கம்பெனிக்கு குறைவான ஊதியத்துக்கு தள்ளப்பட்டு  தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தரகு புரொக்கர் கமிஷன் முறை ஒழிந்தால் தான் எதுவும் உருப்படும், உருவாக்கப்படும்.

அதுவரை...அரசும், இந்த ஆட்டங்களும் தொடரட்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: