Saturday, May 13, 2017

வெற்று நாய்களின் குரைப்புச் சத்தம்: கவிஞர் தணிகை

வெற்று நாய்களின் குரைப்புச் சத்தம்: கவிஞர் தணிகை

Related image


50 பைசா நாணயம் பழைய ஒரு பைசா அளவாக‌, 10 ரூ நாணயம் செல்லாததாக,500ரூ நோட்டு 100 ரூபாயை விட சிறியதாக, ஆயிரம் ரூபா நோட்டே இல்லாமல் 2000 ரூபாய் நோட்டு காந்தியைக் கழட்டி விட்டு மோடியின் ஆப்புடன்...இப்படியாக எல்லாம் ஒரு வகையாக வங்கி வாசலில் வெளிக்குப் போகாமல், சாப்பிடாமல், தண்ணீர் குடிக்க வழியின்றி காத்துக் காத்து தவம் கிடந்த காலத்தின் நீட்சியாய் இன்னும் தொடர்கிற கதைகள் நிறைய உண்டு...அதில் குடி நீர் இல்லா அவதியும் தமிழகத்தின் ஆட்சியின்மையும், நீர் இன்மையும், விவசாயிகளின் மலம் தின்னும் போராட்டமுமாக இவை எல்லாம் மோடி அரசின் பெருமையும் ஜெ நிரந்தர ஆட்சி செய்த பெருமையோ பெருமையும்...


தமிழக அரசுப் பேருந்துகள் அறிவிப்பு இன்றியே பேருந்துக் கட்டணத்தை பாயின்ட் டூ பாய்ன்ட், ஒன், டூ போர் என பேர் வைத்து அதே பேருந்தை அதிக கட்டணத்தில் ஓட்டி வருவது நீங்கள் அறிந்ததே..

அதில் ஒரு நிகழ்ந்த பதிவு:

ஓமலூரில் இருந்து மேட்டூர் ஆர் .எஸ் வர வேண்டிய கோடை நிர்பந்தம். எனக்குத் தெரியும் அந்த ஒன் டூ போர் வண்டி எக்ஸ்ப்ரஸ் கட்டணத்தில் ஓடுவது என்று, அது இசை ஊர்தி என்று வேறு பேரை முன் ஸ்டிக்கரில் முன் கண்ணாடியில் அப்பிக் கொண்டு..

அதே லங்கடா சீட்டுதான், அதே அங்கடா புங்கடா வண்டிதான். ஆனால் ஓட்டுனர் தம்பி கொஞ்சம் தாடியும் சேர 35க்குள் வயதுள்..படு ஸ்டைலாக ஓட்டினார், ஓட்டுவதே தெரியாமல், ஸ்டேரிங் பிடிக்காமலே கூட கைகளை ஒன்றன மேல் ஒன்று வைத்தபடி இருந்தாலும் வண்டி நன்றாகவே சென்றது, கால்மேல் கால் ஒரு கால் மட்டும் ஆக்ஸிலேட்டரில்... எனக்கு கிடைத்தது முன் சீட்டு. எனவே ஓட்டுனரை அவர் செயலை கவனிக்க முடிந்தது.

நான் இறங்கும் இடம் வர சிறிது தூரம் முன்பு: ஒரே வாக்குவாதம்  நான் இது எக்ஸ்பிரஸ் வண்டி என்று சொல்கிறீர் சாதாரணமாகத்தானே இருக்கிறது, எல்லா இடத்திலும் நிற்கிற வண்டிதானே, இதுக்கு எதுக்கு அதிக கட்டணம்? எப்படியும் சாதாரண கட்டணத்தை விட 5 ரூ அதிகம் அதற்கு கொடுத்தால் தான் அந்த வண்டி ஏறி வர  முடியும். இது குறித்துத் தான் ஏதோ வாக்குவாதம் நடக்கிறதோ என இருந்தேன். அது கேட்க வேண்டியதுதான் என இருந்தேன் ஆனால் அதல்ல இந்த விவாதம் வேறு: வயது முதிர்நிலைப் பயணி 10 ரூ நாணயத்தை வாங்கலைன்னா உன் பேர் அடையாளம் எல்லாம் சொல்லி எழுதிப் போட்டிருவேன் என காய்ச்சு காய்ச்சு எனக்காய்ச்சிக் கொண்டிருந்தார்.

நடத்துனரோ பணிவாக வேறு ஒன்றும் செய்வதற்கில்லை, வாங்கினால் நான் அதை தூக்கி எறிய வேண்டியதுதான், என் கைக்காசைப் போட்டுத்தான் கட்டியாக வேண்டும் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்,...ஆனால் அந்த பயணியோ அதெல்லாம் முடியாது இது ரிசர்வ் பாங்க் ஆர்டர் வாங்கியே ஆக வேண்டும் , சர்க்குலர் இருக்கிறது , பாருங்கள் நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என மிரட்டியபடியே இருந்தார்

Image result for foolish india and its people


தனிமனிதரைக் குற்றம் சொல்லிப் பயனில்லை, நீங்கள் வேண்டுமானால் ரிசர்வ் வங்கிக்கு வேண்டுமானால் எழுதுங்கள், ஆனால் மக்களிடம் நடைமுறையில் இந்த 10 ரூ நாணயத்தை வாங்கும்  கொடுக்கும் புழக்கம் இல்லை. ஏன் வங்கியில் கட்டினால் கூட எண்ண முடியாது, வைக்க இடம் இல்லை என்றெல்லாம் சாக்கு போக்குச் சொல்லி தவிர்த்து விடுகிறார்கள். அரசாங்க சர்க்குலர் எல்லாம் சட்ட வடிவுக்கு நல்லா இருக்கு, ஆனால் நாக்கு வழிக்கக் கூட பயன்படாது,நீங்கள் மோடிக்கு,மாடிக்கு எழுதிக் கொள்ளுங்கள் இந்த ஆளை விட்டு விடுங்கள், இவர்கள் எல்லாம் வெறும் கருவிகள் , காய்கள் என என் தரப்பு நியாயத்தை சொல்லி விட்டு இறங்கும் இடம் அதற்குள் வந்து விட இறங்கி வந்து விட்டேன்.


Related image

என்னிடம் ஒரு டவுன் பஸ் நடத்துனர் இப்படித்தான் ஒரு 10 ரூ நாணயத்தை ஒட்ட வைத்து விட, நானும் வாங்கிக் கொண்டு கடையில் கொடுத்தால் வாங்க மறுத்து விட்டனர். நான் பணி புரியும் கல்லூரியில் கூட இப்படி வரும் நாணயத்தை வங்கியில் கட்ட எடுத்துச் சென்றால் அவர்கள் தட்டிக் கழித்து விடுகின்றனர் எனவே தலைமைக் காசாளர் தமது உதவியாளர்களிடம் மக்கள் இந்த 10 ரூ நாணயத்தைக் கொடுத்தால் ஏற்க மறுத்துவிட வேண்டும் என வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது எனக்குத் தெரியும்.

எங்கய்யா இருக்குது ஆட்சி, இறையாண்மை, ரகுராம் ராஜன் இந்த எழவெல்லாம் வேண்டாம் என்றுதான் ஓரங்கட்டி விட்டார், மேல் நாடு மறுபடியும் லண்டனா, பிளைட் ஏறி விட்டார்,

தண்ணீர் எங்கய்யா என்றால் அதான் டாஸ்மாக் ஒயின்கடை இருக்குதுல்ல என மக்கள் போராட்டத்திற்கும் பின்னும் எடுத்து அடித்து உடைத்த பின்னும் அவர்கள் மேல் முதல்தகவல் அறிக்கைப் போட்டு கைது பிடி வாரண்ட் பிறப்பித்து காவல்துறைக் காவலுடன் மதுக் கடை நடத்தும் அரசு தண்ணீர் கொடுக்க வக்கில்லா அரசாகி இருக்க என்னய்யா ஆட்சி, இறையாண்மை, ஆளுமை, கட்சி ... எல்லாம்....

மக்கள் மதிப்பதில்லை, மத்திய மாநில ஆட்சி விதிகளை, மாநில மத்திய அரசுகள் மதிப்பதில்லை மக்கள் கருத்துகளை...இணக்கமேயின்றி இணை கோடுகளாய் போய்க் கொண்டிருக்கின்றன மக்களது வாழ்வும் நாட்டின் ஆட்சிகளும்.

Related image

இதில் நீட் வேறு தோட்டைக் கழற்று, ஹேர்பின்னை பிடுங்கு என அதில் எல்லாம் எலக்ட்ரானிக் டிவைஸ் வைத்து செருகிக் கொண்டு தமிழகத்தில் இருந்து நிறைய பேர் தேறி விடுவார் என மத்திய அரசு நினைக்கிறதாம்... ஒரு புறம் திராவிடக் கட்சிகள் ஒழிந்தன, இனி பி.ஜே.பிதான் என பிதற்றும் தலைவர்கள், தலைமைகள் கடைசி அந்திமக் கட்டத்தில் இருக்கும் தி.மு.க கட்சியின் நிரந்தரத் தலைவர் பேசிப் பேசி ஓய்ந்து ஊழல் செய்து ஒருக் குடும்பமே ஆட்சி வகிக்க தகுதி பெற்றது என வாழ்ந்து ஓய்ந்த முதிர்ந்த‌ பழம் பேச முடியா நிலையில் அரசியலுக்கு வந்த நாளை முதலாகக் கொண்டு மணி விழா நடத்துகிறதாம் அதற்கு அழைப்பு இல்லையே என ஏங்குகிறார் தமிழிசை பி.ஜே.பியின் தன்னிகரில்லாத் தலைவி நிரந்தர முதல்வர், எனச் சொல்லி 75 நாளுக்கும் மேல் தான் என்பதறியாமல் அப்படியே மக்கிப் போன அந்தக் கட்சியின் நிரந்தரக் குற்றவாளித் தெய்வத் தலைவர் போல...

Image result for foolish india and its people


கர்ணன் வெர்ஸஸ் உச்ச நீதிமன்றம், அர்விந்த் கெஜ்ரிவால் வெர்ஸஸ் எலக்ட்ரானிக்க் ஓட்டிங் மெஷின் வித் தேர்தல் கமிஷன் , மோடியும் இந்தியும், தமிழக எடப்பாடியும் ஓபி எஸ்ஸும் இப்படி எல்லாமே நம்பிக்கை இல்லாமலேதான் போய்க் கொண்டிருக்க காலமும் ....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: