Friday, May 22, 2020

அன்பு மகனுக்கு:மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

சாலையில் நாய்களும்
வரும்
கவனமாய் செல் மகனே!

வாழ்க்கையில்
வஞ்சனையும் சூதும் தொடரும்
புரிந்து  வாழ் மகனே!

வேகம் தேவைதான்
அதை விட முக்கியம்
விவேகம் மகனே!

நல்லவரை ஒரு போதும்
காலம்
கை தவற விடாது மகனே!

பணம்
பைத்தியக்காரத் தனம்...

அதற்காக
எல்லாவற்றையும் விட்டு விடவும் முடியாது
எல்லாவற்றையும்  விட்டு விடவும் கூடாது  மகனே!

எல்லாமே சொல்வார்
பணம் பத்தும் செய்யும்
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றெல்லாம்
பணம் கொஞ்சம் கொஞ்சமாய் நமது
மனிதாபிமானத்தை கொன்று
கடைசியில் நம்மையும் கொல்லும் மகனே!

பசி வந்திடப் பத்தும் {பற்றும்} பறந்திடும் என்பார்
பசி வந்தால் தான் வறுமை புரியும்
ஏழ்மை தெரியும்
எல்லாம் எதற்கென்று ?
அறிவாய்!

நல்லவரை
காலம் ஒரு போதும் தவற விடாது மகனே!

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

அன்பு மகனுக்கு:

No comments:

Post a Comment