Wednesday, May 10, 2017

சித்ரா பௌர்ணமியும் புத்த பூர்ணிமாவும்: கவிஞர் தணிகை

சித்ரா பௌர்ணமியும் புத்த பூர்ணிமாவும்: கவிஞர் தணிகை

Image result for family of buddha


புத்தர் அவதரித்தாலும் சித்தர் சொன்னாலும் இந்த உலகு உய்யாது.சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரும் ஏசுவும் உத்தமராம் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வைச்சாஙக எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க என்ற பட்டுக் கோட்டை பாதியிலே போய்விட்டார்.

,புத்தர் மனவி யசோதரா மகன் இராகுலன் எல்லாமே புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி என பௌத்த சங்கத்தில் சேர்ந்து கொள்ளச் சொல்லி யசோதரையின் நச்சரிப்பு கேள்வியான‌ மகனுக்கு என்ன சொல்லப் போகிறீர் என்ற கேள்விக்கு பதிலாக சொல்லி சேர்த்து கொள்ள தம் சீடர்களுக்கு கட்டளையிட்டார்.அவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்

புத்தர் பிறந்த நாளாம் இந்த நாளுக்கு மத்திய அரசு விடுமுறையாம். எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இன்னும் மூடாமல் சேலம் ஸ்டீல் பிளாண்ட் போல இன்னும் இருக்கும் பி.எஸ்.என்.எல் அதாங்க பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மற்றும் தபால் துறை எல்லாவற்றுக்கும் விடுமுறையாம்.

டேய் புத்தருக்கும் உங்களுக்கும் என்னடா தொடர்பிருக்கு? எதுக்கடா மத்திய அரசு லீவு விடுறீங்க? ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப உள்ளூரில் உள்ள பண்டிகைக்க்கு லீவு விட்டாலாவது அவர்களுக்கு ஆவும்...மனித குலம் யாவுமே  திருந்தினால் உலகு யாவும் உய்யும் என்ற சிந்தனையை உலகுக்கு கொடுத்த மனிதர் புத்தர். அதற்கு அடிப்படை ஆசைதான். என்றவர் இறை வணக்கத்தைப் பற்றி எல்லாம் பேசவே இல்லை. ஒவ்வொருவரின் செயல்கள் அவரின் வாழ்வில் எதிர் விளைவுகளைத் தரும் என்று மட்டுமே சொல்லியவர். அவரை கடவுள் என்றாக்கி அதற்கு ஒரு மதமும் கற்பித்துக் கொண்டு விட்டார்கள்.

அதிலும் பிரிவினைகள்.

எல்லாரையுமே துறவி ஆகச் சொன்ன மதம் என்பதால் அது தாய்லாந்து சீனா, ஜப்பான், இன்னும் கிழக்கத்திய ஆசிய நாடுகளுடன் தற்போது சுருங்கிப் போனது. இந்தியாவில் கொடி கட்டிப் பறந்த மதம் ஆனால் இந்து மதம் என்ற தாய் மதம் நாளடைவில் இந்த மதத்தையும் உள்வாங்கிக் கொண்டது.


Image result for kajuroka statuesRelated image


புத்த பிட்சுகளுக்கு தர்மமாய் உணவு கொடுக்க சம்சாரி வேண்டுமே, எனவேதான் உடல் உறவுச் சிற்பங்களை, பாலியல் தெறிக்கும் சிற்பங்களை இந்தியாவை ஆண்ட வேற்று மதத்து மன்னர்கள் முக்கியமாக கோவில்களில் செதுக்கி வைத்தார்கள்.விட்டால் எலலாரையும் புத்த பிட்சு ஆக்கிவிட்டால் படைவீரர், ஏவல் புரிவோர், விவசாயிகள், சேவை தொழில் புரிவோர் எவருமே இருக்க மாட்டாமல் போய்விடுவாரோ என்று பயந்து அந்த மதத்தை ஒளித்து விட்டார்கள், ஒழித்தும் விட்டார்கள்.

எல்லாம் கையில் ஒரு சிவப்பு, மஞ்சள் என‌ கயிறு கட்டிக் கொண்டு ஆடு மாடு பலி இட்டுக் கொண்டு நரமாமிசம் தின்னும் கூட்டமாய்  கெடா மாதிரி மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போது எங்கிருந்து புத்தரது தத்துவம் விளங்கும். அது சற்று நுட்பமான அறிவுக்கு மட்டுமே எட்டும். இந்த நாய்களின் வாலை நிமிர்த்தவே முடியாது. காலம் செல்லச் செல்ல மனித அவலங்களும், ஆள்வோரின் அக்கிரமங்களும், அதற்கு துணை போவோரின், துணை நிற்போரின், பணச் சிகரங்களின் மேல் ஏறி நிற்போரின் எகத்தாளங்களும் அளவிட முடியாமல் போகும்போது இராமலிங்க வள்ளல் . புத்தர், மகாவீர்ர் (இந்த மகாவீரர் பாஹுபலி எமது சினிமா பாஹுபலியால் தோற்கடிக்கப்பட்டு விட்டார்) 63 நாயன்மார்கள் , சித்தர்கள், யோகிகள், தவ சீலர்கள், ஞானிகள் எல்லாம் எம்மாத்திரம்...அரக்கர் கூட்டத்தின் ஆட்டமாய் ஆட்டம் நீக்கமற நிறைந்து விட்டது. எனவே பஞ்ச பூதங்களும் கூட முடங்கி விட்டன. முடக்கப் பட்டன.

எல்லா கஷ்டமும், எல்லா நஷ்டமும், எல்லா துன்பமும், எல்லாத் தவமும் அனுபவித்து முடித்துவிட்டு இவை எல்லாம் இல்லாமலே தவ வாழ்க்கை வாழ முடியும் இவ்வளவு கஷ்டமும் துன்பமும் அனுபவிக்கத் தேவையில்லை என்று கடைசியில் புத்தரான பின் அவரே சொல்லியதாகவும் உண்டு.

நடக்க முடிந்தளவு நடந்து விட்டு பிறகு இவ்வளவு தூரம் எல்லாம் நடந்திருக்கத் தேவையில்லை என்று சொல்வது போல...ஆனால் பட்ட அனுபவமே சித்தார்த்தனை புத்தனாக்கியது.

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளால் எப்படி தமது விதியை மதி கொண்டும் மாற்றிவிட முடியவில்லையோ அது போலத் தானிந்த சித்தார்த்த கௌதம புத்தரும். அதன் பின் இவருடைய வாழ்வு பற்றி நிறைய முரண்பாடு சொல்லும் இலக்கியச் சரித்திரக் குறிப்புகளும் உண்டு.நள்ளிரவில் எழுந்து சென்று ஞானம் தேடச் சென்றதாகச் சொல்கின்றனரே அதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை அப்படிப்பட்ட எதிர்ப்புகளிடையே அவர் வாழ்வு இருந்தது என்றெல்லாம் கூட முரண்பட்ட குறிப்புகளும் உண்டு.ஆனால் வள்ளுவரை யாரும் பார்த்ததில்லை போலவே அவர் வாழ்ந்து வருவது போலவே புத்தர் வாழ்க்கை வரலாறும் கதையாக சிறுவயதில் படித்தது அவ்வளவுதான் அதை நம்ப வேண்டியதாகிறது. அதன் மேல் எழுப்பப் பட்டிருக்கும் அத்தனி கட்டடங்கள், எண்ணக் கோணங்கள் யாவற்றையும் சேர்த்து.. ஆனால் இதற்கெல்லாம் எல்லாவற்றுக்குமே ஆதாரங்கள் தேடினால் கிடைக்காது. அமிர்தானந்த மயி மாதாவுக்கும், பாபா இராம்தேவுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு இந்திய அரசு கொடுத்திருப்பது போல அந்த நாட்களில் இந்த மகான்களுக்கு எல்லாம் இல்லை, ஏன் எனில் இவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள் உலகுய்ய ஏதாவது மார்க்கம் தேடினார்கள். அசோகர் கூட அதைப் பின்பற்றி வாழ்ந்தார், இராஜ இராஜன் காலத்தில் கூட இந்த மதத்தினர் மக்களுக்கு சேவையாற்றியதாக செய்திகளும் உண்டு. அதை பொன்னியின் செல்வன் கல்கி கதையிலும் காணலாம்.

அந்த சாலை எங்கும் இருமருங்கும் நட்ட மரங்கள் , தேசியக் கொடியில் தேசிய சக்கரத்தில், கிணறுகள், நீர் நிலைகள் நாட்டியவை எல்லாம் உண்டு இந்திய அரசுக்கு வழிகாட்ட ஆனால் இவர்கள் குஜராத்தில் ஒரு நீட் என்பார்கள், மேற்கு வங்கத்துக்கும், கேரளாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் வேறு வகையான நீட் என்று தேசியம் பேசுவார்கள். தமிழகம் தண்ணீருக்காக அலையும் ஆட்சியற்ற கதியற்ற நாடேறிகளால்...ஆம். இந்தியா ஒருவகையில் புத்த மதத்தை பின் பற்றும் நாடு எனவேதான் புத்த பூர்ணிமாவுக்கு விடுமுறை என்பார்கள்...

மொத்தத்தில் புத்தர் சொன்ன கருத்தே அறிவியல் கருத்தாகவும்: ஆற்றல் மாறாக் கோட்பாட்டில் : ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும் சொல்வது போல மனிதம் ஐம்பெரும் பூதங்களுள் அடக்கம் அவை அறிவீயல் கூற்றும் கூட. எனவே இந்த அறிவியல் கூற்றிலிருந்தும் புத்தரது வார்த்தையிலிருந்தும் முரண்பட்ட வாழ்வு வாழும் மனிதம் ஏமாற்றங்களை சந்திக்கும்

ஸ்டீபன் ஹாங்கிங் சொல்வது போல பூமி இனி வாழ இலாயக்கற்ற கிரகம் எனச் சொல்லி மனித குலம் பயந்து வெளியேறி வேறு கிரக வாழ்வை மேற்கொண்டாலும் இந்த தத்துவத்திலிருந்து தப்ப முடியாது.

ஆசையே அழிவுக்கு காரணம்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


2 comments: