Friday, May 19, 2017

+2,10 ஆம் வகுப்பு முடிவுகளில் முதல் மாணவர்கள் என்னும் போட்டி தமிழக அரசால் நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.

+2,10 ஆம் வகுப்பு முடிவுகளில் முதல் மாணவர்கள் என்னும் போட்டி தமிழக அரசால் நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.



அன்றாடம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் அரசு என இன்றைய தமிழக அரசு அழைக்கப்பட்டு வந்த போதும், +2, மற்றும் 10ஆம் வகுப்பு முடிவுகளின் போது முதல் இடங்களைப் பெற்ற பள்ளிகள் , மாணவர்கள் என்ற நிலையை நீக்கியதன் மூலம் மாணவர்கள் மேல் எழும் வீணான ஒரு அழுத்தத்தை இந்த அரசு குறைத்திருப்பது பாரட்டத் தக்கதே.

Image result for venki ramakrishnanRelated image

மேலும் ஆங்கிலம் என்பது அறிவல்ல ஒரு மொழி சார்ந்த அறிவே, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் தமது தாய்மொழிக் கல்வியிலேயே உலகின் முன்னணி நாடுகளாய் வலம் வருவதிலிருந்து ஆங்கிலம் அறியாமை எந்த வகையிலும் அவர்களின் வல்லமைக்கு ஊறு விளைத்திட வில்லை என்பதையும் நினைவு படுத்தி நாமும் நல்வழிக் கல்விக் கொள்கைக்கு மாறுதல் நலம்.

இந்தியா முழுதும் ஒரே பொதுமைப்படுத்தும் கல்வி என்று ஒன்று உருவாகும்போதும் நாடு தழுவிய அளவிலான  தகுதித் தேர்வுகளின் போதும் நமது தமிழ் மாணவர்கள் முற்காலத்தில் எப்படி தமிழகத்திலிருந்து எல்லாத் தேர்வுகளிலும் பிரகாசித்தார்களோ அதே அளவு தமிழகத்து மாணவர்கள் தற்காலத்திலும் இடம் பிடிக்க நிறைய பயிற்சி படிப்புகளை மேற்கொள்ள வழி வகுக்க வேண்டும் அதற்கு சைதை துரைசாமியின் கல்விக் குழுமங்கள் போன்றவை பற்றிய அனுபவப் பகிர்வுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Image result for google pichai

நல்ல தரமான கல்வி சிந்தனையாளர்களை ஒட்டு மொத்தமாக திரட்டி நல்ல கல்வியை வடிவமைக்க முற்படலாம். இந்த நாட்டில் ஆங்கில வழிக் கல்வி, தாய்மொழி வழிக் கல்வி, மெட்ரிக், சி.பி.எஸ்.ஈ என்று பலவகையில் இருக்கும் கல்வி அமைப்புகளில் எது பெரிதும் உதவுகிறதோ அதன் வழியில் நாட்டில் உள்ள மாணவர்களை நெறிப்படுத்தல் வேண்டும்

போட்டித் தேர்வுகளில் நல்ல வாய்ப்பை பெறவும், தொழில் கல்வி முறைகளில் நல்ல பயிற்சி கொடுக்கவும் முற்பட்டு பழைய மெக்காலே கல்வி முறைகளை அடிப்படை எழுத்தறிவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு மனிதனாகவும், சிறந்த கல்வியாளராகவும், சிறந்த தொழில் முனைவோராகவும், எது சிறந்தது எனத் தேர்ந்தெடுக்கத் தெரிந்தவராகவும்,

தனி மனிதத் திறனை மேம்படுத்த  நல்ல கல்வியை கொடுப்பதாகவும் அதற்கு அடித்தளம் அமைப்பதாகவும் நாளடைவில் படிப்படியாக கல்வி முறைகள் மாற்றம் பெறும் பட்சத்தில் மாநிலம் மட்டுமல்ல நாடே நல்ல வளம் பெறும் இல்லையெனில் ஊழல் வளம் பெறுவதன்றி மாற்றமே இல்லை

மேலும் தனியார் வாசம் தனியார் வசம் மிக அதிகம் நெடிதோங்கி வளர்ந்த படி இருக்கிறது இதை கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவர் ஆட்சியை நடக்க விடாமல் முறியடித்து என்றும் நிரந்தர முதல்வர் ஜெ வந்து சமச்சீர் கல்வியை அதன் முயற்சியை சீர் குலைத்தார்...எந்த இனம், மொழி, நாடு,சமயம் சாராமல் சார்பில்லாமல் உண்மையாக உண்மையை திரிபின்றி கல்வி கொடுத்து உலகை நம் வசம் வளைக்கும்  கல்வி கொடுக்க அரசு ஆவன செய்யட்டும் அனைவரும் ஒத்துழைபோம். 64 கிராமில் மிகக் குறைந்த எடையில் விண்கோள் செய்த தமிழகம் இன்னும் என்ன என்ன சாதனை வேண்டுமானாலும் செய்யட்டும் கூகுள்  சுந்தர்பிச்சை, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் வெங்கி இராமகிருஷ்ணன் ஆகியோரை இந்தக் கல்வி முறையிலும் உலக அளவிலான கலாம் போன்ற மாமனிதர்களைப் பெற்ற நாடு மேலும் சாதனைகள் புரியும் அரசியல் வழி விடட்டும்.

Image result for kalam


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments: