Thursday, May 11, 2017

இந்தியாவின் வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி ஏற்றமும்: கவிஞர் தணிகை

இந்தியாவின் வேலை இல்லாத் திண்டாட்டமும் விலைவாசி ஏற்றமும்: கவிஞர் தணிகை.
Image result for unemployment problem and price rise problems in india and Tamil Nadu



மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி,ஓடி ஓடி ஆடி ஆடி ஆட்சி செய்கிறார்கள் ஐ மீன் ஆட்சி செய்வதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கிலோ சின்ன வெங்காயம் 90 ரூபாயிலிருந்து 120 ஆகிவிட வாங்கும் மாத சம்பளமோ தனியார் பள்ளிகளில் மெத்தப் படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கே கூட மாதம் இரண்டாயிரம் என்றிருக்கிறது.

அட, அது அவங்க போக்கு வரத்துக்கே கூட போதாதே அய்யா என்றால் வேண்டும் என்றால் வரட்டும் இல்லை என்றால் படித்த நிறைய பேர் இருக்கிறார்கள், கிடைக்கிறார்கள் என்பது பதிலாக இருக்கிறது.

கேரளாவில் எல்லாம் படித்த மாநிலம் என்பதால் 90 சதவீதத்துக்கும் அதிகம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே எங்கும் இடம் கிடைக்கும். வேலையும் கிடைக்கும். படிப்பும் படிக்க முடியும்.



அது போலவே தமிழகமும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. எப்படி கேரளத்து ஆண்களும் பெண்களும் எல்லா வேலைக்கும் நாடெங்கும் பரவி உலகெங்கும் விரவி கிடக்கிறார்களோ அதன் அடுத்த நிலையில் தமிழர்களும் வந்து விட்டனர், தமிழகமும் வந்து விட்டது.


Related image

தமிழகத்திற்கு என்ன கேடு காலமோ குடி நீருக்கும் பஞ்சம், நீர் வளமே அறவே இல்லை, விவசாயம் பூஜ்யமாகிவிட்ட சூழ்நிலையில் எந்தக் காய்கறியை எடுத்தாலும் கால் கிலோ 20 ரூபா என்கிறார்கள். காய்கறி வாங்கி உண்ணாவிட்டால் பலனில்லை, வெறும் அரிசி உணவைச் சாப்பிட்டு சர்க்கரை  நோயை அனுமதிக்காதீர்கள் என சுகாதாரம் சொல்கிறது.

தேங்காய் விலை 20 ஆகிவிட்டது, எல்லா தென்னைகளும் நீரின்றி கருகி விட்டன இந்த நிலையில் படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதில்லை கிடைத்தாலும் சம்பளம் போதுமான அளவு இல்லை.

மாதம் முழுதும் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு பதினைந்தாயிரம் கூட ஊதியம் இல்லை என்றால் அவரும் அவர் குடும்பமும் எப்படி வாழ முடியும்?

ஆனால் கார்பென்டர், எலக்ட்ரீஷியன், பிலம்பர், கட்டுமான வேலைகளில் பல்வேறுபட்ட பணிகளைச் செய்வோர் அனைவருக்கும் ஏகப்பட்ட டிமான்ட். ஏகப்பட்ட ஊதியம் வாங்கி டாஸ்மாக்கில் கொடுத்து உடலைக் கெடுத்து உலகைக் கெடுத்துச் செல்ல... விவசாயம் செய்ய ஆள் இல்லா நிலை. நாட்டின் முதுகெலும்புத் தொழில் இன்று கூன் விழுந்து விவசாயி மூத்திரம் குடித்து, நிர்வாணமாக மலம் தின்று அவமானப்பட்டும் டில்லி அரசிடம் ஏதும் சாதிக்க முடியா அவலம்.

நேற்று முளைத்து  மூன்று இலை விடாத இரண்டு விடலைப் பயல்கள் மோட்டார் சைக்கிளில் இரவு 8 மணி சுமாருக்கு சித்ராபௌர்ணமி நிலவொளி நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த என்னிடம் மிக முக்கியமாக விசாரிக்கின்றனர். டாஸ்மாக் மதுபானக் கடை எங்கே என்று? நாட்டுக்கு மிக அவசீயம் பாருங்கள்....

மக்களின் எதிர்ப்பை சட்டை செய்யாமல் கடையை அடித்து உடைத்தாலும் மறுபடியும் அதே இடத்தில் காவல் துறைத் துணையுடன் அங்கேயே மதுபான அரசுக் கடையான டாஸ்மாக் வந்து விடுகிறது. அரசின் கொள்கை அப்படி.  ஆனால் குடி நீரைக் கொடுக்க துப்பில்லை.

என்னைக்கு நாட்டில் குடி நீரை பாட்டிலில் அடைத்து ஒரு சந்தைப்பொருளாக விற்பனைக்கு கொண்டு வந்தார்களோ, அதை அரசு அனுமதித்ததோ அப்போதிருந்தே நாட்டுக்கு இந்த இந்திய எழவு எடுத்த நாட்டுக்கு ஏழரைச் சனி பிடித்து விட்டது. சனீஸ்வரன் கூட இப்படி திட்டுவது பற்றி தம் பேரை உபயோகிக்கிறார்கள் என கோபித்துக் கொள்வார். இருந்தால்.

Image result for unemployment problem and price rise problems in india and Tamil Nadu
படித்த பிள்ளைகள் வெளி நாட்டுக்கு சென்றால் பணம் பார்க்கலாம். இல்லாவிட்டால் இங்கே செத்த பிணமாகிவிட வேண்டிய நிர்பந்தங்கள் வேலை இல்லாத் திண்டாட்டமாகவும், பெருகி வரும் மக்கள் நெருக்கமாகவும், விலைவாசி ஏற்றமாகவும்.. இந்த காலத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இங்கு நேர்ந்திருக்கிறது.


பேயாய், பிசாசாய், அரக்கனாய் தலைவிரித்தாடும் பிரச்சனை இது இதைக் கண்டு கொள்ளாமல் குஜராத்துக்கு ஒருமாதிரி தமிழகத்துக்கு வேறு மாதிரியாகவும் நீட் தேர்வை நடத்தி இந்த மாநில மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறதாம் இந்த மோடி மஸ்தான் அரசு.


 மனுசனை மனுசன் சாப்பிடாறான்டா தம்பிப் பயலே, நிலை மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ப கவலை...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: