Saturday, May 2, 2020

Part IIIஉண்மையின் கதை மூன்று: கவிஞர் தணிகை

உண்மையின் கதை மூன்று: கவிஞர் தணிகை
John Maeda Quote: “If you have no fear, no one has power over you ...சரியாகச் சொல்ல நினைவில்லை. அப்போது 7 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கலாம் என நினைக்கிறேன். எங்களது குடும்பத்தின் முதுகெலும்பாக இருப்பதாக மூத்த சகோதரர் ஒருவர் எண்ணிக் கொண்டு அவர்கள் நண்பர்கள் வீட்டில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான்,ஆனால் அவர்களுக்கு காடையாம்பட்டியில் நிறைய நிலபுலன்கள் சொத்து சுகம் எல்லாம் உண்டு. பெரிய முதலாளிமார்களுக்கே அவர்கள் கடன் கொடுத்து வட்டி வாங்கிக் கொண்டிருந்த நிலையில்...

அவர்கள் சேலத்தில் ஒரு நெடுங்காலமாக சீட்டு நடத்தி வரும் ஒரு மூன்றெழுத்து ஆங்கில எழுத்துடன் இருக்கும் சீட்டு கம்பெனியில் சீட்டு போட்டார்கள்... ஒருவகையில் அவர்கள் இவர்களுக்கு எல்லாம் சொந்தக் காரர் என்றும் கேள்வி.

உடனே எனது சகோதரனும் அங்கே சீட்டு போடுகிறேன் என்று குடும்பத்தை சீட்டு போட வைத்தார். மாதாமாதம் அவர்களுக்கு சீட்டுப் பணம் அனுப்ப அருகாமையில் உள்ள இந்தியன் வங்கியில் எனக்கு வரைவோலை பெற்று அனுப்பும் பணி என்னிடம் விடப்பட்டது.

வீட்டில் பெரிய சகோதரன், அதையடுத்து எனக்கு ஒரு மூத்தவர் மற்றும் அக்கா தங்கை எல்லாம் உண்டு என்றாலும் எந்தப் பணியாலும் அது எனக்கே என மூத்த சகோதரரால் கொடுக்கப்படுவதுண்டு. அப்போதெல்லாம் அதை அந்த வரைவோலையை டிமான்ட் டிராப்ட் தபாலில் அனுப்பி வைப்பது வழக்கம். சாதாரண தபால் அல்லது சர்டிபிகேட் ஆப் போஸ்ட்டிங் அதாவது சான்றிதழ் உடனான தபால்...இப்போது அந்த முறை தபால் நடைமுறையிலேயே இல்லை.

ஒரு முறை வழக்கம் போல தபாலில் வரைவோலையை அனுப்பி ஆகிவிட்டது. ஆனால் கொஞ்ச நாள் கழித்து நீங்கள் இன்னும் சீட்டுக்கு பணம் கட்டவில்லை எனவே உடனே கட்டவும் என கார்டு தபால் வந்தது. உடனே எனது மூத்த சகோதரர் சட்டாம்பிள்ளை குடும்பத்தின் நாயகன் என்னடா பண்ணினாய் தபால் இப்படி வந்துள்ளது என என்னை வறுத்தெடுத்தார். அப்போது நான் என்ன சொல்லியும் அனுப்பியாகிவிட்டது என்று சொல்லியும் நம்பவில்லை...

அப்போதெல்லாம் போக்குவரத்து எல்லாம் அந்த அளவு இல்லை. மேலும் நாங்கள் பதிவு தபாலில் அனுப்புமளவு எல்லாம் வசதியுடையவராய் இல்லை. தாம் தூம் என குதிப்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்த்து விட்டு அப்புறம் பொறுக்க முடியாமல் நானும் ஒரு தபால் கார்டு வாங்கி அப்போது 15 பைசா என நினைக்கிறேன் அனேகமாக இது இது நடந்தது 1975 போன்ற ஆண்டுகளில் நடந்திருக்கலாம்...

அந்த கார்டில் நன்றாகப் பாருங்கள் நாங்கள் ஏற்கெனவே அனுப்பி வைத்து விட்டோம், நீங்கள் சரியாகப் பார்க்காமல் உங்கள் வேலையை சரியாகச் செய்யாமல் எங்களை நீங்கள் மறுபடியும் எப்படி பணம் அனுப்பச் சொல்லலாம் என சுறீர் என எழுதி விட்டேனாம்...மரியாதைக் குறைவாகி விட்டதாம். அதன் பின்
உடனே அவர்கள் தேடிப் பார்த்து அந்த வரைவோலையை வரவு வைத்துக் கொண்டு ,அந்தக் கடிதத்தை யார் எழுதியது,அவர்கள் வந்து எங்களைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு தாம் தூம் என மூத்த சகோதரர் குதிக்க ஆரம்பித்து, சேலம் கூப்பிடுகிறார்கள் போய் வா என்றெல்லாம் மிரட்டல் சேலத்துக்கும் எங்கள் ஊருக்கும் 50 கி.மீக்கு மேல் தூரம்.

அப்போது எனது தந்தையார் , சும்மா என்னடா பெரிய இது பண்றீங்க அவன் என்னத்துக்கடா போகணும்? அவன் எல்லாம் போக வேண்டியதில்லை போங்கடா...என்று அந்த பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அவர்கள் பெரிய பணம் படைத்தவர்களாம் அங்கே சென்றால் அடித்து கூட விடுவார்களாம் பெரிய பிடுங்கிகளாம் என்றெல்லாம் அதன் பின் கதை கதையாகச் சொன்னார்கள்...

அனேகமாக நான் எடுத்துக் கொண்ட போராட்டங்களுக்கு எல்லாமே சிறிய வயதில் நடந்த இந்த சம்பவம் துவக்கமாக உரமாக அமைந்து விட்டது... அதன் பின் நிறைய பிரச்சனைக்கு எனது எழுத்துகள் வாளாகி நின்று அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட உதவி இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment