Sunday, May 21, 2017

ரஜினிகாந்த்-- 66:கவிஞர் தணிகை.

ரஜினிகாந்த்  66:
Image result for rajinikanth66

ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற‌ தனி மனிதரின் கருத்துகளைப் பற்றி மலர் மொட்டாக இருக்கும்போதே எதற்கிந்த ஆர்ப்பாட்டம்? கவிஞர் தணிகை.

எம்.ஜி.ஆர் இதே போன்ற கனவுகளுடன் தாம் அரசியலுக்கு வந்தார் .சத்துணவு விரிவாக்கத்துடன் அவர் கனவு தகர்ந்தது. அவரின் பின் ஜெ வர அவர் காரணமாகவும், அதன் பின் இந்த நாடு இப்படி இருக்கவும் அன்று ஏற்பட்ட கருணாநிதி எம்.ஜி.ஆர் பிளவு காரணமாக அமைந்து விட்டது.

கருணாநிதி முடியும் தருவாயில் இருக்க, எம்.ஜி.ஆர், ஜெ இல்லாதிருக்க அந்த வெற்றிடம் இந்த நடிகரால் நிரப்பப் படுமா என ஒரு ஆருடம் நிலவுகிறது.

இவரை பாரதிய ஜனதா பயன்படுத்தப் பார்த்ததும் என்ன காரணத்தால் இவர் அதற்கு பிடி கொடுக்கவில்லை என்பதும் சம்பந்தப்பட்ட இரு சாரருக்கும் தெரியும். இவர் குடும்பஸ்தர் எம்.ஜி.ஆர் போன்று குழந்தை வாரிசு இல்லாதார் அல்ல. மேலும் எம்.ஜி.ஆர் ஜானகியைக் கட்டுப்படுத்தி ஆட்டம் போட்டவர் பெண்கள் தொடர்பில் அதனால்தான் ஜெ போன்றோர் வர முடிந்தது.

ஆனால் இவரது மனைவி லதா சொல்லும் சொல்லை மீறாதவர் இந்த காந்த் ரஜினி காந்த். பாலச்சந்தரால் பிரமாதமாக மேல் எடுத்துச் செல்லப்பட்ட நடிகர்.விஜய்காந்த் எப்படி சுழன்று காலை சுழட்டி சண்டையிட்டு சினிமாவில் காப்டன் பட்டம் பெற்றாரோ ஆனால் அவர் அவரின் மனைவி பிரேமலதாவின் பேச்சைத் தட்டாதிருப்பாரோ அது போல ...இவரும் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பவர் இல்லாவிட்டால் இதுகாலம் இவர் அரசியலில் இருந்திருக்கலாம் வெற்றியோ தோல்வியோ பெற்ற தலைவராக...சிவாஜி ராவ் கெய்க்வாட் சிவாஜி போல அரசியலில் ஜொலிக்காமல் போகலாம், அல்லது எம்.ஜி.ஆர் போல் எதையாவது செய்யவும் முயலலாம். அதெல்லாம் அப்புறம்.

Related imageImage result for rajinikanth66Related image

இவரின் சினிமா வெளியாக இருக்கும்போதெல்லாம் இது போல ஸ்டன்ட் இவர் செய்வார், வெறும் கபாலி விளம்பரத்தை வைத்தே எம்.ஜி.ஆர் கபாலியாக நம்பியார் சொல்வது போல அல்லாமல் பெரிய கபாலியாக ஓடி விட்டது என்பதையெல்லாம் நினைத்தால் தமிழரைப் பற்றி இவர் கொண்டிருக்கும் ஒபீனியன் சரியானதுதான். இது 2.0 க்குப் பின்னும் இதே அலை இருக்குமா என்று முதலில் பார்க்க வேண்டும்.

ஆனால் பொது வாழ்வில் பொது மேடையில் செய்தி ஊடகங்கள் முன் பேசும்போது அதுவும் பிரபலங்கள் எல்லாம் பேசும்போது சற்று நாவடக்கமாக உள்ளதை உணர்வதை எல்லாம் அப்படியே பேசி விட முடியாது, அப்படி யதார்த்தமாக பேசிவிட்டால் இவர்கள் எல்லாம் இப்போது  போராட்டம் எனச் சொல்லி போராட்டத்தை நடத்தி வரும் திராவிடர் கழகம், மற்ற கழகம் எல்லாம் எதிராகி எதிராக கிளம்பி விடும் என்பதை மறுக்க முடியாது.

நான் அந்த பேச்சைக் கேட்கும்போதே நினைத்தேன் வினை விதைத்துக் கொண்டார் என. சத்யராஜ் ஒன்றுமில்லாமல் பொத்தாம் பொதுவாக பேசியதற்கே ஒன்றுமில்லாமலே வட்டாள் நாகராஜ் போன்றோர் முடுக்கி விடப்பட்டு கர்நாடகாவில் பாஹு பலியை பல ஆண்டுகளுக்கும் பின் கூட‌ காரணமாக்கி விட்டது போல...

இவர் சொல்வதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சொல்லியதை பொது ஊடகத்தில் சொல்லியதுதான் இவருக்கு எதிரான கருத்துகளும் போராட்டங்களும் எழக் காரணமாகிவிட்டன். மதுக்கடைக்கு அடிமையாகிப் போன தமிழர்கள், கட்சி, சாதி எனப் பிரிந்து ஒரு ஒழுங்கான ஆட்சியை அமைக்க விடாமல் வாக்களித்த தமிழர்கள், யார் வந்தால் எப்படி ஆட்சி நடக்கும் எனத் தெரியாத தமிழர்கள், ஒரு பெரும் குற்றவாளியை தெய்வமாகக் கொண்டாடும் தமிழர்கள் அவர் இருக்கும் வரை அந்தப் பெரும் கட்சியில் பிரிவினை வந்தபோதும் நாடு அந்தக் கட்சியின் வசமே அதன் ஆட்சியின் வசமே இருப்பதைக் கண்டும் வாளா இருக்கும் தமிழர்கள், ஒரு குடும்ப ஆட்சியே ஒரு பெரும் கட்சியில் இருக்க அவர்கள் ஆளும்போது அதன் ஆட்சியே நிலவ அனுபவத்துக் கொண்டிருக்க பழகிக் கொண்ட தமிழர்கள் எனத் தமிழர்கள் இன்று எண்ணிறந்த பிரிவுகளில் பிரிந்து கிடக்கிறார்கள்.

 கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடி என்றால் பெரிதாமோ என்ற பாரதியின் வரிகளுக்கேற்பவும், நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் என மதுபான அடிமைகள் கொஞ்சம் சேர்த்துப் போட்ட வாக்கால் வேறு ஆட்சி முறையை ஆள விட்ட அடிமைகள்...விஜய்காந்த், வைகோ, பா.மா.க என வாக்குகளைப் பிரித்து தமிழரை ஆளவிடக்கூடாது என நினைக்கும் தமிழர்களை எல்லாம் வேறு எப்படி சொல்ல முடியும்?

 இந்த போட்டி சந்துகளிடை இப்போது பாரதிய ஜனதாக் கட்சி பொன் இராதாகிருஷ்ணன் போன்றோர் எந்தக் கட்சிக்குமே இங்கு கால் கிடையாது என்று துணிச்சலாகப் பேசுவதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருந்து கொண்டு, ஆளும் மத்திய கட்சி என்ற ஒரே கோதாவை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியை தாறுமாறாக பேசுவதும், தலைமைச் செயலகத்தில் வந்து மத்திய மந்திரி ஆய்வு செய்வதும் அவர்களை எல்லாம் எதுவும் பேசாமல் ஒரு நடிகர் பேசிவிட்டால் அதற்கு இவ்வளவு வரிந்து கட்டிக் கொண்டு போராடுவதுமாக இருக்கும் தமிழர்களை வேறு என்ன சொல்வது?இவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு 2.0 சங்கர் படத்திற்கு எதிராக போராட மாட்டார்கள் என்பதெற்கெல்லாம் இல்லை என்று மறுப்பு சொல்ல முடியாது.

இவர் இரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதும், நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரியில் நல்லது செய்து குடிநீர் கொடுப்பதும், திருவண்ணாமலைக்கு நல்லது செய்ததும், தமிழ் நாட்டை விட்டால் இமயமலைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதும் எல்லாம் சரிதான்.

ஆனால் இந்த பாழாய்ப்போன அரசியலை எல்லாம் முற்றிலும் மாற்றி விட முடியுமா என்று கேள்விகள் எழுப்புவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

இவர் ஸ்டாலின், திருமா, அன்புமணி ஆகியோரை பாராட்டுகிறார். ஆனால் அவர்கள், இவரது பாணியில் மகிழ்ச்சி என ஸ்டாலின் சொல்லி உள்ளதையும், அன்பு மணி இனி இந்த மாநிலத்துக்கு தேவை டாக்டர்தான், நடிகர் அல்ல என்பதும் திருமா போன்றோர் நீதிபதி கர்ணன் செய்கையில் நியாயம் காண்பதும் அவர்கள் எந்நிலையில்  இவரை அணுகுவார்கள், அணுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இவர் அரசியலுக்கு வருகிறாரா? வந்தால் உண்மையில் இவரால் ஏதும் மக்களுக்கு அடிப்படி வசதிகள் செய்து பிரச்சனைகள் தீர  சாதிக்க முடியுமா? சிஸ்டத்தை சரி செய்ய‌  முடியுமா என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும், இவர் வந்து விடுவாரா  வந்து விட்டால் நம் நிலை எல்லம் என்ன ஆவது என்ற பதைபதைப்பில் பேசுவாராகவே இவரை வரக்கூடாது என்ற எண்ணத்தையே பலர் தெறித்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, திருநாவுக்கரசு போன்றோரைத் தவிர...

முக்கியமாக பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் தமது கட்சியின் இழுப்புக்கு வர மாட்டார் என்று தெரிந்ததுமே அவரை தாழ்த்தி பேச ஆரம்பித்து விட்டார்கள் இதை கவனிக்க வேண்டும்.

மலையாளி, எம்.ஜி.ஆர், கர்நாடக ஜெ,( நாயுடு விஜய்காந்த்) , ஒரே குடும்ப ஆட்சி முறை ஒரே குடும்ப கட்சி முறை போன்ற கொள்கையை கடைப்பிடித்த கலைஞர் போன்றவர்களை எல்லாம் மக்கள் தலைவர்களாக முதல்வராக ஏற்றுக் கொண்ட நிலையில்  இவரை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? அது பெரிய தவறா என்ற கேள்விகளை அவரது இரசிகர்கள் கேட்கிறார்கள் இதை மறுக்க அடிப்படை இல்லை.

ஆனால் இவரது இரசிகர் மட்டுமே போதுமா? போர் அதாவது தேர்தல் வரும்போதுமட்டும் அணி சேர்ந்து வெல்ல முடியுமா? எல்லா மக்களுமே ஆதரவு தருவார்களா என்பதெல்லாம் எதிர்காலத்தில் நிகழும் கனவுகளும் கற்பனைகளும்.


Related image


ஆனால் இதெல்லாம் நடந்தாலும் இவரால் சிஸ்டத்தை ஒன்றுமே மாற்றி விட முடியாது என்பதுதான் உண்மை. அப்படி மாற்ற வேண்டுமானால் இவரது கொள்கை பொதுவுடமைக் கட்சியின் அடிப்படையில் அமைதல் வேண்டும், அமைந்திருக்க வேண்டும். உண்மையில் புதிய ஜனநாயகம் போன்ற புரட்சிகர கோவன் போன்ற பாடல் புனைவில் அமைதல் கூட அவசியமாயிருக்கலாம். ஆனால் அது போன்ற கட்சியில் இவர் சேர்வாரா? புதிய கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கு பெறுவாரா? புதிய ஜனநாயகம் போன்ற கட்சிகள் , சீமான் போன்ற கட்சிகள் எல்லாம் இவரை சேர்த்தாலும் அந்தளவு மக்கள் செல்வாக்கு என்று பெறுவது? இவை எல்லாம் இவர் முன் கேள்விகள்.

காங்கிரஸ், சிதம்பரம், மாநிலத்தில் உடல் நிலை சரியில்லாதிருக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ளார் போன்றோருடன் சேர்ந்து புதிய‌ கட்சி அமைத்து விடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை.

எனவே இது பற்றி எல்லாம் பெரிதாக இப்போதைக்கு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. மேலும் இந்த ஊடகஙக்ள் எல்லாம் தான் அதற்கு பட்டி மண்டபம் நடத்துவதும், நேரலை விவாதம் செய்வதும், அவரது பேட்டிகளை மேலும் மேலும் மறுபடியும் போட்டுக் காட்டுவதும்., எல்லா ஊடகங்களிலும் இந்த செய்தி இடம் பெறுவதாகவும் செய்து பெரிது படுத்தி விட்டன.

இது 2.0 வுக்கு அதன் வெற்றி பெற வேண்டும் என்ற அலைக்கு வித்திடப்பட்ட விளம்பரமாகவும் இருக்கலாம். மற்றபடி அரசியலில் இன்னும் 95 வயதிலும் தி.மு.கவின் தலைவராகவே இருக்கும்போது 66 வயதில் வரக்கூடாது அரசியலுக்கு என்றெல்லாம் எவருமே சொல்ல முடியாது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: