நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்து விட்டால்: கவிஞர் தணிகை
புளி மூட்டை மாதிரி உடலை வளர்த்திக் கொண்டு கேட்டால் உடல் வாகு அந்த மாதிரி என்னும் சோம்பேறிகள் பொது இடங்களில் அடுத்தவர் இடத்தில் அடைத்துக் கொள்வதும்,பேருந்தில் பயணம் செய்வதும் அதனால் அடுத்தவர் நலத்துக்கு ஊறு விளைப்பதும் மனித குலக் கோட்பாடுகளுக்கே ஏற்புடையதல்ல.
ஒரு அதிகம் படிக்காதவரின் கமென்ட்: பாரு வயிற்றை இவனுக்கு எல்லாம் 2 டிக்கட் போட வேண்டும் என சத்தமாகவே சொல்லி சண்டையை விலைக்கு வாங்கிக் கொள்வார் போலிருந்தது அந்த நபர்.
வேட்டியை தொடை வரை ஏற்றிக் கட்டிக் கொண்டு அப்படியே பேருந்தில் ஏறி தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுகிறேன் என பக்கத்தில் உள்ளவர் வேட்டியை அவிழ்த்து விட்டு அமருங்கள் என்றாலும், அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் ,என அடமாக அவிழ்த்து அமராமல் இருக்கும் நாகரீகமற்றதுகள்,
அடுத்தவர் இடம் அளித்தவுடன் , அவரை அவர் இடத்திலிருந்தே தள்ளி விடுவது போல கால்களை விரித்தபடி அமர்ந்து கொண்டு அவர் தள்ளி விட்டதற்கு இவர் எதிர்ப்பாக கொஞ்சம் தள்ளி விட்டால்
அவருக்கே தெரியும் கொஞ்சம் ஆங்கில அறிவை பயன்படுத்தி, யூ டோன்ட் நோ ஹவ் டூ பிஹேவ் இன் பப்ளிக், தள்ளறே, சொல்ல வேண்டியதுதானே? பிலட்டி பாஸ்டார்ட், கன்ட்ரி புரூட், வயசு ஆகிறதே தவிர யூ டோன்ட் நோ ஹவ் டூ பிஹேவ் இன் பப்ளிக் ப்லேஸ் என அந்தப் பேருந்துக்கே கேட்குமளவும் அனைவரும் இவர் ஒருவர்தான் நன்கு படித்தவர், மிகவும் எளிமையாக இருக்கிறார் எவ்வளவு படித்தவராக இருந்தாலும் வேட்டி சட்டையில் இருக்கிறார் என் ஆங்கிலம் கொஞ்சம் உளறத் தெரிந்ததை வெளிக்காட்டி மிகவும் பெரிய ஆள் எனக் காட்டிக் கொள்வது... இவர் தள்ளி விட்டதுக்கு பதிலாகத் தான் அந்த மனிதர் கொஞ்சம் தள்ளினார் என்பதே மறந்து போக..இவர் மிருகமாக ஒரு பொது இடத்தில் அந்த மனிதரை முட்டாள். பொது இடத்தில் நடந்து கொள்ளத் தெரியவில்லை என்பதும், முட்டள் தேவடியா மகனே என்றெல்லாம் சொல்லலாம என்பதெல்லாம் தெரியாமல் இருப்பது...இப்படியான மனிதர் என்னும் போர்வையில் மிருகங்கள்
ஜன்னலிடை இன்னும் காறி காறித் துப்புவதும் , இன்னும் வாந்தி வந்தாலும் வரட்டும் அதை சமாளிக்க முன்னேற்பாட்டுடன் வராததுகளும், அடுத்தவர் மேல் தூங்கி தூங்கி விழுகிறதுகளும்,
பேருந்தி மீறினால் ஒரு மணிப் பயணத்தில் கூட திறந்த வாயை மூடாமல் தூங்கிக் கொண்டே நடத்துனர் இடம் வந்து விட்டது இறங்கு என்றாலும் இறங்க முடியாததுகளும்
மது அரக்கன் உள் தள்ள, படிக்கட்டில் இருந்து மேல் ஏற முடியாமல் அனைவரையும் திட்டிக் கொண்டே வருவதுகளும்...
கொஞ்சம் தொலைவுக்கும் கூட இருக்கும் நகரப் பேருந்துள் ஏறாமல் பிற வழித்தடப் பேருந்தில் ஏறி அனைவரையும் தொல்லைக்குள்ளாகுவதும்,
தனியார் பேருந்தில் மட்டுமே ஏறுவோம், கூட்டம் இருக்கும் பேருந்தில் மட்டுமே ஏறுவோம் என்று பயணம் செய்யும் சிறு வயது விடலைகளும்
திருவிழா என்ற பேரில் நடைபெறும் கூட்ட நெரிசலில் நாலைந்து இளைஞராக சேர்ந்தபடி செல்பேசியை கையில் வைத்தபடி அனைவரும் பார்க்க அதிசயம் செய்வார் போல யாரும் அருகே இல்லாதது போல நகர்ந்து நகர்ந்து அனைவருக்கும் தொந்தரவாகி படம் எடுப்பது போல அடுத்தவர்க்கு தொல்லை கொடுக்கிறோம் என்ற சிந்தனையே இல்லாதது போல நடித்துக் கொண்டு தொல்லை கொடுப்பது...
கண்டதை தின்று விட்டு, கண்டதை பயன்படுத்திவிட்டு அதன் குப்பையை கண்ட இடத்தில் அப்படியே போட்டு விட்டு மிகவும் இன்பமாக இருப்பதாக காட்டிக் கொள்வது...
, அயோக்யத்தன மிருகங்களே நீங்கள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, மலேசியா, சிங்கப்பூர் வளர் சிறுவர் சிறுமிகளைப் பார்த்தால் தாம் உங்களுக்கு எல்லாம் புத்தி வரப் போகிறதா என்ன? அவர்கள் தாம் உபயோகப்படுத்தியதை மட்டுமல்ல அடுத்தவர் உபயோகப்படுத்தி எறிந்ததையும் கூச்சமின்றி எடுத்து சேர்த்த வேண்டிய இடத்தில் சேர்த்தி விடுகிறார்கள்...குப்பைத் தொட்டியை சரியாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மனிதராக இருக்கிறார்கள். நீங்கள் குப்பையாகி இருக்கிறீர்கள். கேட்டால் இது இந்தியக் கலாச்சாரம் என்கிறீர்,
காவிக் கட்சி வெறி, இன வெறி, மொழி வெறி, மத வெறி என்றெல்லாம் ஏதோ சொல்லி நாசமாகி வருகிறீர், நாட்டை நாட்டு மக்களை நாசமாக்கி விடுகிறீர். எதெல்லாம் முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எதெல்லாம் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்
மாறாக எங்கு வேண்டுமானாலும் அதென்ன பழக்கம் எச்சில் துப்பி வைப்பது, குப்பையை விட்டெறிவது...?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இன்னும் நிறைய....சுமார் ஓராண்டு காலத்துக்கும் மேலாக பேருந்தில் போவதும் வருவதுமாக ரயிலில் வருவதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்க நிறைய நட்புகள், நிறைய வாழ்க்கைகள் நிறைய மனிதர்கள்...அதில் இந்த மாதிரியான அனுபவங்களும்.
இப்படியாக நிறைய மனிதர்களையும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது, அடிதடி தகராறு, காவல்நிலையம் எல்லாம் தேவையில்லை என அடக்கி வாசித்து நிறைய சந்தர்ப்பங்களை, சம்பவங்களாக்காமல் அமைதியாக விட்டு விட்டு பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது.
சில்லறையை திட்டம் போட்டே அமுக்கப் பார்க்கும் நடத்துனர்கள், அவர்களின் உதவியாளர்கள், தினமும் அந்தப் பேருந்தில் ஏறும் 500 பேரிடம் அமுக்கினால் அந்த ஒரு நாளில் எந்த வித முயற்சியுமின்றியே வருவாய் 500 ரூ வந்து விடுகிறதே என்னும் நபர்கள்,
சில்லறை ஒரு ரூ குறைவாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளும் நடத்துனர்கள்...
போனிலேயே பொண்டாட்டியை பேருந்து சென்று அடையும் வரை திட்டித் தீர்த்து விடும் கணவன்கள், அழுத படியே பயணம் செய்யும் பெண்கள், மேலும் அது எப்படி எனக் கேட்டுக் கொண்டே புருஷனிடம் சண்டை போனிலேயே நடத்தியபடி ஊருக்கு புறப்பட்டு செல்லும் பெண்களும், அடுத்து ஊர் சென்று சேர்ந்ததும் என்ன ஆகியிருக்கும் தற்கொலையாய் முடிந்திருக்குமோ என நாம் பயப்படும்படியான வார்த்தைகளுடன்....
இப்படியும்... பயணம்..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அடக்கி வாசித்து நிறைய சந்தர்ப்பங்களை, சம்பவங்களாக்காமல் அமைதியாக விட்டு விட்டு பயணம் செய்ய வேண்டியதிருக்கிறது.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
thanks for your feedback on this post vanakkam
ReplyDelete