Wednesday, May 27, 2020

14 உண்மையின் கதை பதினாலு: கவிஞர் தணிகை

14 உண்மையின் கதை பதினாலு: கவிஞர் தணிகை


give and take meaning in relationship Archives | organicgenius
. அவர் எனது சகோதரியின் வீட்டுக்கு குடி வந்தார். பக்கத்து வீடும் கூட. எனவே பழக வேண்டிய நிலை. அவர் காவல் துறையில் துணைக் காவல் ஆய்வாளராக உள்ளூர் காவல் நிலையத்தில் பணி புரியவே அங்கு வந்து சேர்ந்திருந்தார். அவர் ஏன் காவல் துறையிலும் இலஞ்ச ஊழல் இடம் பெற என்ன காரணம், அதற்கு மேலிடமும் எப்படி ஒரு அடிப்படையாக இருக்கிறது என்பது பற்றி எல்லாம் பொதுவாக பேசுவார் அதன் மின் கட்டணம், கைதிக்கு வாங்கித் தரும் உணவு , போக்குவரத்து, உயர் அதிகாரிகள் வரும்போது ஏற்படும் செலவினங்கள் அதற்கு அரசு தரும் குறைவான பணப் படிகள் போன்றவை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்திருந்தோம். நான் அப்போதும் காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கத்தில் மரம் நட்டுக் கொண்டும் அழைக்கும் இடத்திற்கு சென்று உரை வீச்சு நிகழ்த்திக் கொண்டும் இருந்தேன். அதன் அழைப்பிதழ் கூட அவருக்கு அளித்த நினைவு உண்டு.

அவர் அங்கு வரும்போது இருவராக இருந்தனர் கணவர் மனைவி என. நாளடைவில் மனைவி தலைப்பிரசவத்துக்காக ஊருக்கு சென்றிருந்தார். எனது தாய் தெய்வா வயது முதியவர். எனவே அவ்வப்போது அவரிடம் எதார்த்தமாக குழந்தை பிறந்து விட்டதா என விசாரிப்பார்.

அதற்கு அவர் சாலையில் தூளி கட்டி எல்லாம் பிரசவம் பார்ப்பவர் இல்லையா அம்மா? பாருங்க உரல், அம்மி ஆகியவற்றை கல்லால் செய்பவர் ஊர் விட்டு ஊர் மாறி மரத்தடியிலேயே காலம் கழிக்கின்றனர் அவர் பெண்டு பிள்ளைகளுக்கு எல்லாம்
மரத்தடியிலேயே பிரசவம் அந்தக் குழந்தைகள் நன்றாக இல்லையா என வேடிக்கையாக அல்லது குதர்க்கமாகப் பேசுவார்.

எனக்கும் கூட இலஞ்ச இலாவண்யமின்றி ஒரு சிறு வரவு செலவில் நிகழ்ந்த ஒரு வேண்டா வெறுப்பான நிகழ்வை முடித்து வைக்க உதவினார். அப்போது காவல் நிலையத்தில் என்னை அதற்காக காத்திருக்க வைத்த போது எனது தாய் எனக்கு குடல்புண் எல்லாம் உண்டு நேர நேரத்துக்கு சாப்பிட வேண்டும் கொஞ்சம் சீக்கிரம் அனுப்பி வையுங்கள் என்றெல்லாம் சொன்னார்.

அடுத்து சிறிது நாட்கள் கழித்து குழந்தையும் கையுமாக அவரின் மனைவி ஊர் வந்து வீடு வந்து சேர்ந்தார். ஆண்குழந்தை கைக் குழந்தை. முதலில் அவரது மனைவி சாதாரணமாகக் கூட அல்ல எதற்குமே வெளியே வந்து பேச மாட்டார். அவர்கள் குடும்பத்துக்கு கடைக்கு எல்லாம் செல்ல அருகிருந்த ஒரு அஞ்சலை என்ற முதிய வயது பெண் துணை செய்வார்.

அப்படி இருந்த காலக் கட்டத்தில் ஒரு நாள் இரவு சுமார் 9.30 மணிக்கும் மேல் 10 மணி கூட இருக்கலாம். அவர்கள் வீட்டில் இருந்து கடுமையான அடிக்கும் சத்தம்.அலறும் சத்தம் , ஏண்டி அப்படி சொன்ன? ஏண்டி அப்படி செஞ்ச‌ எனக் கேட்டுக் கேட்டு பல முறை அதையே கேட்டு பெல்ட் மற்றும் கைகளாலும் அந்த நபர் அவரது மனவியை அடித்து துவைத்துக் கொண்டிருந்தார். சத்தம் வெளியே கேட்க ஆரம்பித்து விட்டது.

நான் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெறப் போகிறது அதற்குள் தடுக்க வேண்டும் என பதை பதைத்தேன். நான் போய் இடையுற்றால் உனக்கென்னடா போடா என மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டால் என்ன செய்வது என்று வேறு குழப்பம். அவருக்கும் மதுப் பழக்கம் இருக்கலாமோ என்ற சந்தேகமும் இருந்தது.

எனவே நைஸாக எனது தாயை அனுப்பி அம்மா நீ சென்று பேச்சுக் கொடு அதன் பின் நான் வந்து விடுகிறேன் என அனுப்பினேன் அம்மா வயதானவர் என்ற முறையில் அவரை ஏதும் அவமானப்படுத்த வாய்ப்பில்லை  எனப் பேசச் செய்தேன். அது நல்லபடியாக முடிந்தது. அம்மாவும் சென்று ஆரம்பித்தார் நானும் என்ன சார் ஸ்டேசனில் கைதியை அடிப்பது போல மாட்டை அடிப்பது போல இப்படி அடிக்கிறீர் ஏதாவது படாத இடத்தில் பட்டு ஏதாவது ஆகிவிடப் போகிறது எனத் தடுத்தோம் அந்தக் கதவு திறந்த வாய்ப்பில் அந்த அடி வாங்கிய மனைவி அடி தாங்க மாட்டாமல் உடனே ஓட ஆரம்பித்து விட்டார். சுமார் 100 அல்லது 200 மீட்டர் அந்த இரவிலும் சென்று இருப்பார் அந்தக் கைக் குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றாரா இல்லையா என்பதும் இப்போது மறந்து விட்டது.

நான் எனது துணைவியை சென்று அந்த இரவில் எங்கு போவார் என ஓடித் தடுத்து அழைத்து வரச் சொன்னேன். நிலைமை கட்டுக்குள் அடக்கப்பட்டது. அன்று மேலும் ஏதாவது நிகழ்ந்திருந்தால் அந்த பிள்ளைத் தாய்ச்சிப் பெண் இறந்தே கூட போயிருப்பார். அந்த ஆபத்து எங்களால் தவிர்க்கப் பட்டது.

அதன் பின் அவர் வேறு காவல் நிலையத்துக்கு மாறுதல் ஆகி இடை நீக்கம் செய்யப் பட்டு சேலத்தில் ஒரு வேல் கண்காணிப்பாளராக இருந்து அவரிடம் நிறைய பணிச் சிக்கல் ஏற்பட்டதாகவும் உடலளவில் காயங்களுடன் வந்திருந்தார் வாகனத்தில் இருந்து விழுந்து விட்டதாகவும் கூறினார். ஆனால் எம் குடும்பத்தோடு நல்லுறவு பாராட்டினார்.

இதே போல  முதுகலை பட்டம் பெற்ற பெருமைக்குரிய மற்றும் ஒரு காவல் ஆய்வாளர் மகனும் எனது மகனும் சிறு வயதில் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். அவரது துணைவியார் மிக நல்லவர் என்று பேர் பெற்றிருந்தார். ஆனால் கொஞ்ச நாளில் அவர் மனைவி எரிக்கப்பட்டிருந்தார் என கொடுமையான செய்த் ஒன்று காதில் விழுந்தது.
Meaning of steemit ...... just give and take
அதே போல காவல் துறை பணி புரிவோரில் பல அல்லது சில குடும்பங்கள் ஆகிவிட்ட கதையும் நாளானாலும் என் நெஞ்சில் மறவாது இருக்கிறது ஏன் என்றுதான் எனக்கும் விளங்க வில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment