Tuesday, May 12, 2020

எட்டு: உண்மைக் கதை 8.: கவிஞர் தணிகை

எட்டு: உண்மைக் கதை 8.: கவிஞர் தணிகை

Indian Judiciary: Delayed “Satyamev Jayate”?


முடவன் கோயில் தீர்த்தன் வந்திருந்தான். அது 1987 ஆம் ஆண்டிலிருந்து 1992க்குள் இருக்கலாம். சரியாக நினைவு படுத்த முடியவில்லை இப்போது. ஏன் எனில் ஏறத் தாழ 30 ஆண்டுக்கும் மேல் ஆகிறது இந்த நடப்புக்கு

சார் நாங்க யார் பேச்சை கேட்கிறது?
நீங்க காய்ச்ச வேண்டாம் என்கிறீர்
அவங்க காய்ச்ச சொல்லிக் கண்டிக்கிறார்கள், தண்டிக்கிறார்கள்


ஏன் என்ன நடந்தது தீர்த்தா...?

காய்ச்சினால் காய்ச்சாவிட்டாலும் எங்களுக்கு வர மாமூல் வந்திரணும்
எடு காசை என்றார்
ஏதும் இல்லையே சார் என்றேன்

அப்ப கையில போட்டிருக்கிற மோதிரத்தைக் கழட்டிக் கொடு
என கையில் இருந்த அரை பவுனா இல்லை ஒரு பவுனா என்பதும்( எனக்கு) மறந்து விட்டது
அதைக் கழட்டி வாங்கிக் கொண்டு போய்விட்டார் என்றான் தீர்த்தன்
 முடவன் கோயில் பெரிய கல்ராயன் மலையில். இது எப்போது நடந்தது எங்கு நடந்தது என்பது பற்றி எல்லாம் விசாரித்து விவரம் தெரிந்து கொண்டேன்.

இந்த பேச்சு வார்த்தையில் அவர்கள் என்றது காவலர்களை
கரிய கோயில் என்ற இடத்தில் ஒரு காவல் நிலையம் உள்ளது இன்றும்.
கள்ளச் சாராயம் காய்ச்சி விற்று வந்தான் தீர்த்தன் உண்மைதான். ஆனால் நாமெல்லாம் அங்கு சேவை புரிய ஆரம்பித்த காரணம் மற்றும் விளைவால் அவன் திருந்தி வாழ நினைத்தான். அவன் அப்போது காய்ச்சுவதில்லை அதனால்தான் அவனது மோதிரம் இப்போது காவலரால் பிடுங்கிச் செல்லப்பட்டிருக்கிறது மாமூலுக்கு பதிலாக. காவல் துறையினர் கையில் கிடைத்த பொருளை மீட்டுக் கொண்டு வருவதென்பது முதலை வாயில் போன இரையைப் போன்றது.

வெற்றிலை ஏறிய பற்கள்...பாமரன். உண்மையைப் பேசுவான். அவனுக்கு பெருமாள் என்ற திருமண வயதில் ஒரு எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிற மகனும் அதை அடுத்த சிறிய வயதில் பெண் பிள்ளையும் மற்றொரு சிறுவனும் குடும்பம். அவனது மனைவி மிகவும் ஒல்லியாக அவரும் எப்போதும் வெற்றிலை போட்டு காவி ஏறிய பற்களுடன் சிரித்துக் கொண்டே பேசுவார்.இன்னும் முகம் மறக்க வில்லை
satyamev Instagram posts - Gramho.com
சரி போ நீ அடுத்த திங்கள் வந்து எனை சந்தி என்று விடை கொடுத்தேன்.
அப்போதெல்லாம் தொலைபேசி வசதி வெகு அரிது
என்றாலும் எங்கள் அலுவலகம் வாடகைக்கு இருக்கும் வீட்டு சொந்தக்காரரிடம் தொலைபேசி வசதி உண்டு. அவரிடம் நிறைய நிலபுலம் வசதி வாய்ப்புகள் உண்டு என்பதால்.அவர் ஒரு சாலை போடும் ஒப்பந்ததாராகவும் இருந்ததாக நினைவு.

அவர் என்னிடம் எப்போதும் மென்முகம் காட்டுபவர். போன் ஏதாவது பேசுவதாயிருந்தால் ஒன்றும் தடை சொல்ல மாட்டார்
உடனே கரிய கோயில் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டேன். அவன் நல்ல வேளை துணைக் காவல் ஆய்வாளரே காவல் நிலையத்தில் இருந்து தொலைபேசியை எடுத்து தொடர்பு கொண்டு பேசினார். நிலையை விளக்கினேன்...
गांधी जयंती पर माध्यामिक शिक्षा ...
அவர் உடனே நீங்கள் ஒன்றும் வரவேண்டாம்
நாங்களே உங்கள் அலுவலகம் வந்து தந்து விடுகிறோம் என உறுதி அளித்தார்.

அதே போல அந்தக் கரிய கோயில் செல்லும் ஒரே பேருந்து அது காலை ஒரு நடை மாலை ஒரு நடை மட்டுமே அங்கிருந்து சேலம் வரை இணைக்கும் . அந்தப் பேருந்தில் வந்து எங்கள் பகுடுப் பட்டு  அலுவலகம் வாசலில் நிறுத்தி ஒரே நிமிடத்தில் அந்த மோதிரத்தைக் கொடுத்து விட்டு அதே பேருந்தில் ஏறிப் போய்விட்டார்.

எங்கள் அலுவலகம் என்றால் பெரிதாக கற்பனை எல்லாம் செய்து கொள்ள வேண்டாம். ஒரு பெரிய அறை அதில் ஏழெட்டு  இரும்பு இருக்கைகள், ஒரு மடக்கு மேசை.பொது அலுவலகத்தையும் எனது தனிப் பயன்பாட்டையும் மறைக்க   ஒரு தடுப்புத் துணி ஸ்க்ரீன், நான் உண்ண அல்லது மற்றவற்றிற்கு மறைப்பாக...அலுவலக  அந்த மேசையில் ஒரு எழுதுகோல் வைக்கும் ஸ்டேன்ட் ஒரு பேட் ஒரு ஸ்கேல் இப்படி கொஞ்சம் எழுத பேப்பர், இங்க், சில பதிவேடுகள் ....அவ்வளவுதான். அது எங்களது களப் பணியக அலுவலகமாக இருந்தது அவ்வளவுதான். அதிலேயே ஒரு நாள் களப்பணி முடித்து திரும்பி படுக்கலாம் என மடக்கு பிளாஸ்டிக் நார் போட்ட கட்டிலை விரித்தால் அந்த மடிப்பில் இருந்து பெரிய நாகம் உறக்கம் எழுந்து புறப்பட்டதெல்லாம் வேறு கதை..
Shyam sunder (@Shyamsu13333995) | Twitter
ஆக மக்கள் சக்தி என்பக்கம் இருந்ததால் எல்லாம் எளிதாக நடந்தது. அதுவும் மக்களுக்காக நடந்தது. அந்த மோதிரம் தீர்த்தன் கைக்கு போனது என்பதையும் அவன் எவ்வளவு மகிழ்வடைந்திருப்பான் என்பதையும் நான் மேலும் சொல்லத்தான் வேண்டுமா...
The latest episode of Satyamev jayate and its significance in the ele…
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment