Friday, May 26, 2017

ஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணிகை

Image result for media exploitation


இந்தியாவின் சட்டம், நீதி, நிர்வாகம், அடுத்து நான்காவது தூணான ஊடகங்கள் கால் இல்லாமல் இருப்பதால் எங்கு பார்த்தாலும் ஏழைமக்களுக்கு எதிரான அரசின் போக்கு தனியார் ஆதரவு மயம், அரசுக்கு அடிக்கும் ஜால்ரா போக்கு விலை வாசி ஏற்றம், குடிநீர் பிரச்சனை போன்ற எல்லா அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் காரணமாக அப்படியே தீர்க்க முடியாமல் இருக்கின்றன.

கால் ஜெவுக்கு இருந்ததா? இல்லையா என ஜெவின் மர்மச் சாவு பற்றி சிறிதும் துப்புகூடத் தர முடியாமல் பணத்தடிமைகளாக விளங்கும் இந்த இந்திய மீடியாக்கள் பெரும்பாலும் அரசை சார்ந்து அதன் விளம்பரத்தை சார்ந்தே இயங்கி வர....

காவல் துறை எப்படி செய்யாத குற்றத்தை செய்ததாகவும், செய்த குற்றத்தை செய்யாததாகவும் செய்ய வல்ல வன்மை படைத்ததோ அது போலவே இந்த ஊடகங்களும் வல்லமை கொண்டவை.

ரஜினியின் காலா, என்பது, தனுஷின் பேட்டி என்பது, ஓ.பி.எஸ். இரண்டு நாளைக்கு ஹோமியோபதி சிகிச்சை என்பது இ.பி.எஸ் பிரதமர் பேட்டியில் மாணிக்கம் எதற்கு எனத் செய்தி தருவது என மக்களுக்கு பயன்படும் பயன்படா செய்திகளை தொடர்ந்து தந்த வண்ணமே இருக்கின்றன.

கௌதமி போன்றோர் பிரதமரை சந்திக்கிறார் எளிமையாக, ஆனால் இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் சந்திக்க முடியவேயில்லை. ஆனால் அதற்கு ஊடகங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. காவிரியில் இன்றைய நிலவரப்படி 20 அடி நீரே இருந்தும் அதற்கு எதிராகவும் ஒன்றும் செய்வதில்லை.Image result for media exploitation

ரஜினி காந்த் வருவாரா வரமாட்டாரா என மிகவும் பெரிய பிரச்சனையாக செய்யும் ஊடகங்கள் அவர் வந்தால் தமிழக அரசியல் மாறிவிடும், மக்கள் எல்லா பிரச்சனையிலிருந்தும் விடுபடுவார் என்பது போல நடிகர் நடிகையர் சார்ந்த பிரச்சனையை பூதாகரமாகவும், தேவையான பிரச்ச்னைகளை இருட்டடிப்புமாக செய்து மக்களை இந்திய மக்களை திசை திருப்பி விடுகின்றன.

அதன் எதிரொலியாக இன்றும் இவர்கள் செய்து வரும் ஓ.பி.எஸ் வெர்சஸ் இ.பி.எஸ் செய்திகள், இவர்களால் நிரந்தரமாக ஒரு கவர்னரை பெற்றுத் தர முடியவில்லை தமிழ் நாட்டுக்காக.

எல்லாம் பொருளாதாரத் தேவைகளை மனதில் கொண்டே செய்திகளை வெளியிடுவது அல்லது இருட்டடிப்பு செய்வது என இயங்கி வரும் இந்தப் போக்கும் இந்த நாட்டுக்கு பெரும் கேடாக முடிந்து வருகிறது. நேர்மறையாக வரும் செய்திகளை வெளியிட மறுத்து வரும் போக்கே இதன் இழித்தன்மைகளுக்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவின் வாய்ப்புற்று நோய் முதலாக விளங்குகிறது, நாளுக்கு அதன் மூலம் 14 பேர் இறக்கிறார்கள் என்று அதை மாற்ற உண்மையாகவே ஆக்க பூர்வமான சக்திகள் போராடி வருகின்றன அதைப்பற்றிய ஒரு செய்தி வெளியிடுங்கள் என்றால் அதைச் செய்ய மாட்டார்கள் ஆனால் வேறு எல்லாவகையான தரமற்ற குடி, மது பாட்டலால் குத்து, போன்றவற்றுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்து வெளியிடுவார்கள்.

முக்கியமாக ஆளும் கட்சியினர், மாநிலத்திலும் மத்தியிலும் உள்ளார் எதைச்செய்தாலும் அதைச் செய்தியாக்குகின்றனர். அரசியல், சினிமா இந்த இரண்டு பிரிவினரின் செய்தி தவிர வேறு எத்தனையோ துறைகளில் அன்றாடம் ஆக்கபூர்வமான முயற்சிகளும் சாதனைகளும் நடந்து வருகிறது நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் அவை பற்றி எல்லாம் ஒரு செய்தி வெளியிட பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி முயற்சி செய்தபோதும் சில நேரங்களில் அவை பயனற்றவையாகவே முடிந்து போய் விடுகின்றன.

காரணம் அரசும் கூட. மேட்டூர் சேலம் தொடர்வண்டி போக்குவரத்து பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சி தேர்தல் நேரத்தில் நல்ல ஒளிபரப்பாய் நேரந்தவறி அந்த வண்டி செல்வதும் அதை மக்கள் பயனபடுத்தாமை பற்றி ஒளிபரப்பை செய்தும்...இன்று வரை எந்த மாற்றமும் இல்லை மத்திய ரெயில்வே அப்படியே மலை போல அசையாது கிடக்கிறது . இது போன்ற நடவடைக்கைக்கு எதிராக இயங்க தனிமனிதரால் , சிறிய நிறுவனங்களால் முடிவதில்லை, அதற்கு ஊடகங்கள் அவசியம் செயல்பட வேண்டும். ஆனால் ஊடகஙகள் பெரும்பாலும் பணத்துக்கு அடிபணியும் சக்திகளாக தீய சக்திகளின் துணையாக சென்று விடுவதால் இந்தியா இந்தியாவாகவே இருக்கிறது பாரதமாக மாறவில்லை.

Related image

நாட்டுக்கு நன்மை செய்த தியாகம் செய்த ஆயுளைக் கழித்த பலரும் அடையாளம் தெரியாமல் இருக்க, தமிழிசையும், இங்கிலீச் இசையும், ராஜாக்களும் ராணிகளையும் பற்றியே செய்தியே என்றும் இடம்பிடிக்கின்றன போதாததற்கு சீரியல் வெங்காயம், அதன் பெங்கலூர் நடிகை,, கேரள நடிகை என அரசியல் நாய(க)ர்களும், சினிமா நடிக நடிகையரையும் விட்டால் இந்த  ஊடகப் பேய்களுக்கு வேறு எதுவும் இல்லை போலும்...

அப்படி செய்தே எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெ, ஓ.பி.எஸ். இ.பி.எஸ், சசி போன்|றோரும் வந்தனர் இன்று வெற்றிடம் நிரப்ப ரஜினி வேண்டுமாம். அவர் வருவதும் வராமலிருப்பதும், சிஸ்டத்தை சரி செய்வதும் செய்யாமலிருப்பதும் இதன் கருப்பொருள் அல்ல...இவ்வளவு தேவைக்கதிமான சிலம்பல்கள், உறுமல்கள், குரல்கள், வெளிச்சங்கள் ஊடகத்தில் தேவையா என்பதுதான் எனது கேள்வி எல்லாம்...

மோடி கேடி மஸ்தான் ஆட்சி  3 ஆண்டில் ஊழல் இல்லா ஆட்சியாம், எடப்பாடி 100 நாளை ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொண்டாராம் இவை தான் இன்றைய பிரதான செய்திகள். மோடி ரிலையன்ஸ் அம்பானிகளின் பணத்தாலும், அமெரிக்க வழிகாட்டலாலுமே வந்தார் அது ஊழல் இல்லையா? மோடி பிரதமர் வேட்பாளர் என்றீர் வந்தீர். அவர் கட்டப் பஞ்சாயத்து தான் செய்கிறார் அதில் ஸ்டாலினோ, கண்ணதாசனோ ஊடகங்களில் சொல்வது தவறில்லை. இல்லையெனில் அதைப்பற்றிய செய்திகள் வரவேண்டுமே...நாட்டின் ஒரு மாநில முதல்வரும், நாட்டின் மத்திய பிரதமரும் அவர்கள் சொந்த வீட்டு சமாச்சாரம் பேசினால் யாருக்கும் வேண்டாம் நாட்டு நடப்பு பற்றிய பேச்சு நடத்தினால் செய்தி அவசியம் வேண்டுமல்லவா?

ஜெ மோடி இரண்டு பேரும் நாட்டின் பெரும் மக்கள் அழிவு சக்திகள். இதற்கு ராஜா போன்ற நபர்கள் வாபஸ் வாங்கு பிடிங்கு எனப் பேசி வருவது எல்லாம் மத்தியில் அவர்கள் ஆட்சி என்ற ஒன்று இருப்பதால் மட்டுமே. ஒருபக்கம் தி.மு.க ஆட்சிக்கு வந்து விடக்கூடாது எனத் திட்டமிடும் இவர்கள் மறுபக்கம் கலைஞர் கருணாநிதி மணிவிழாவுக்கு அழைப்பு விடுத்திருக்காலம் எனக் கேவுவது அசிங்கமாக இல்லையா? கருணாநிதியே அவர் விழாவுக்கு வர முடியாதபோது அது அரசியல் விழாவா அல்லது நாட்டை நினைவு படுத்தும் விழாவா என்று எதுவாக இருந்து விட்டுப் போகட்டுமே இவர்களுக்கு என்ன வந்தது? இந்த நிலையில் இராமசுப்ரமணியன் என்ற ஒரு நபர் பேசுகிறார் ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமைக்கு காரணம் சொல்லத் தெரியாமல் இவர்கள் அந்தக் கட்சியில் சேரத் துடிக்கிறார்கள் எனக் கூசாமல் பேசுகிறார் அதை ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன.
Image result for media press and tv exploitation of india


ஊடகங்கள் முதலில் மக்களுக்கு எதைத் தருவது, எதைத் தரக்கூடாது என்ற நெறி வகுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அல்லது இது போன்ற நெறி கடைப்பிடிக்க முடியாவில்லை எனில் எல்லா உண்மைகளையும் மறைக்காமல் அப்படியே தர முயல வேண்டும். காசுக்கா, மதுவுக்காக, கிடைக்கும் கவர்களுக்காக செய்தியை இல்லாமல் செய்வதும், இல்லாததை செய்தியாகத் தருவதையும் நிறுத்த வேண்டும். நாட்டு மக்களின் மேம்பாடு என்றும் கவனத்தில் கொண்டு செய்திகள் வெளியிட பாடுபட வேண்டும்.
Image result for media press and tv exploitation of india
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. ஊடகங்களின் புலைத்தனமும் பித்தலாட்டமும்: கவிஞர் தணிகை= எல்லாம் பொருளாதாரத் தேவைகளை மனதில் கொண்டே செய்திகளை வெளியிடுவது அல்லது இருட்டடிப்பு செய்வது என இயங்கி வரும் இந்தப் போக்கும் இந்த நாட்டுக்கு பெரும் கேடாக முடிந்து வருகிறது. நேர்மறையாக வரும் செய்திகளை வெளியிட மறுத்து வரும் போக்கே இதன் இழித்தன்மைகளுக்கு எடுத்துக்காட்டு.- வேதனை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

    ReplyDelete
  2. பல நியாயமான உண்மைகளை சொல்லும் அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post veka nari. vanakkam.please keep contact

      Delete