Sunday, May 28, 2017

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தின் தூர் வாரும் நிகழ்வை துவக்கி வைக்கிறார்: கவிஞர் தணிகை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தின் தூர் வாரும் நிகழ்வை துவக்கி வைக்கிறார்: கவிஞர் தணிகை
Related image



இ.பி.எஸ் வெர்சஸ் ஓ.பி.எஸ் என அ.இ.அ.தி.மு.க திணறி வரும் நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி தனது கட்சி எதிர்ப்பு எம்.எல்.ஏ பன்னீர் செல்வ அணியின் வேர் செம்மலை எம்.எல்.ஏ தொகுதியான மேட்டூரில் மேட்டூர் காவிரி நீர்த் தேக்கத்தில் தூர் வாரும் நிகழ்வை துவக்கி வைக்கிறார். on today i.e 28.05.2017 Sunday at Mettur Dam.

அவங்க அப்பா பேர் கருப்புக் கவுண்டர், ஆனால் எடப்பாடி பழனிசாமி என்றால் தெரியுமாறு ஊர் பேரை இணைத்துக் கொண்டு இன்று தமிழகத்தின் சரித்திரத்தில் தம் கால் தடம் பதித்துக் கொண்டார் இந்த மனிதர். 83 ஆண்டுகளாக தூர் வாரப்படாமலே இருந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இன்று முதன் முறையாக தூர் வாரும் பணியை ஆரம்பித்து வைக்கிறார்.

எல்லாம் ஒரு ராசியப்பா ராசி. பணத்து ராசி. என்னதான் ஆனாலும் நல்லகண்ணு இன்னும் நல்லகண்ணுவாகவே நீடூழி வாழ்ந்து கொண்டிருக்க இடையில் வந்த ராஜாக்கள் எத்தனையோ அதில் எடப்பாடியும் ஒருவர்.

ஓடக்கார பன்னீர் செல்வம் வெர்சஸ் எடப்பாடி பழனி சாமி என அந்த ஆளும் கட்சி துவண்டு போய் மோடியின் பொம்மலாட்டக் கயிறுகளில் சிக்கி ஆடிக் கொண்டிருந்த போதும்...

பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்  பள்ளி இறுதித் தேர்விலும், மேனிலைத் தேர்வு முடிவுகளிலும் முதல்  3 இடங்களை ஊடகங்களில் வெளியிடத் தேவை இல்லை என்றும்  தேர்வு முடிவுகளை அவரவர் வீட்டு செல்பேசிகளிலேயே கொடுத்தும் இந்தியாவுக்கே தேர்வு முடிவுகள் இம்முறையில் வெளியிடுவதில் முன் மாதிரியாகவும் செய்து விட்டார்

பள்ளிக் குழந்தைகளுக்கு கிடைக்கும் இலவசங்கள் பள்ளி தேடியே அனுப்பி வைக்கவும் பட்டுள்ளது. செந்தில்பாலாஜி கலப்படம் செய்யும் பால் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக  தாம் சொல்லும் குற்றச் சாட்டு பொய் என நிரூபிக்கப் பட்டால் ராஜினாமா கூட செய்யத் தயார் என்கிறார்

ஓ.பி.எஸ், ஜெ, எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி இப்படி நிறைய முதல்வர்கள் வந்த போதும் சென்ற போதும் மேட்டூர் அணை கட்டித் துவக்கப்பட்ட வரலாறில் இதுதான் முதல் முறை தூர் வாரும் நடவடிக்கையை கை தொட்டிருப்பது இதனால் எடப்பாடிக்கு ஒரு நல்ல பேர்.
Related image


இத்தனைக்கும் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்து கொண்டு ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பனமரத்துப் பட்டி இராஜேந்திரன் தி.மு.க‌ பெற்று விட அனைத்து தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.கவுக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.

செம்மலைக்கு தொகுதி ஒதுக்காமலே விட்டு விட்டார். அதன்பின் ஜெவின் பார்வையில் சீனியர் மேன் என்ற நிலையில்தான் செம்மலைக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இருவரும் எலியும் பூனையுமாக எதிரும் புதிருமாக இருக்க இந்த தூர்வாரும் நிகழ்வு இன்று செம்மலையின் தொகுதியில் நடந்து தேசிய செய்தியாக ஆகி உள்ளது.

சேலத்து இரட்டை அடுக்கு மேம்பால வேலைகள் மதுரை இன்ஃப்ரா நிறுவனம் செயல்பாட்டில் முன்னேறி வருகிற நிலையில் இன்று இந்த தூர் வாரும் பணியும். இந்த இன்ப்ரா நிறுவனம் இராமலிங்கம் என்ற இவரது சம்பந்தியுடையது என்று சொல்கிறார்கள். இவர் ஏற்கெனவே நெடுஞ்சாலை மற்றும் சிறு கப்பல் துறைமுக அமைச்சராக இருந்ததாலும் இப்போது பொதுப்பணித் துறையும் இவர் கையிலே உள்ளதாலும் இதெல்லாம் மிக எளிதாக செய்து விட முடியும். ஆனால் வரவு செலவு பற்றி எல்லாம் பொது வெள்ளை அறிக்கை எல்லாம் கேட்க முடியாது.

ஒரு கோஷ்டி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள், மந்திரிகளே எல்லாம் சுருட்டிக் கொள்கிறார்கள் காண்ட்ராக்ட்களில் கமிஷனை எல்லாம் எம்.எல்.ஏவுக்கும் பங்கு வேண்டாமா? ஏற்கெனவே கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு கொடுத்த உறுதி மொழி இரகசிய உடன்படிக்கை மந்திரிசபை காப்பாற்ற போடப்பட்டதே அந்த  அக்ரிமென்ட் கிடப்பில் உள்ளது என்று செய்திகள் கட்சிக்குள் கோஷ்டி குழப்பம் என செய்திகள் வந்தபோதும் சிலர் மந்திரிகள் ஆகக் கூடும் என்ற செய்தியை மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என துணிச்சலோடு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் முதல்வர்.

ஓ.பி.எஸ் ஹோமியோபதி வைத்தியம் செய்து உடலை அதன் நலனை பார்த்துக் கொண்டிருக்க...ஓபிஎஸ் காலத்திலும் வேறு எவர் காலத்திலும் செய்யாத பணியை கையில் எடுத்திருக்கும் இ.பி.எஸ் மந்திரிசபை ப்ளஸ் மார்க்கை நிர்வாகத்தில் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.இந்த தூர் வாரும் பணியை செய்வதன் மூலம். இந்தப் பணிகளை முன்பே தமிழகத்தின் நீர் நிலைகளில் செய்திருக்க வேண்டும் என இருந்தாலும் இப்போதாவது செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே என ஆறுதல் அடையலாம்.

Image result for mettur dam images


ஜெ இல்லாத காலத்தில் மந்திரிகள் எல்லாம் பணி புரிகிறார்கள் என்ற அடையாளத்துக்கு இந்த 3 மந்திரிகளின் பணிகளும், பேட்டிகளும்...

கட்சி இணைக்க ஓ.பி.எஸ் முதல்வரானால், கட்சி பொதுச்செயலாளர் வைத்திலிங்கமாகவும், துணை முதல்வராக இ.பி.எஸ்ஸும் இருக்க வேண்டும் என்ற செய்திகளும் உள்ளன...ஆனால் இந்த 100 நாட்களுக்கும் மேலாக முதல்வராக இருக்கும் செயல்படும் இந்த எடப்பாடி பழனிசாமி இதற்கெல்லாம் மசிவாரா? விடுவாரா ? என காலம் பதில் சொல்லட்டும், மோடியை இரு அணியினரும் மாறி மாறி சந்தித்த போதும் இன்னும் ஜெவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க அரசு மாறாமலிருப்பதே ஒரு சாதனைதானே?

Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment