Saturday, June 6, 2020

பதினைந்து: உண்மைக் கதை 15.இரத்தினச் சுருக்கம்: கவிஞர் தணிகை

பதினைந்து: உண்மைக் கதை 15.இரத்தினச் சுருக்கம்: கவிஞர் தணிகை

Odisha: Temples of Bhubaneswar - Outlook Traveller

ஒரிஸ்ஸாவில் வைக்கோல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த ட்ரக் லாரி ஒன்று மின் கம்பி உரசித் தீப்பற்றி எரிந்தது அதன் ஓட்டுனர் மணிமுத்து {பெயர் மாற்றப்பட்டுள்ளது} எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்.எனது சகோதரர் ஒருவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.அவர்கள் நாலு பேர் சமவயதுக்காரர்கள் இனத்தின் 4 பேரும் நாலு வருணத்தை சார்ந்தார்...அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் எங்கள் வீட்டில் இருந்தது.அதில் 2 பேர் இல்லை இரண்டு பேர் இன்னும் இருக்கிறார்கள். சரி நாம் கதைக்கு வருவோம்

ஒரே பொது சந்து கூட உண்டு எங்கள் வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும். இறந்த அவரைப் பொறுத்தவரை என்னிட்ம் நல்ல மரியாதையாகவே நடந்து கொள்வார். அவருக்கு இளமையில் ஒர் பெண் வடிவிலான அதிர்ஷ்டம் கூட இருந்தது. ஆனால் அவர் அதை நழுவ விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதை எல்லாம் விளக்கினால் அது ஒரு கிளைக்கதை உபக் கதை. அது நீளம் எனவே அது வேண்டாம் நமக்கு.

அவருக்கு மணமாகி 2 குழந்தைகள் ஒரு ஆண் ஒரு பெண். மிக சிறுவராக இருக்கும்போதே இந்த அகால மரணம் விபத்து வடிவில். அந்த லாரி சென்னையைச் சார்ந்த ஒரு சேட்டு குடும்பம் சார்ந்தது...தகவல் தெரிவிக்கப்பட்டது அவர் ஒரே மகன் அவருக்கு 2 அக்கா ஒரு தங்கை உண்டு. எல்லாம் முடிந்தது.
Met. Centre,Bhubaneswar
அந்த லாரி ஓனர் மிகவும் நல்லவர் மாதம் ஒரு தொகையை எவ்வளவு என்று இப்போது நினைவில்லை. இந்த கதை நடந்தது 1990 வாக்கில் இருக்கும். அந்தக் குடும்பத்துக்கு பராமரிப்புச் செலவுக்காக கொடுத்து வந்தார் அவருக்கும் எனக்கும் மட்டுமே தொடர்பு அதுவும் தொலைபேசியில் மட்டுமே. எங்கள் வீட்டில் மட்டுமே அப்போது தொலைபேசி வசதி இருந்தது.மேலும் 25 காசு கொடுத்து ஒரு உள்நாட்டுத் தபால்...இன்லேன்ட் லட்டரில் எழுதிக் கொடுப்பேன். எந்தப் பிரச்சனையாய் இருந்தாலும் அந்த நபர் மிகவும் கனிவுடன் நடந்து கொண்டதை அந்தக் குடும்பம் மறந்திருக்கலாம். நான் இன்னும் மறக்கவில்லை. அவர் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.
The Temple City of Bhubaneswar, Odisha - Nativeplanet
அது மட்டுமல்ல இந்த இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் இவர்களுக்குரிய தொகை சேரவேண்டிய வழக்கு ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் நடக்க ஆரம்பித்தது. அங்குள்ள ஒரு வழக்கறிஞர் அவரும் நல்ல பண்பாளராக இருந்தார். எனது ஆங்கில அறிவு நான் சிறிது காலம் ஒரிஸ்ஸாவில் காளிமேளா என்ற இடத்தில் கோராப்புட் மாவட்டத்தில்  இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாநிலத்தில் மாவட்டத்தில் வட்டத்தில் பணி புரிந்த அறிமுகம் அவரையும் என் தொடர்பை மேம்படுத்த உதவியது.

ஆங்கிலத்தில் தொலைபேசி உரையாடல் மற்றும் தபால் வழியில் அலுவலக செயல்பாடுகள். அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் ஒரே ஒரு முறை மட்டும் நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் அதன் பின் அவர்களுக்கு வரவேண்டிய தொகையை வாங்கித் தருகிறோம் என்றபடியே  ஓரிரு ஆண்டுகள் கழிந்த பின்னே இவர்கள் ஒரிஸ்ஸா சென்றார்கள் சென்னை வழியே. வழக்கப்படி போக்குவரத்து செலவை அந்த சென்னையின் சேட்டு லாரி ஓனர் ஏற்றுக் கொண்டார். ரயிலில் சென்று வந்தார்கள்...இவர்களுக்கு வந்து சேர வேண்டிய ஒரு மிகப்பெரும் தொகை வந்து சேர்ந்தது. அதுவும் நினைவில்லை. இப்போது எவ்வளவு என்று...

இப்படிப்பட்ட சோகம் நிகழ்ந்து விட்டதே என்று அந்தக் குடும்பத்திற்கு எங்களால் ஆன உதவியை தயங்காமல் செய்து என செய்து வந்தேன். அதன் ஒரு பகுதியே அவர்களுக்கு சிரமம் அளிக்காமல் தபால் வழி தொலைபேசி வழியில் அந்த வழக்கை நடத்திக் கொடுத்து முடித்து வைத்ததும் பேச்சு வார்த்தை நடத்தியது எல்லாம் அடியேன் தான்
வேறு எவருக்கும் அந்தக் குடும்பத்தில் போதிய படிப்பறிவும் இல்லை. அவர் பெண்ணுக்கும் பையனுக்கும் பள்ளி சென்று வந்தவுடன் மேலும் விடுமுறைகளில் தனி வகுப்பு இலவசமாக மற்றவர்களுக்கு எடுப்பது போலவே எடுத்தேன். ஆனால் அந்த இருவருமே படித்து நல்ல நிலையில் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால் இருவருமே படிக்க முடியவில்லை என இயலாமையை வெளிப்படுத்தினர். அதிலும் அந்தப் பையன் என்றால் சம்மணமிட்டு அமர்ந்தால் கால் எல்லாம் பிடித்துக் கொண்டு மடிந்து போகிறது என்றான்.

அவன் அவனது அப்பாவைப் போன்ற நல்ல நிறம். நல்ல உயர்ம் கூட....நன்றாக வருவான் என நினைத்தோம். அவன் ஒர் மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். அது கூட நல்லப் பணிதான் நன்றாகச் செய் என அறிவுரை செய்தேன். அதையும் அவன் கேட்கவில்லை...ஏன் எனில் இப்போது நானறிந்த வினோத் என்னும் 22 வயது இளைஞர் ஒருவர் சேலம் ஐந்து வழிச்சாலை அருகே ஒரு பீடாக் கடைக்கு பணிக்கு மேட்டூரில் இருந்து செல்கிறார் அவரது சம்பளம் மாதம் 13 ஆயிரம் அத்துடன் வாரா வாரம் பேட்டா 3 ஆயிரம் எனவே எல்லாம் சேர்த்தால் மாதம் 25 ஆயிரம் ஊதியம்{போக்குவரத்துக்கும் தந்து விடுவதாகச் சொல்கிறான் ஆனால் அது எந்தளவு உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை ஏன் எனில் போக்குவர்த்துக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரூ70 ஆகும்} எனது கல்லூரியில் பணிபுரியும் புதிதாக சேர்ந்த மருத்துவருக்கும் கூட அந்த அளவு ஊதியம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்...

அதை அடுத்து அந்த மளிகைக் கடையில் இருந்து வெளிவந்தவன் அதே லாரித் தொழில் செய்ய ஆரம்பித்து லாரி ஓட்டுனர் ஆனான் உடன் எல்லாம் வளர...கெட்ட பழக்கங்களும்தான்...அதன் பின் குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் ஆனது. அது பற்றியும் அவனது சகோதரி பற்றியும் நிறைய எழுத முடியாது. ஏன் எனில் வம்பு வளர்ப்பது நமது நோக்கமல்ல என்பதால்.

இந்த நான் பார்த்த குழந்தையாய் இருந்த இளைஞன் வளர்ந்த பிறகு நான் சுவரில் எழுதுவதை எல்லாம் மது அருந்தி விட்டு கேலி செய்வதும், வேண்டுமென்றே வம்புக்கிழுப்பதும், தரமற்ற நபர்களுடன் சேர்ந்து கொண்டு என்னை அவன் அல்லது அவர்கள் குடும்பத்துக்கு வேண்டும்போது பயன்படுத்திக் கொள்வதும் மற்ற நேரங்களில் என்னுடன் பகைமை பாராட்டுவதாகவும் இருந்தான்.

ஒரு முறை 2000 ஆண்டின் போது எனது இடது கை மூட்டு எலும்பு கிறிஸ்மஸ் இரவில் அனாதை சாலையோரப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை அளித்து நள்ளிரவில் திரும்புகையில் எனது வீட்டருகே இருக்கும் ஒரு திருமண மண்டப கட்டட வேலை நடந்து வரும்போது சரியாக சாலையிலிருந்து வேலை முடிந்து ஒதுக்கப் படாதிருந்த ஜல்லிக் கற்களில் எனது இரு சக்கர வாகனம் சறுக்கி விட விலகி இருந்தது.. அப்போது அதற்கு மாதக் கணக்கில் நல்லாம்பட்டியில் 3 கட்டு கட்ட வேண்டியதிருந்தது. அப்போதுதான் தாரமங்களத்தில் விசுவின் அரட்டை அரங்கில் கலந்து கொண்டு விசுவுடன் அறிமுகமானேன்.

அதே காலக் கட்டத்தில் எப்போதும் வீட்டிலேயே இருக்க முடியாமையால்...மாலை வேளையில் வழக்கம்போல் அகிக்கட்டுடன் நடைப்பயிற்சி ஒரு முனியப்பன் கோவில் படிக்கட்டில். அந்த பாறைக் கல் படிக்கட்டு 108 இருக்கும் ஒரு முறை ஏறி இறங்குவது போல 12 முறை ஏறி இறங்குவேன். அப்போது எனது வயது 38.மகன் மணியம் 2 வயது கைக்குழந்தை.

Placing Faith in God During Tough Times — Kim Fredrickson, MFT
அப்படி ஒரு நாள் ஏறி இறங்கி வருகையில் இந்தப் பையனும் அவனது கூட இன்னொருவனும் மது அருந்திவிட்டு என்னை வம்பு செய்து சண்டைக்கு அழைத்தனர். என்னை அவர்கள் தாக்க வேண்டுமென்பது திட்டமாம். அப்போது என்னை நன்கறிந்த அந்த கிராமத்தின் முனியப்பன் கோயிலில் அருகே உள்ள வீட்டின் பழனிச்சாமி என்னும் ஒரு விவசாயி, ஆடு மேய்ப்பவர், காலையில் சிட்கோ தொழிற்பேட்டையில் விறகு உடைக்கும் வேலை நல்ல வலுவான ஆசாமி அதன் பின் என் நண்பராகவே அவர்கள் குடும்பம் சகோதரர்கள் எல்லாம் மாறிப்போனார்கள்...

அவர் என்னடா சத்தம்ம் என வந்தவர் அந்தப் பையன்கள் இருவரையும் வாங்கடா பார்க்கலாம் என அழைக்க ஆரம்பித்தார் இந்த குடிகாரப் பையன்கள் ஓட ஆரம்பித்து விட்டனர் எனக்கு ஒரு உறுதுணையாக அந்த நண்பர் வந்ததும். அந்த நண்பர் அதன் பிறகு எனது வீட்டிலேயே கழனீ தண்ணீர் எடுப்பாராக வந்ததும் அதன் பின் ஈரோட்டில் துண்டு போட்டு அவர்கள் பையன்கள் எல்லாம் மூட்டை தூக்கும் பிரிவில் நிறைய சம்பாதித்து வீடு வாசல் என வாங்கி நன்றாக பிழைத்து வருவதும் அவர் ஊருக்குப் போகும்போதும் வரும்போதும் எனைப் பார்த்து பகிர்ந்து கொண்டதில் நானறிந்த செய்தி...மேலும் அவர் கழனி தண்ணீர் எடுத்த ஒரு சில்வர் குடத்தைக் கூட எங்கள் வீட்டிலிருந்து எடுக்காமல் அது வெகு நாளாக எங்கள் வீட்டுக் கொய்யா மரத்தடியிலேயே கிடந்தது.

நான் திரும்பி வீடு வந்ததும் முதன் முதலாக‌ அந்தப் பையன் உடன் வந்தவனின் வீட்டுக்கு சென்றேன் அவன் பெற்றோரைப் பார்த்து செய்தி சொல்லி என்ன செய்தான் பாருங்கள் உங்கள் பிள்ளை என விடயத்தை தெரிவித்தேன் அந்த பையனின் பெரியம்மா ஏண்டா அவர் எவ்வளவு பெரிய மனிதர், அவரிடம் சென்று வம்பு செய்தீர்களா என்னடா ஆச்சு உங்களுக்கு என சரியாக கொடுத்தார் அந்தப் பையன் அதிலிருந்து என்னிடம் எப்போதுமே வம்பு வைத்துக் கொள்ளாத அளவு.

அதை அடுத்து பக்கத்து வீட்டுக்கு சென்று நடந்ததை விவரித்தேன். வா, வாடா என்னை இப்போது அடி..எனது ஒரு கை கட்டுதான் போடப்பட்டுள்ளது என்றேன். கதைவைத் தட்டினேன். கதவை தாழிட்டு சாத்தியபடி உள்ளே இருந்த அவன் வெளியே வரவேயில்லை....அப்போது எனது சார்பாக எனது பக்கத்து வீட்டில் அப்போது குடியிருந்த வைரவேல் என்னும் எனது பங்காளி சித்தப்பா ஒருவரும் உடன் வந்து அந்த அநியாயத்தை தட்டிக் கேட்க உதவினார்.

அதைப் போல பல முறைகள் மதுவின் பிடியாலும் காழ்ப்புணர்ச்சியாலும் அந்தப் பையன்  எதையும் தட்டிக் கேட்பவன் நான் என்ற முறையாலும் வளர்த்த கடா முட்ட வருவது போல சுவரில் எழுதும் இரு நாளுக்கொரு செய்தியை எல்லாம் படித்துவிட்டு சண்டைக்கு வந்து கொண்டே இருந்தான்...அவன் இப்போது மனைவி குழந்தை குடும்பம் என வேறு ஊரில் வசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். பார்த்தும் பல வருடங்கள் ஆகின்றன‌

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

இது போல வளர்த்தக் கிடா முட்ட வந்த கதைகளும், உண்மைக் கதைகளில் இன்னும் உண்டு. மேலும் சமூக மேம்பாட்டு ஆலோசனைப் பணிகளிலும் வெற்றி தோல்வி அனுபவங்களின் கதைகள் இன்னும் உண்டு. அவை சமயம் கிடைக்கும் போது மறுபடியும் பூக்கும்..




No comments:

Post a Comment