பக்தி வியாபரத்தால் பேருந்து ஏற முடிய வில்லை பயணம் செய்ய முடியவில்லை : கவிஞர் தணிகை
அமாவாஸ்யை.என்னை(யே) ஓட்டுனர் படிக்கட்டில் நின்று வரச் சொல்லி விட்டார். உள்ளே அவ்வளவு கூட்டம். நெருக்கம்.பெண்கள் கூட்டம் எனவே சிறிது நேரம் படிக்கட்டில் ஒப்புதல் இன்றியே இருந்தேன்.சுங்கச் சாவடி இன்னும் சாலை அமைத்த பணத்தை எடுக்க வில்லையா? அங்கே பத்ம வாணி, கல்லூரி பெரியார் பல்கலை என இல்லாத பேருந்து நிறுத்தங்கள். கல்லூரி பெண்கள் கூட பேருந்தின் கூட்டம் கண்டு விலகி ஓடி விட ஒரு கர்ப்பிணிப் பெண் அவர் கணவருடன் துணிந்து படியில் ஏறிக் கொண்டார்.
ஏம்மா இப்படி வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கிற சூழலில் இப்படிப் பட்ட பேருந்தில் ஏறலாமா ? என்றதற்கு எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது என்றார்.
அதை விட பெரிய நிகழ்வாக போகப் போக கூட்டம் ஏறிக் கொண்டே இருந்தது ஒரு பெண் கைக்குழந்தையுடன் ஏறிக் கொண்டாள். பஸ் நகர்ந்தது நான் ஒரு இடத்தில் இறங்கி படியிலிருந்து உள்ளே போய் நின்று கொண்டேன் அது வேறு. இந்தப் பெண் படியில் இருந்து விழுந்து விடுவாள் என்பதை உணர்ந்து கொண்ட நடத்துனர்(அன்று அந்த பேருந்துக்கு கொள்ளை இலாபம்) பேருந்தை நிறுத்தி இறக்கியே விட்டு விட்டார்.
ஒன்று இது போன்ற நாட்களில் அரசு பல சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது மக்களாவது நிலை உணர்ந்து வீடு அடங்கி இருத்தல் வேண்டும் அல்லது பெரிய கோவில்கள் என்பதே இருக்கக் கூடாது. அது வேறு.
வயதான பெரியவர்கள், கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்டிர் இவர்கள் எல்லாம் எப்படி இவ்வளவு துணிச்சலுடன் இந்தக் கூட்டத்தில் பயணம் செய்ய புறப்பட்டு வருகின்றனர் என்றே என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தக் கொடிய கோடையில் அக்னி நட்சத்திர கத்திரி வெயிலில்.
இத்தனைக்கும் டவுன் பஸ் உள்ள ரூட்தான் அது. அதில் யாரும் ஏற ஆர்வம் காண்பிப்பதைல்லை. அரசு பேருந்தில் எவரும் ஏற ஆர்வம் காண்பிப்பதைல்லை எல்லாம் தனியார் பேருந்துகளில் ....சிறு தொலைவும் கூட...அது சேலம் ஓமலூர் மேச்சேரி வழியாக மேட்டூர் வந்து சேரும் பேருந்து வழி. சிறு தொலைவும் கூட எங்களுக்குத்தான் வேறு வழியில்லை என்றால் சிறு தொலைவும் கூட வரவேண்டிய மக்களும் ஏன் இது போன்ற பேருந்துகளில் ஏற வேண்டும் என்பதுதான் புரியவில்லை.
எனக்கு பணி நேரம் கோடைக்கால விடுமுறை காரணமாக மதியம் 1 மணி வரை இருந்து முடிந்து விடுவதால் வேறு வழியின்றி பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். எனது நேரம் தனியார் வண்டியே எனக்கு கிடைக்கிறது. மதியம் 3 மணிக்குள்ளாவது வீடு திரும்பி மதிய உணவை உட்கொள்ளலாமே என்ற அவசரத்தில் நான் வந்து கொண்டிருக்கிறேன்.சாதரணமாகவே பேருந்து நிலையத்தில் சென்று இருக்கையில் அமர்ந்து வரலாம் என சென்றால் கூட சில பேருந்துகளை தவற விட்ட பின்னால் தான் 3 ஆம் அல்லது 4 வது பேருந்தில் தான் இருக்கையே கிடைக்கிறது அந்த மதிய வேளைகளில்.
எந்தக் காரணத்தைக் கொண்டுமே அரசு இதை எல்லாம் கண்டு கொள்வதே இல்லை கூட்டம் மிக அதிகம். எல்லாம் பக்தி மார்க்கத்தில் மேச்சேரி காளியம்மனை வணங்க வருகிறார்களாம், அமாவாசையில்.
மருத்துவ மனைகளில் எங்கும் கூட்டமே இல்லை. காரணம் இந்த அமாவாசைதான்...இந்த பேருந்தே இப்படி பிதுங்கி வழிகிறபோது, பூ,பழம், கற்பூரம், எலுமிச்சை, தேங்காய் இப்படிப்பட்ட பூஜை சாமான்களுக்கும் அதனுடன் சார்ந்த விற்பனை பொருட்களுக்கும் சொல்லவே வேண்டாம், பெரும் வியாபாரம். பூசாரித் தட்டுக்கும், தனியார் பஸ் முதலாளிக்கும் நல்ல கலெக்சன்.
கல்வி நிறுவனங்களுக்கும், கோவில் நிறுவனங்களுக்கும் எப்போதுமே எப்படியோ நல்ல கலெக்சன். அதன் பாதிப்பே இந்த பேருந்து தனியார் முதலாளிகளுக்கும். நடத்துனர் ,ஓட்டுனர், உதவி நடத்துனர்கள் பேட்டா எடுக்க நன்றாக உழைக்கின்றனர். மக்களின் சாபத்துடன். ஆனால் இந்த சாபம் எல்லாம் போய்ச் சேர வேண்டியது அரசுக்கு அரசுக்கு மட்டுமே என்பது ஒரு கோணம்.
சொல்லில் வருவது பாதி
சொல்லக் கூடாதது மீதி..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

உண்மைதான் நண்பரே
ReplyDeleteபக்தி வியாபாரமாகித்தான் போய்விட்டது
ஆனாலும் மக்கள் புரிந்து கொள்வதாக இல்லையே
yes sir .thanks for your feedback on this post . vanakkam
ReplyDeleteபக்தி - பிரதான வியாபாரம், அரசுக்கும், தனியாருக்கும். நன்றி.
ReplyDeletethanks for your feedback on this post sir vanakkam.
ReplyDelete