Sunday, May 17, 2020

பதினொன்று: உண்மைக் கதை 11. பூரண மதுவிலக்கு சாத்தியமா? கவிஞர் தணிகை

பதினொன்று: உண்மைக் கதை 11. கவிஞர் தணிகை
Bill passed to bring back total prohibition in Mizoram - The ...
பூரண மதுவிலக்கு சாத்தியமா என்ற கேள்வியை நண்பர் விடியல் குகன் கேட்ட கேள்விக்கு தொடர்புடைய உண்மைக் கதை இது. இதில் மது,இலஞ்சம்,தற்கொலை எல்லாமே இருக்கிறது. முடிந்தவரை கருப் பொருளின் தன்மை கருதி பெரிதும் சுருக்கித் தர விழைகிறேன்.

எங்கள் வீட்டுக்கு நாலைந்து வீடுகளுக்குத் தள்ளிய வீடு அவர்களுடையது.பள்ளிப் பருவத்திலிருந்தே அவர்களும் நானும் சேர்ந்தே படிக்க வில்லை எனினும் ஒரே பள்ளி அவர்கள் குடும்பத்திலும் எங்கள் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்கள் பலர். அதில் நான் சொல்ல வருவது இந்த கதாநாயகனின் சகோதரர்கள் எல்லாம் எனக்கு பழக்கம். இந்தக் கதாநாயகன் பெயர் தங்கமகன் என்று வைத்துக்கொள்ளலாம் .இவர் இராணுவத்தில் பணி புரிந்து வருபவர். வயதில் எங்கள் வயதுக்கு சிறியவர். அப்போது மே.வங்க சிலுகுறியில் பணி செய்வதாக அறிந்தேன்

வழக்கம் போல அந்த ஆண்டும் இரு மாதங்கள் விடுமுறையில் வந்திருக்கிறார். அவரின் மகள் அப்போது சிறுமி இப்போது பருவ வயது எய்தி மங்கயாக இருக்கிறார். எனில் நீங்கள் இந்த சம்பவம் எப்போது நடந்திருக்கும் என ஒரு கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.நேற்று கூட அவர் இருசக்கர வாகனத்தில் நான் நடைப்பயிற்சிக்கு செல்லும் சாலையில் எதிரே வந்தவர் அவருடைய சகோதரருடன் என்னைக் கண்டு வணங்கித் தான் சென்றார்.

அன்று என்ன நடந்தது எனில் : இனி இது போல மதுவைக் குடித்து விட்டு வந்தால் நான் தீ வைத்துக் கொள்வேன் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் சேலை முந்தானையில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்ட அவரது மனைவி விளையாட்டாகப் பற்றிக் கொள்வேன் எனச் சொன்னது வினையாகி நிஜமாகவே நெருப்பு பிடிக்க கட்டியிருந்த சேலையின் ரகமும் துணை செய்ய அந்தப் பெண் எரிந்து கொண்டிருக்க இவனும் அதைத் தடுக்க முயன்று...வலது கையில் மணிக்கட்டு முதல் உள்ளங்கை மற்றும் விரல்கள் எல்லாம் தீக்காயமுமிருந்தது....

உயிருடன் துடித்துக் கொண்டிருந்த அவரது மனைவியை மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கொண்டு சேர்த்து காப்பற்ற முயல அங்கே சில நாள் பார்த்துவிட்டு இங்கே முடியாது என மாவட்ட மருத்துவ மனைக்கு அந்தப்பெண்ணைக் கொண்டு சென்றார்கள்...அங்கே அந்தப் பெண் இறந்துவிட்டாள்...

Campaign begins for total prohibition in Tamil Nadu - The Hindu

உடலை தர மறுத்துவிட்டார்கள்...தங்கமகன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டார் சில சாட்சிகளாக வேண்டும் என உள்ளூர் காவல் துறை ஆய்வாளர் அவர் மெத்தப் படித்ததாக அவரின் 3 முதுகலைப் படிப்பு சொல்லியது. அவர் அப்போதிருந்த சிலை வழக்கில் உச்சம் சென்ற நமது பொன் மாணிக்க வேல் அவர்களுக்கும் கூட உறவு முறை என்றும் சொல்லப்பட்டது. எனவே அவரைப் பற்றி ஏதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவே நான் முதல் முக்கிய பிரதான‌ சாட்சியாக இணைக்கப்பட்டேன். எனக்கும் எல்லா மனிதர்க்கும் நல்லது செய்ய வேண்டுமென்ற அவா எப்போதும் இருந்ததால் சம்மதித்தேன். மறுநாள் காவல் துறை வாகனத்தில் ஆய்வாளருடன் {அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டுமெனில் தனிப் பதிவு அவசியம்} சில அக்கம் பக்கத்து வீட்டாருடன் சென்றோம் சேலம்.

வருவாய்க் கோட்டாட்சியருடன் சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எல்லா அலுவலக நடைமுறைகளுக்கும் வளைந்து கொடுத்தோம். பிரதான சாட்சியான நான் அந்த தங்க மகன் இராணுவ வீரருக்கு அவரது மனைவியை கொல்லும் எண்ணம் ஏதும் இல்லை. இது தற்செயலாக நடந்த விபத்து. இனி உடலை வைத்து நாளை நேரத்தை விரயம் செய்து என்ன பயன் என்று பேசி உடலை மீட்டு வந்து உடனடியாக எரியூட்டினோம்.

அத்துடன் முடிந்தது நம்மை எதற்கும் கூப்பிட மாட்டார்கள் என்று இருந்தேன் ஆனால் அதன் பிறகுதான் கதையே ஆரம்பம் ஆயிற்று. உள்ளூர் காவல் துறையும் நீங்கள் தாம் நன்றாகப் பேசினீர் வருவாய்க் கோட்டாட்சியர் சந்திப்பில் என்றும் இந்த இராணுவ வீரனின் குடும்பமும் என்னை ஒவ்வொரு முறையிலும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. நானும் நம்மால் நல்லது நடந்தால் சரி என்று அழைக்கும் போதெல்லாம் சென்று எனது உதவியைச் செய்ய ஆரம்பித்தேன்.ஒருக் கட்டத்தில் அந்த ஆய்வாளர் கவுன்சிலிங் கொடுக்க காவல் நிலையம் அல்லது அவர்கள் இடம் வரமுடியுமா கைதிகளுக்கு கவுன்சிலிங் செய்ய என்றெல்லாம் கேட்க நான் எனது இருப்பிடம் அழைத்து வந்தால் மட்டும் செய்வேன் என மறுமொழி கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது.

இடையில் ஜீப் வாகனத்துக்கு டயர் மாற்றிக் கொள்ள என ஒரு தொகை வாங்கப் பட்டதை அந்த இராணுவ வீரர் தெரிவித்தார். அது தவிர வேறு என்ன என்ன வாங்கப் பட்டதோ கொடுக்கப் பட்டதோ  எனக்குத் தெரியாது. ஆனால் காவல் நிலையத்தில் விசாரணை தொடர்ந்தது...நான் நடந்த சம்பவம் உண்மைதான். ஆனால் அதை இவன் செய்ய முகாந்திரம் இல்லை என வலுவாக எனது தரப்பாக அந்தக் குடும்பத்துக்காக வாதாடினேன். காலப் போக்கில் விசாரணைகளுக்கும் பின் அந்த வழக்கிலிருந்து அந்த இராணுவ வீரர் விடுவிக்கப் பட்டார்.அப்போது நேரம் கிடைக்கும் போது ஏன் காவல் துறையில் இப்படிப் பட்ட இலஞ்சம் ஊழல் என்ற குறைபாடுகள் எல்லாம் நிகழ்கின்றன அதன் அடிப்படைக் காரணம் என்ன என்பது பற்றி எல்லாம் அந்த ஆய்வாளரும், ஏன் அதன் பின் மற்றொரு சம்பவத்தில் என்னுடன் மனந்திறந்து பேசிய ஒரு காவல் துறைத் துணை ஆய்வாளரும் விவரித்தனர்.

அதுமுதல் அந்தக் குடும்பத்தில் எந்த ஒரு அலுவலக காரியமாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு என்னை வந்து சந்திப்பதையே குறியாக இருந்தது அந்தக் குடும்பமே. அவரது தந்தையும் ஒரு இராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்று ஜோஸ்யக்காரர் என்று பேர் பெற்றவர். அவரும் அந்தக் குடும்பமும் என்னை வணங்க ஆரம்பித்திருந்தார்கள் எங்கே கண்டாலும்... என்னை விலக்காமல் எந்தக் காரியமும் செய்வது என்று அப்போது
இருந்த சிக்குன் குனியாவுக்கும்கூட அவர்கள் பாட்டி ஒருவர் சேலத்துக்காரர் குஞ்சிக் கருவாடு சமையலும் சுடுசோறும் மருந்து போல எனச் சொல்லி அதை எல்லாம் எனது தாய்க்கு பிடித்துப் போய் அவரது உடல் சுகாதாரம் குன்றக் காரணமானது எல்லாம் வேறு கதை... இது வரை நடந்ததெல்லாம் சரி... இனி ...

Do you agree that the Nagaland Liquor Total Prohibition Act, 1989 ...

ஒரு முறை என்னால் காப்பாற்றப் பட்ட அந்த இராணுவ வீரர் மது அருந்திய நிலையில் தனது இடுப்பில் லுங்கி கூட கழண்டுவிழுவது தெரியாமல் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு நானில்லாத போது வந்ததாக இதெல்லாம் சரியில்லை என எனது துணைவியார் கடிந்து கொண்டார். அதை அடுத்து மற்றொரு நாள் கையில் ஒரு முழு பாட்டில் மதுவோடு வந்து எங்கள் வீட்டு வாயில் நிலைப்படியில் கொண்டு வந்து வைத்தார்...அதன் பின்னணியில் அவருக்கு ஒரு அரசியல் கட்சி சார்ந்த நபர் தூண்டி இருக்கிறார் ,அவர் இந்த விடயத்தில் ஊரில் புகழ் பெற்று விட்டார். அவருக்கு மது என்றாலும் மதுக் குடியர் என்றாலும் பிடிக்காது வெறுப்பார் எனவே இந்த நபர் இப்படி போகும்போது ஏற்படும் முட்டுதலைக் கண்டு இரசிக்கலாம் எனக் கணக்கிட்டு இருந்ததாகவும் பின் அறிந்தேன். ஆனால் நான் அந்த இராணுவ வீரரிடம் நீ இப்படி எல்லாம் நடந்து கொள்வதை எவரும் விரும்ப மாட்டார்.

உங்கள் வணக்கமும் தேவையில்லை உங்கள் மரியாதையும் அவசியமில்லை. இனி இப்படி எல்லாம் எதற்காகவும் எங்கள் வீட்டுக்கு வரும் வேலையே இருக்கக் கூடாது எனக் கண்டித்து அந்த உறவை அத்துடன் துண்டித்து விட்டேன்.அதன் பின் அவர் கேரளத்துப் பெண் ஒருவரை மணந்ததும் அவரும் அவருடன் நில்லாமல் விலகிப் போனதும் பட்டும் படாமல் தெரிந்தது.


Canonising Gandhi made him a myth more than a man: Mark Tully ...
கற்பூர வளையத்துள் ஒரு மாநிலம் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என  தமிழக அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சொல்லி மதுக்கடைகளைக் கொண்டு வந்ததாக ஒரு சர்ச்சை உண்டு. உண்மையில் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலாகவே இருந்தாலும் நமது பாதுகாப்பு முப்படைகள் பணிபுரிவார் எவர் அவரெல்லாம் நமது மாநிலங்களிலிருந்து சென்றவர்கள்தாமே...அவர்கள் வழியே அவர்களின் விடுமுறை, கல்யாணம், கருமாதி, விழாக்கள், நட்பு, உறவு இப்படி எப்போதும் மது பானம் வழிந்தபடியேதான் இருக்கின்றன என்பது உண்மை..

இப்படி இராணுவம் போன்ற பணிக்குச் சென்று விட்டும் மதுவுக்கு அடிமையாகாமல் மதுப்பழக்கம் இல்லாமல் மதுவைக் குடிக்காமல் வருவோர் விதி விலக்கானவர்களே....அப்படிப் பட்ட நபர்களையும் நாம் கணக்கில் கொண்டே ஆக வேண்டும்.

இதெல்லாம் சுய ஒழுக்கம், தனிமனித நெறி பால் தொடர்புடையதாக இருக்கிறது...தற்போதைய செய்திகளில் கூட மிலிட்டரி கேண்டீனில் எவ்வளவு கூட்டம் கூடி சமூக இடைவெளி இல்லாமல் மது விற்பனை எப்படி இருந்தது என்பதை ஊடகங்கள் காட்டின. அவர்களுக்கு என்று இலவச ஒதுக்கீடுகளும், கட்டணத் தள்ளுபடிகளிலும் எப்போதும் சரக்கு உண்டு. அது அவர்களுடன் மட்டும் போவதில்லை அங்கிருந்து அந்த மது என்னும் நச்சுத் திரவம் எல்லா இடங்களிலும் கூட கசிந்தோடியபடிதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை

இந்நிலையில் பூரண மதுவிலக்கை நாம் ஆரம்பிக்க வேண்டுமெனில் எப்படி எங்கே இருந்து ஆரம்பிப்பது என ஒரு அறிவார்ந்த சபை கொண்டு விவாதித்து முடிவுகள் எட்டப் பட வேண்டியது அவசியம். மேலும் இது போன்ற குடும்பம் எல்லாம் அமைதியாக மகிழ்வாக வாழவில்லை வாழ முடிவதுமில்லை என்பதையும் நீங்கள் ஒரு களப்பணி ஆய்வு செய்தால் கண்டு கொள்ள முடியும்.

Mahatma Gandhi: Many firsts and fasts began in Mumbai | Mumbai ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment