Friday, May 15, 2020

பத்து உண்மைக் கதை 10. கவிஞர் தணிகை

பத்து உண்மைக் கதை 10. கவிஞர் தணிகை
Barriers to Justice and Support Services for Sexual Assault ...


மாநில அளவிலான கபாடிப் போட்டியை பகுடுப் பட்டு என்ற சிறிய ஊரில் பெரிய கல்ராயன் மலை ஊரில் நடத்தினேன்.மிகவும் பிரபலமான போட்டியில் கேடயத்தை முதல் பரிசு மற்றும் பரிசுகளை வழங்க சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன் ஐ.பி.எஸ் அவர்களை அழைத்திருந்தேன் வழக்கம் போல சிற்பி கொ.வேலாயுதம் போட்டிகளை துவக்கி வைத்திருந்தார்.

போட்டிகள் நிறைவெய்தும் நிலையில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டது போல அவருக்கு நினைவு படுத்த தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போதெல்லாம் செல்பேசி ஏன் தொலைபேசி வசதி கூட அந்தளவு இல்லை. நான் சொல்வது 1990 அல்லது ஓரிரண்டு ஆண்டு முன் பின்.

எனவே வழக்கம் போல தொலைபேசி வீட்டு சொந்தக்காரரிடமிருந்து தொடர்பு கொண்டபோதும் இயலாமையால் ஒயர்லஸ் இணைப்பில் மட்டுமே தொடர்பு கொண்டாக வேண்டிய நிலை. அப்படிப்பட்ட வசதி கருமந்துறைக் காவல் நிலையத்தில் மட்டுமே இருக்கிறது என்ற செய்தி உண்மையானது.அப்போது. இப்போது நிலை மாறி இருக்கலாம்

உதவியாளர்களை எல்லாம் நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளச் செய்து விட்டு சற்று இறுதி ஆட்டம் நெருங்கும் தருவாயில் பகுடுப்பட்டிலிருந்து கருமந்துறை 5 முதல் 10 கி.மீ தூரம் இருக்கலாம். சென்று தொடர்பு கொள்ளலாம் எனச் சென்றேன்

பொதுவாகவே மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ள ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் உள்ள நிர்வாகிகள் எல்லாத் துறைகளிலுமே எப்போதும் வேலைப் பளு அதிகம் உள்ளவர்கள்...மேலும் அவ்வப்போது மாநில அரசு தலைமையகத்தின் ஆணைக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளவர்கள்

எனவே தேதி எளிதில் கொடுக்க மாட்டார்கள் ஆராயாமல் எந்த நிகழ்வுக்கும். அவர்களிடம் நிகழ்வுக்கான தேதி வாங்குவதென்பது சற்று சிரமமானதுதான். மந்திரிகளிடம் கூட வாங்கி விடலாம். ஏன் எனில் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பு ஊடகம் பிரபலம் என்ற அளவீடுகள் இருப்பதால் அவர்கள் கூட வந்துவிடுவார்கள் ஆனால் இந்த மாவட்ட அலுவலர்கள் எப்போதும் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள்... நானும் பல மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்களை, இயக்குனர்களை சந்தித்து இருக்கிறேன்



அப்போது மாநகராகவில்லை சேலம். எனவே அதற்கென தனியாக ஆணையர் எல்லாம் இல்லை. எல்லாம் மாவட்ட பொறுப்பாளரிடமே பணிக் குவிப்பி மையமாகும். அப்படி சந்தித்தவர்களில் மிக முக்கியமான கண்காணிப்பாளர்களில் சிலர்: நாஞ்சில் குமரன்,பொன் மாணிக்கவேல்,காசி விஸ்வநாதன், விஜய்குமார் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்...இந்த பதிவுக்கு தொடர்புடையவர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.



அதில் சிலர் நாஞ்சில் குமரன் போன்றோர் வெளிப்படையாகவே நாங்கள் அவசரடியாக ஏதாவது சம்பவம் அல்லது கூட்டம் என்றால் கலந்து கொள்ள முடியாது போய்விடும் என எனக்கு அவரது அவசர நிலையிலும் அதாவது அப்போது தனது சீருடையை அணிந்தபடி மேல் ப்ளாப் பொத்தானை போட்டபடி விளக்கி அன்புடன் எங்களது அழைப்புக்கு கலந்து கொள்ள இயலாமையை மென்மையாக விளக்கியதும் உண்டு.

பொன்மாணிக்கவேல் அவர்களும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தம்மால் மதுவிலக்கு கையெழுத்து சேகரிப்பில் கையொப்பம் எல்லாம் இட முடியாது என மறுத்தது பற்றி எல்லாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பேன் என நம்புகிறேன்.

கதைக்கு வருகிறேன்...காசி விஸ்வநாதன் வருவதாக நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அழைப்பிதழ் எல்லாம் போடப்பட்டு  விளையாட்டு நிறைவுக்கு வரும் நிலையிலும் சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பு அலுவலகத்திலிருந்து எந்த தகவலும் இல்லை. எனவே நான் கருமந்துறை காவல்நிலையத்தை அணுகி கம்பி இல்லாத் தொலைபேசியில் பேசி நிலை அறியலாம் என முயன்றேன்.
Sexual Harassment Law in India and Constitutional Challenges ...
சென்றேன் காவல் நிலையம் விரிச்சோடி இருந்தது. எவரையும் அங்கு முன் பின் அலுவலக அறைகளில் கூட யாரும் இல்லை எனக்கோ புலி வாலைப் பிடித்த கதை. வருவதாகச் சொன்னோம் நீங்கள் அதற்குள் வேறு நபர்களை வைத்து பரிசளித்துவிட்டீர் என ராஜாங்க கோபத்துக்கும் ஆளாகக் கூடாது வருவதாகச் சொன்னவர் வரவில்லை எனத் தெரிந்து கொண்டால் நிகழ்வை தாமதமின்றி வன இலாகவினரை வைத்து முடித்து வைக்கலாம் என்றும் அவசர நிலை...

ஒவ்வொரு மூடப்பட்ட அறையாக திறந்து பார்க்கும்போது... அந்த காவல் நிலையம் முன் முகம் ஒரு மாதிரியும் உள் சென்றால் தங்கும் விடுதிகள் இருப்பது போன்று வரிசையாக அறைகளுமாக இருந்த நினைவு. அப்ப்போது இப்படி இப்போது நிலை மாறி இருக்கிறதோ என்னவோ...என்னடா இவ்வளவு பீடிகை போடுகிறான் என நினைக்கிறீர்கள்தானே...
ஆம் கடைசியாகப்பார்க்கலாம் என சார் சார் என அழைத்தபடி கடைசியாக ஒரு அறையைத் திறந்தால் அதில் முழுச் தலைச் சொட்டையுடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மனித குலத்தின் தலையாய பணியை மேற்கொண்டிருந்தனர்....நான் அது போன்ற தருணத்தில் சிவ பூஜையில் கரடியாக நுழைந்திருக்கிறேன்...

அவர்தான் அந்த நிலையத்தின் காவல் துறைத் துணை ஆய்வாளர் என்பதும் அந்தப் பெண் ஏதோ அந்த நிலையத்தை தூய்மைப் பணி செய்யக் கூடிய மலைவாசிப் பெண்ணாகவும் இருந்தாள் என்பதையும் அறிந்து கொண்டேன் அதன் பின்

Sex and power - #MeToo, one year on | Leaders | The Economist

நல்ல வேளை அவர் என் மேல் கோபம் கொள்ளவில்லை. நிலையை விளக்கிச் சொன்னதும் ஒயர்லஸ் போனில் தொடர்பு கொண்டோம்...அவசர மாநில அரசின் தலைமை அழைப்பின் காரணமாக காவல் துறைக்கண்காணிப்பாளர் சென்னை சென்றுள்ளதாகவும் எந்த நேரத்திலும் வரலாம் என்றும் நிகழ்வு பற்றி நினைவு உள்ளது என்றும் ஆனால் இனிமேல் வந்து சேலத்தில் இருந்து கல்ராயன் மலை சுமார் ஒன்னரை மணி நேரத்துக்கும் மேல் இரண்டு மணி பயணம் செய்து நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேலை முடிந்தது நிகழ்வை எளிமையாக வன இலாகாவினர் வைத்து பரிசளித்து முடித்து விட்டேன். அது வேறு கதை இங்கு சொன்னது மது, இலஞ்சம் என்பதை அடுத்து அரசு எந்திரம் எப்படி பயன்படுத்தக் கூடாது எப்படி பயன்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடவே...அந்த அதிர்ச்சி எனக்குள் இருந்தபடியே இருந்தது.

அதெல்லாம் ஒன்றுமில்லை அப்பனே...மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த உச்ச நிலை காவல் துறைத் தலைவர்களே அலுவலக பெரும் மேஜையில் பட்டப் பகலில் இது போன்ற தலையாயப் பணியில் ஈடுபட்டிருந்ததாக அந்தக் கால கழுகார் என நினைக்கிறேன் ஜூனியர் விகடனில் அப்போது அது மிக பிரபலம் அதில் எழுதி இருந்தன அது எந்தளவு உண்மையோ பொய்யோ என்று இருந்த போது...ஏன் இருக்கக் கூடாது இருக்கலாம் என்ற எண்ணம் இடம் கொடுக்க இது போன்ற நிகழ்வுகள் ஆதாரமாக விளங்கியது
Special report: Sexual harassment in workplaces in Pakistan ...
காட்டுப் புறம் கிராமப்புறம் இருக்கும் அப்போது கட்டாத கற்பாறை முனியப்பன் கோவிலில் ஒரு இளைஞரும் ஒரு யுவதியும் இந்த தலையாயப் பணியில் ஈடுபட்டதை நான் கண்டு பேரதிர்ச்சி அடைந்ததை அதன் பின் கோவில் குருக்கள் கோவில் கருவறையில் செய்து ஊடக்த்தில் பிரபலமாக விளங்கி அதெல்லாம் ஒன்னுமில்லை இது வேற என்பது போல் இதெல்லாம் வேற லெவல்... நாமதான் சும்மா இன்னும் நியதி நியமம் என்று பேசிக் கொண்டும் இயங்கிக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: இன்னும் சில உண்மைக் கதைகள் தொடர் உள்ளன. பகுதி 1 முதல் இந்த 10 ஆம் பகுதி வரை படித்தவர்கள் மேலும் படிப்பவர்கள் இந்த வலைப்பூவுக்கே வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் அது என்றும் நிலைக்கும். வாட்ஸ் ஆப் செயலியில் சில நாட்களில் மாயமாகிவிடும் என்பதால் எனது அன்பார்ந்தவர்களுக்கு இது ஒரு தேவையான வேண்டுகோளாக வைக்கிறேன். மேலும் எல்லாப் பகுதிகளையும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டுமாகவும் நானே ஒவ்வொரு பதிவையும் உங்களுக்கும் உங்கள் கவனத்துக்கும் கொண்டு வந்தால் மட்டுமே படிப்போம் என்ற எண்ணத்தில் இருந்து கொஞ்சம் உங்களை எனக்காக தளர்த்திக் கொள்ளும்படியாகவும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment