Sunday, May 7, 2017

தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது? கவிஞர் தணிகை

தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது? கவிஞர் தணிகை

Image result for water scarcity in tamilnadu

10 சொம்பு நீரைக் கணக்கிட்டு எடுத்து ஒரு கல் மேல் நின்று 7 சொம்பு நீரால் மொண்டு குளித்து மீதம் 3 சொம்பு நீரை சேமித்தேன். அந்த குளித்த‌ 7 சொம்பு நீரும் கூட மறு சுழற்சி முறையில் செடிகளுக்கு சென்று சேரும்படிதான் குளித்தேன். இத்தனைக்கும் நான் காவிரிக்கரையில் பிறந்தவன், வாழ்ந்து வருபவன், மேட்டூர் அணை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமே நீர் கொடுக்கும் தாய் மடி.... இங்கேயே இப்படி என்றால் எப்படி எல்லா இடங்களிலும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்? இவர்கள் ஆண்டதன் மகிமை இதுதான் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த வன் கொடுமையை இன்று அறுவடை செய்கிறது மானிடம்.

அடக் கொலை பாதகர்களா, கொடும்பாவிகளா, தமிழகத்திற்கு இப்படியுமா ஒரு கொடுங் கோடையும் பெரும் தண்ணீர்ப் பஞ்சமும் கொடுப்பீர்கள்? அரசியலைப்பற்றி எழுத வேண்டுமா? என்ன எழுதுவது? அவனவன் பாகுபலிபற்றி எழுதி அந்த ஒரு குடும்பத்துக்கே ஆயிரக்கணக்கான கோடி சேரவேண்டி ஆர்வமாயிருக்கிறான். அவனாவது பரவாயில்லை முதலைப் போட்டான், அறிவைப் பயன்படுத்தி உழைத்து மக்களின் சினிமா மாயையை பயன்படுத்தி இலாபம் எடுக்கிறான்.

அதே சினிமா மாயையை வைத்து அரசியலுக்கு வந்து முதலிடாமலேயே கொள்ளையடித்து கொள்ளையடித்து வெள்ளாமையை நாசம் செய்து விட்டீர்களே உங்களைப் பற்றி என்ன எழுதுவது,? ஏன்டா எடுத்த  அதே இடத்தில் மதுக்கடையை திறக்கத் தெரிந்த அரசுக்கு அதே போலீஸ்காரர்களை வைத்து குடிக்க நீரில்லாதார்க்கு கொஞ்சம் குடி நீர் எடுத்துக் கொடுக்க செய்வதுதானே?


Image result for water scarcity in tamilnadu

காவிரியை  ஜீவ நதியை  பொன்னி நதியை அகத்தியர் அவள் கர்வம் கொண்டதால் கமண்டலத்தில் அடக்கி வைக்க விநாயகர் வந்து காக்கை ரூபத்தில் தட்டி விட்டு ஜீவ நதியாக்கிய கதை எங்கே அய்யா போவது? இந்த பொன்னி நதி ஜீவனற்றுப் போய்விட்டது.... காவிரி கரை புரண்டு ஓடுவாள் என்ற மெய்க்கூற்று பொய்க் கூற்றாக போயிற்று.

எல்லாம் மனித அரக்கத் தனம். கெமிகல் மாயம், ஒரு புறம் தனியாருக்கு நீரை விற்று விட்டு தீர்ந்த பின்னே எந்தக் கம்பெனியும் இனி தொழிற்சாலைக்கு நீர் எடுக்கக் கூடாது என்ற மாய்மாலம். இன்னும் சேலம் இரும்பாலைக்கு நீர் சென்றபடிதான் இருக்கிறது அதற்குள் இருக்கும் வட நாட்டு வசதியான வேலைக்காரர் எல்லாம் வசதியாக நீரை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் கையருகே இருக்கும் அணையை தாய் மடியாய் எண்ணிக் கொண்டிருக்கும் மேட்டூர்க்காரர்களுக்கே
நீர்ப் பஞ்சம் , கோடையின் கொடுமை சொல்லில் வர இயலா அளவு.

கால்நடைகள் செத்து விழாமல் இருக்க வேண்டுமானால் காசுக்கு டேங்கரில் குடிநீர் வாங்கி அதைப் பிழைக்க வைக்க வேண்டிய நிர்பந்தம்.

இந்நிலையில் பன்னீர் கொப்புளித்தா பன்னீர், எடப்பாடி வந்தா கூட்டம் வேண்டும், ஸ்டாலினை முதல்வராக விட மாட்டோம், இளவரசன் என்றும் இளவரசந்தான் மன்னனாக முடியாது, உதய நிதி ஸ்டாலின் அரசியலில் இறங்குகிறார், நக்மா பேரறிக்கை, ட்ராபிக் இராமசாமி அரசியல் மாற்றம் வேண்டி கோரிக்கை  இப்படியாக போய்க் கொண்டே இருக்கும் எமது தமிழக அரசியலில் இனி தி.மு.கவும். அ.இ.அ.தி.மு.கவுக்கும் வழியில்லையாம், பொன் இராதாகிருஷ்ணன் பா.ஜ.பார்ட்டிக்குத்தான் இனி தமிழகமாம் சொல்லி வாய் மூடும் முன் ஒரு செருப்பு அவருக்கு வீசப்பட்டு, அதுவும் அரசியல் சதிதான் எனப் பேசுகிறார், எனக்கென்ன வேறு வேலை இல்லையா என்கிறார் குமரி அனந்தனின் செல்வக் குமரி தமிழிசை. அவர் மதுக்கடைக்கு எதிராக புது விழிப்புணர்வூட்ட நடைப்பயணம் செல்கிறார், தம்பி வசந்த் அன் கோ தமிழகத்தில் வியாபார மறுமலர்ச்சிக்கு வித்திடுகிறார், ஸ்டாலின் வாரிசு நயன் தாரா, கனிஷ்கா போன்ற இளங் குமரிகளுடன்  படம் எடுத்து ஓய்வில் அப்பாவுக்கு துணை நிற்க சூளுரை செய்கிறார்.
Related image


என்னைக்குத் தான்டா தமிழகம் திருந்தப் போவுது? ஒரு நண்பர் சொல்கிறார் கம்யுனிசத்தில் தான் சக மனிதரை தோழர், தலைவரை கூட காம்ரேட் என்னும் பழக்கம் எல்லாம், வேறு எந்தக் கட்சியிலும் தலைவன், தொண்டன் இராஜா மந்திரிதான், இப்படி நாறி நாசமாகப் போய்க் கொண்டே.................. இருப்பதால் தாம் இதை எல்லாம் இப்போது எழுதுவதே இல்லை. எழுதி மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்கிறீரா? அதுவும் சரிதான்.

எனவே தான் சேவை, தொண்டு, நம்மால் முடிந்த பணி என சிறிய அளவிலாவது நம்மால் என்ன முடிகிறதோ அவ்வளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்து சாதனையாளர் எல்லாம் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

நிர்ப்யாவுக்கு 4 பேர் மரண தண்டனை, அவளின் பெற்றோர் அன்றுதான் நன்றாக தூங்கினார்களாம், இங்கு தமிழகத்தில் எதையும் கேட்க நாதி இல்லை. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அப்போதே அறிஞர் அண்ணா போன்றோர் அறைகூவினர், ஆனால் அதிலும் தமிழகத்தில் யாவரும் தண்ணீர் இன்றி செத்து சுண்ணாம்பானால் கூட இந்த மோடி அரசும், இந்த  ஜெ அரசும் எதையும் செய்யப் போவதில்லை போலிருக்கிறது.

எடப்பாடி தூர் வாருகிறேன் என வார்த்தை விட்டிருக்கிறார். பார்க்கலாம் எப்படி இந்த குடி நீர்த் தேவையை எல்லாம் இவர்கள் சமாளிக்கப் போகிறார்கள் என்று? மகமாயி,மாரி, மனசு வைச்சா, மழை பொழிந்தா உண்டு என எங்கெங்கும் மாரியம்மன் திருவிழாக்கள் நடந்து விட்டன.அப்போதும் அக்னி நட்சத்திரக் காய்ச்சல் சொல்ல மாளவில்லை


Image result for water scarcity in tamilnadu

பூமியில் நிலத்தடி நீர் இல்லை , நீர் நிலைகளில் நீர் இல்லை. பூமியில் குடி நீர் நிலைகளில் இருந்தால் தானே ஆவியாகி குளிர்ந்த காற்று பட்டு மழையாக பொழியும் ஆனால் எல்லாம் வறண்ட பின்னே எப்படி எந்த நீர் ஆவியாகும்? எந்த குளிர்ந்த காற்று படும்,? மழை வரும்? நீர் நிலை வரும்...இந்த  நீரின் சுழற்சியே கத்தரிக்கப்பட்டு விட்டது.

Related image

மழை இனி புயல் மழையாக கடலில் இருந்து வாரிக் கொடுத்தால் தான் அல்லது பருவக் காற்று என எங்கிருந்தாவது எடுத்து வந்தால் தான்...

அதற்கும் இயற்கைக்கும் பெரும் தொடர்பு, அது மனிதரை அரசை நாட்டை மீறியது
Related image
இந்த சிறுமைக் குணம் படைத்தவர் மாறமாட்டார் தேறமாட்டார், இதைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் கால விரயம். அடுத்தவரையும் மேல் ஏறி ஆள விடமாட்டார், அப்படி மக்களும் மக்களாய் இருந்து வாக்களிக்க மாட்டார், அதை எந்த அரசு நிறுவனமும் பரிசீலிக்காது ...எப்படியோ நாடும் மக்களும் நாசமாகப் போகட்டும் போ....வீரப்பா....



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை. 

4 comments:

  1. விரக்தி வேண்டாம் நண்பரே
    காலம் மாறும்

    ReplyDelete
  2. மனவருத்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது

    ReplyDelete
  3. thanks veka nari...veka nariyaar? for your feedback on this post. vanakkam.

    ReplyDelete