Friday, May 8, 2020

ஆறு: உண்மைக் கதை 6: கவிஞர் தணிகை

ஆறு: உண்மைக் கதை 6: கவிஞர் தணிகை

Are Indian banks ready to absorb Covid-19 impact?- Business News

கடந்த பதிவின் தொடர்ச்சி இது....சம்பவமும் கூட.  ஏன் எனில் எங்களது ஊருக்கு மிக அருகாமையில் இன்றும் அமைந்திருக்கும் இந்தியன் வங்கிக் கிளையில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஏற்கெனவே சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதன் எதிரொலியாக பல ஆண்டு கழித்து ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும் என்பதாக மற்றொரு உண்மைக் கதை நிகழ்ந்தது அதை இதன் தொடர்ச்சி என நான் தெரிந்து கொண்டதே அந்தக் கதை முடிந்த போதுதான். அதன் முன் அதைப் பற்றி சிறிதும் அறிகுறிகள் கூடத் தெரியவில்லை. சரி கதைக்குள் செல்வோமா...

நான் போர்க்கொடி உயர்த்திய போதெல்லாம் எனக்கு அரிதான வாழ்வெலாம் தொடர்ந்து வரும் நண்பர்கள் கிடைக்கிறார்கள் அந்த நேரத்துப் போட்டி போர்க்களங்களில் நான் வென்ற போதும் அல்லது தோற்றபோதும் அப்படித்தான் எனக்கு நேருயுவக் கேந்திராவில் குடும்ப நல அமைச்சகத்தின் வழியே நடந்த போட்டி போர்க்கொடி உயர்த்தியபோது அன்றைய போட்டியில் எனக்கு பரிசு மறுக்கப் பட்ட போதும் ஏற்கெனவே நியமித்துக் கொண்ட இரு பெண்கள் அதை வாங்கிக் கொண்ட போதும் வாழ்வெலாம் எனக்கு சகோதர நண்பராக சிற்பி. கொ.வேலாயுதம் அன்றைய சேலத்து நேருயுவக் கேந்திராவின் ஒருங்கிணைப்பாளர் கிடைத்தார். அதன் பின் அவரும் நானும் குடும்ப நண்பர்களானதும் அவர் நேரு யுவக் கேந்திராவின் மண்டல இயக்குனர் என்ற அளவில் பொறுப்புகள் எடுத்து பணி செய்து விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணி விடுத்து இயக்கங்கள் நடத்தியதும் சசிபெருமாள் (உங்கள் காந்திய வாதி மது விலக்குப் போராளிதான்) கன்னங்க்குறிச்சி காமராஜ் சின்னபையன் போன்றோர் அந்த இயக்கத்தில் இருந்து உருவானதுமாக கதை அப்படியே தொடர இப்போதும் கூட சற்று நேரத்துக்கும் முன்னால் அவர் என்னிடம் பேசினார் சென்னையில் தமது ஓய்வுக் காலத்தில் இருக்கிறார் அவர் வயது இப்போது இருக்கும் 70க்கும் மேல் கூட.
GOOD FRIENDS IN NATURE — Steemit
இதே போல எல்.ஐ.சி வாழ்வுறுதிக் காப்பீட்டு நிறுவனத்தில் அப்போது சௌந்தரராஜன் இது உண்மைப் பேர்தான் இவர் மேட்டூர் கிளையில் மேம்பாட்டு அலுவலராக பணி புரிந்தார் அதன் பின் குளித்தலை கிளைக்கு மேலாளராகவும் ஆனார். இவர் தேவகுமார் என்னும் எரிவாயு முகமை ஒன்றில் பணி புரிந்து அப்போதிருந்த  அதன் பின் அவரும் தமது முகமை பணியில் சிறந்து எல்.ஐ.சி. நிறுவனத்தில் டெவலப்மெண்ட் ஆபிசராக பணியில் சேர்ந்தார் அவர் எங்கு இப்போது என நானறியேன். ஆனால் இந்த நண்பர்  வழியே கேள்விப்பட்டு சௌந்தரராஜன் என்னை வந்து சந்தித்தார். நண்பரானார். என்னால் அது போன்ற பணிக்கெல்லாம் ஒத்துவராத பண்புகள் இருப்பதை எடுத்து உரைத்தேன்.

அதெல்லாம் வேறு கதை இங்கு தேவைப்படாது. ஆனால் அவர் ஒரு முறை நண்பர் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் வைத்தார். நீங்கள் ஒரு வங்கிக் கணக்கை எங்கள் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இந்தியன் வங்கி முக்கியக் கிளையில் ஆரம்பிக்க வேண்டும் என்றார். அதற்கும் எனதிருப்பிடத்துக்கும் 8.கி.மீ. தூரம்.

எனக்கு மற்ற வங்கியில் கணக்கிருக்கிறதே. எதற்கு தேவையில்லாமல் இந்தியன் வங்கியில் என நான் கேட்டேன் ஏற்கெனவே ஒரு பசுமரத்தாணி என்னுடன் இருப்பதை அப்போது நினைவில் கொண்டேனா என்பது கூட இப்போது நினைவில் இல்லை

வேண்டாமே விட்டு விடுங்கள்...என்றேன். ஆனால் அவரோ இல்லை சார், அல்லது தலைவரே என்றும் அழைப்பார் மிக நல்ல மனிதர் புகைக்கும் பழக்கம் இருந்த்தை கவனித்திருக்கிறேன். மற்றபடி அவரது திருமணத்திற்கு அரூர் என்று நினைக்கிறேன் சென்று வாழ்த்து கொடுத்து திருமணத்திற்கே கலகலப்பூட்டினேன் அவரும் மிக எளிமையாக நடைபெற்ற அனைவரையும் பெரிதாக அழைக்காத எனது தாமதமான வயதில் நடந்த திருமணத்திற்கு தாரமங்களத்திற்கு வருகை புரிந்திருந்தது இன்றும் நினைவில் .
Lic holidays: LIC staff to get off on 2nd and 4th Saturdays ...
அவர் நீங்கள் ஆரம்பித்தே ஆகவேண்டும் என பல முறை வலியுறுத்தி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார். எனவே ஏதோ பணவரவு இருக்குமோ என்று சரி என ஆரம்பிக்கச் சென்றேன்...
அந்த வங்கியானது இவர்களது கிளை அலுவலகத்தின் அருகே ஒட்டி உறவாடும் மிக அருகாமையில் அமைந்திருந்தது

நான் சென்று கேட்ட போது வங்கி மேலாளாரை பார்க்கச் சொன்னார்கள். ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அவர் என்னை அமரவும் சொல்லவில்லை.
அதெல்லாம் ஆரம்பிக்க முடியாது போங்கள் என்றார்....
ஏன் சார் ஆரம்பிக்க முடியாது என்கிறீர்கள் என்று கேட்டேன்...

அதெல்லாம் ரோட்ல போறவன் வரவனுக்கெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்

நான் அப்போது புரிந்து கொண்டது என்னவென்றால் இவர் மேட்டூர் ஆர்.எஸ் இந்தியன் வங்கிக் கிளையில் நான் செய்த முன் பதிவில் நாம் சொன்ன கதையை அறிந்திருப்பார் போலிருக்கிறதே என் மேல் எதற்கு இந்தக் கோபம் என்று பேசாமல் திரும்பினேன்.

அதன் பின் கதை விரிந்தது என்ன வெனில் மேட்டூர் பியர்ட்செல், அல்லது மேட்டூர் டெக்ஸ்டைல்ஸ் அப்போது மூடப்பட்டு அதில் பணி புரிந்தோர்க்கு ஓய்வு பெற்றோர்க்கு எல்லாம் ஊக்க உதவித்தொகை அரசு இந்தியன் வங்கி காசோலை வழியே அனுப்பிக் கொண்டிருந்ததாகவும் அனைத்து தொழில் இல்லாமல் போன வாழ்க்கையில் வழியில்லாமல் இருக்கும் அத்தனை முன்னால் அந்த நிறுவனத் தொழிலாளர் யாவரும் இந்த வங்கியில் கணக்கை ஆரம்பித்து அதன் பின் அந்தத் தொகையை அப்படியே தங்கள் வாழ்க்கைச் செலவுக்கு எடுத்துக் கொண்டு சென்று விடுவதாகவும் எனவே அதில் இந்த வங்கி மேலாளருக்கு ஒரு கடுப்பு..டெபாசிட் வந்து வந்து கணக்கில் ஏறியதும் காணமல் எடுக்கப்பட்டு விடுகிறதே என்பதாகவும்

அதே போல எல்.ஐ.சி. பெனிபிட் தொகையும் இதே மாதிரி தொடர்ந்து தொகையாக வந்து உரிய நபர்கள் கணக்கை மட்டும் ஆரம்பித்து தொகையை எடுத்து விடுவதால் கணக்கு எண்ணிக்கை அதிகமாகவும் அதில் இருப்பு ஏதும் இல்லாத நிலை இருப்பதால் அது இரண்டாம் கடுப்பாகவும் இருந்ததால்...
Is it easy to get good friends in today's time? - Quora
இப்படிப் பட்ட நிலையில் இவர் கணக்கை ஆரம்பிக்கவே வெறுப்பாகி ஒரு வேளை நம்மையும் பற்றிக் கேள்விப்பட இந்த வெறுப்பில் இருந்து என்னை மரியாதைக் குறைவாக நடத்தி கணக்கை ஆரம்பிக்க விடாமல் செய்திருக்கிறார் என்பது புரிந்தது.

இது போன்ற காரணங்களால் மட்டுமே நண்பர் இங்கு ஒரு கணக்கை ஆரம்பியுங்கள் என என்னைத் தொடுத்து விட்டார் போலிருக்கிறது என்பதெல்லாம் படிப்படியாகப் புரிந்தது.

மறுபடியும் பூக்கும் என அப்போதும் அந்த இந்தியன் வங்கியின் உயர் நிலையில் இருந்த பிராந்திய மேலாளராக சேலம் மாவட்ட இந்தியன் வங்கிகளுக்கு எல்லாம் இருந்த அதே ஆர்.எம்.பழனியப்பன் என்பார்க்கு விவரங்களை எடுத்து எழுதினேன்.

ஏற்கனெவே இந்தியன் வங்கி ஆர்.எஸ். கிளையில் நான் எழுதிய நடந்த விடயங்களை நினைவில் கொண்டு இந்த வங்கி மேலாளர் என்னை அவமானப்படுத்தி உள்ளார். எந்த இந்தியக் குடிமகனுக்கும் எந்த வங்கியிலும் கணக்கு தொடங்க உரிமை உண்டு. தேவைப்பட்டால் என்ன என்ன சட்ட திட்டங்கள் விவரங்கள் வேண்டும் என்று வேண்டுமானால் கோரலாமே தவிர ஆரம்பிப்பதை அரம்பிக்கக் கூடாது எனச் சொல்ல எந்த வகையில் இவருக்கு உரிமை இருக்கிறது... ஏன் அதற்கு என்ன காரணம் என்று கேட்க... இந்தியாவின் ஒரு பொறுப்புள்ள மக்களுக்கு பெரும்பணி செய்து வரும் என்போன்ற நபரையே இவர் ரோட்ல போறவன் வரவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றெல்லாம் பேச எந்த உரிமை யார் கொடுத்தது என மிகவும் சூடாகவே எழுதினேன்...இது மேற்கொண்டு இப்படியே சென்றால் வழக்கு மான நஷ்ட ஈடு வழக்கும் தொடர்வேன் என்றும் குறிப்பிட்டேன்.

பிராந்திய அலுவலகத்தில் இருந்து சில வார்த்தைகள் மட்டுமே கொண்ட கடிதம் எனை வந்தடைந்தது...நீங்கள் சென்று வங்கிக் கிளை மேலாளரை அணுகவும் அவர் ஆரம்பிப்பார் என்று இருந்தது...அணுகினேன் அவர் அளித்த வங்கிக் கணக்கு துவக்கும் அட்டையைக் கிழித்து அவர் முன்னாலேயே வீசினேன். உன் போன்ற மேலாளர் இருக்கும் வங்கியில் நான் கணக்கு ஆரம்பிப்பதே எனக்கு இழுக்கு. நான் பெரியவனா நீயா ரோட்ல போறவன் வரவனுக்கும் என்ன என்ன தகுதி இருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய் அல்லவா என உனக்கு பாடம் கற்பிக்கவே இந்த சம்பவம் நடந்தது. ஏழை என்றால் இந்த நாட்டில் கிள்ளுக் கீரையா அவர்களுக்கு கணக்கு ஆரம்பிக்கக் கூடாதா அவர்களுக்கு கிடைக்கும் அரசு உதவிகளை வேறு எப்படி பெற முடியும் ? அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை அவர்கள் அப்படியே வங்கியில் இருப்பு வைத்திருக்கும் நிலையில் இருந்தால் அவர்கள் ஏன் உன்னிடம் வருகிறார்கள்....என்றெல்லாம் பேசிவிட்டு வந்து சேர்ந்தேன்...

ஆக தருமி நாடகம் போல இந்த மேலாளருக்கு பாரம் புகட்ட சௌந்தரராஜன் என்னைப் பயன்படுத்தி ஆடிய நாடகம் இது அப்படி என்றால் அவர் போன்றோர் என்ன என்ன பாடு பாட்டிருப்பார் என்றெல்லாம் அதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது...

இந்த நாட்டில் மனிதரை எவரும் அவர் உணர்வை எவரும் மதிப்பதில்லை...சட்ட விதிகளை அதன் வரம்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள் உயிருடன் மனிதர்கள் செத்தாலும் பரவாயில்லை விதிதான் முக்கியம் என...சட்டம் தான் முக்கியம் என...மனிதர்களுக்குத் தான் சட்டம் ஒழுங்கு நீதி நிர்வாகம் எல்லாமே அதற்காக நாளடைவில் அவன் உட்படுகிறான் என்றபோதிலும் அவை பொருந்தாத போது அவற்றை மாற்றத் தான் வேண்டும்...
40 Short Friendship Quotes for Best Friends - Cute Sayings About ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment