Friday, May 22, 2020

பனிரென்டு: உண்மையின் கதை 12. கவிஞர் தணிகை

: உண்மையின் கதை 12. கவிஞர் தணிகை
Not what you want, but what you need - The Economic Times
ஏதோ ஒரு முடிவை வாழ்வு எட்டி விட்டதாகவே தோன்றுகிறது எனவே சொல்ல
 வேண்டியது நிறைய உள்ளதே அதை எப்படி எப்போது எவ்வளவு அவசரமாக
 சொல்லப் போகிறோம் என்ற கவலை எனக்குள் தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த கதாநாயகன் என்னில் மிகவும் இளையவன்,ஏழுமலை என்று இவன்
பேரை வைத்துக் கொள்வோம்.நான் எனது இளமையில் சின்னஞ்சிறியார்க்கு
 எங்கள் வீட்டின் ஒரு சிறு அறையில் இலவச தனிவகுப்பு நடத்தி வந்தேன்
அதிலும் நான் பிரபலம். அப்போது அதை நண்பர் வேலாயுதம் போன்றோர்
கூட இந்த நாட்டில் ஒரு கட்டணம் இல்லாவிட்டால் அதற்கு முக்கியத்துவம்
இல்லாது போய்விடும். எனவே நீங்கள் அந்த தனி வகுப்புகளுக்கு
ஒரு கட்டணம் வைக்கலாம் என்றும் சொல்லியது எனது நினைவில்....ஆனால்
 அதை எனது காலத்துக்கும் பின் எனது தங்கை இப்போது தலைமை
ஆசிரியர் தக்க வைத்து கொஞ்ச காலம் பின் அவரும் விட்டு விட்டார்

ஏழுமலையின் குடும்பம் எனது குடும்பத்துக்கு மிகவும் அந்நியோன்யமான
 குடும்பம். வருடத்துக்கும் வேண்டிய மளிகைப் பொருட்களை எங்களுக்காக
 அந்த போக்குவரத்து தொழிலில் இருந்ததால் செவ்வாய்ப்பேட்டை
மார்க்கெட்டிலிருந்து தருவித்து தருபவர்கள்...அது மட்டுமல்ல எனது தாயை
ஏழுமலையின் தந்தை சிவம் பேர் கொண்டவர் அண்ணி என்றே அழைப்பார்.
வண்டிக்கார அங்கப்ப ...என்ற அவர்களது குடும்பம் பாரம்பரியம் உள்ள
ஊருக்குள் காரியக்கார குடும்பம் எனப் பேர் பெற்றது...சேலத்திலிருந்து
 மாட்டு வண்டியில் சரக்கு ஏற்றி வந்து கடைக்கு இறக்கி வந்தவர்கள்
அதன் பின் லாரி என்றும் இருந்தது...அந்தக் குடும்பத்தில் 3 சகோதரக்
குடும்பங்கள் மற்றும் சகோதரிக் குடும்பங்கள்...முதல் மகனுக்கு 2 மகள் மகன்
இல்லை. இந்த சிவம் குடும்பத்தில் ஒர் மகன் ஏழுமலை மற்றும் அவன் அக்கா...
கடைசிக் குடும்பத்தில் சில மகன்கள்.மகள் இல்லை.

ஏழுமலை மேனிலைப் படிப்புக்கு வந்துவிட்டான். ஏழுலையின் குடும்பம்
மட்டுமல்ல அந்த ஊரில் பலருமே ஏதாவது பிரச்சனை என்றால் என்ன வந்து
கலந்து ஆலோசனை கேட்டுச் செல்வதும் செயல்படுவதும் வழக்கம்தான்
என்றாலும் ஏழுமலைக் குடும்பம் என்னைப் பயன்படுத்திக் கொண்டதற்கு
அளவே இல்லை. அதுவும் பிரச்சினை என்றால் ஓடி வருவார்கள்...நல்ல நிகழ்வு
நல்ல வளர்ச்சி என்றால் மறந்தும் விடுவார்கள், மறைத்தும் விடுவார்கள்...

சரி.விடயம் என்ன வெனில் மேனிலைப் பள்ளிக்கு ஏழுமலை சென்று
 வரும்போது இரண்டாம் ஆண்டு இறுதிப் பரிட்சைக்கு 3 மாதமே உள்ள
நிலையில் அவனது பெற்றோர் வந்து, தணி, பையன் மண்டபத்துக்கார
பையன்களோடு அவர்கள் வீட்டுக்கு எதிர் புறம் ஒரு சிறு திருமண மண்டபம்..
.அந்தப் பையன்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியே படிக்காமல்
விட்டு விட்டான். நீதான் துணை என்று அழுதார்கள்.
சரி என்று அவனுக்கு அந்த 3 மாதத்தில் முடிந்தவரை பயிற்சி...கணக்கு மட்டும்
 வெளியில் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டேன்.

அறுநூற்று சொச்சம் மதிப்பெண் 1200க்குத்தான்  பெற்று தேறினான்.
வாசவி கல்லூரியில் விலங்கியல் படிப்பு கிடைத்தது 3 ஆண்டுகளும் படித்து
 முடித்தான்...மேனிலைப் படிப்பு முடிந்து தேர்வு பெற்றதும் அவனது பெற்றோர்
  ஒரு தாம்பாளத்தில் பழங்கள் வெற்றிலைப் பூவுடன் ஏதோ ஒரு தொகையுடன்
வந்து என்னை மரியாதை செய்ய விரும்பினார்கள். இல்லை இல்லை இதை
எல்லாம் எதிர்பார்த்து நான் செய்யவில்லை வேண்டாம் எனச் சொல்லி திருப்பி
எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டேன்.

படிப்பை முடித்தவன் அவனது எதிர் வீட்டில் பேராசிரியர் அன்பழகன்
உறவினர் வீடு அது. அதில் ஒரு போர்சனில் தனி வகுப்பு மையம் ஆரம்பித்து
 விட்டான். முதலில் இலவசம் என்று சொல்லி அதன் பின் அந்த மையத்துக்கும்
தனி வகுப்பு மையாமாக கட்டணம் பெற்று மாற்றிக் கொண்டான் அதற்கும்
அவன் பேர்தாம்...குருவின் பாதையை வாழ்க்கையின் உத்தரவாத தொழிலாக
 எடுத்துக் கொண்டான்.

5 ஆண்டுக்குள் நல்ல வளர்ச்சி...எனது கணவனை இழந்த சகோதரி ஒருவரின்
 பெண் குழந்தைகள் இரண்டும் தனியார் பள்ளிகளில் ஆசிரியை பணி அதில்
 ஒருவர் மேனிலைப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இயற்பியல் வேதியியல்
 கற்றுக் கொடுக்கிறார் என அதைக் கூட நாங்கள் தனி வகுப்பு எடுக்கிறோம்
அவர்களும் எடுக்கலாமா என்று வந்து கேட்டார்கள்...இல்லைம்மா
அந்தப் பெண்கள் விரும்பி வந்து அவரிடமே படிக்கிறேன் என்று
 சொன்னவ்ர்க்கே எடுக்கிறார்கள். பெண் பிள்ளைகள் இன்று இருப்பார் நாளை
 கல்யாணம் என்றால் வேறு இடம் சென்று விடுவார்கள் அதை எல்லாம்
பொருட் படுத்த வேண்டாமே என்று ஆறுதல் செய்தேன் ஏழுமலைக் குடும்பத்து
க்கு இத்தனைக்கும் அந்த ஏழுமலையின் தந்தை அந்த பாரம்பரியத்
 தொழிலும்,தாய் ஒரு கடையையும் நடத்தி வந்தார்கள்...இவனும் தனி வகுப்பு
 மையம் மூலம் நன்றாக சம்பாதித்தான்.

அத்துடன் பக்கத்து ஊர் இராமன் நகர் என்ற ஊரில் இவனுக்கு முன்பிருந்தே
 மற்றொரு தனியார் வகுப்பு மையம் நடத்தி வந்தவர்க்கும் இவனுக்கும் கடும்
போட்டி அதிலும் சில முறை மத்யஸ்தம் செய்தேன்...மேலும் ஒரு முறை
 வனவாசி வங்கி ஒன்றில் கடனுதவி பெற்று ஹீரோ ஹோண்டா வாங்கினேன்..
.வாங்கும்போது சொல்ல வில்லை அதில் தவணை கட்டுவதில் சிக்கல்,
காசோலை போவதற்குள் அபராதம் அதிகம் வசூலிக்கிறார்கள் என்றபடி வந்து
 நின்றான். இப்படி வாகனம் எல்லாம் தவணை முறையில் வாங்கினால்
அப்படித்தான் இருக்கும் அதை முதலில் கட்டித் தொலை.இல்லையெனில்
 அது வளர்ந்து நிற்கும் உனக்கென்ன வருவாயா இல்லை என்று ஒரு
 நகையை வைத்து அதைக் கட்டியதாக அந்தக் கடனை முடித்ததாக நினவு.

5 ஆண்டுக்குள் வீட்டை வலுவாக மாடிகளுடன் மாற்றி அதிலும் மேல்
தனி வகுப்பு எடுக்க ஆரம்பித்தான். எதிரிலும் நடத்தினான் மேலும் இடம்
 போதவில்லை என மேலும் எங்கே யாரிடம் வாங்கலாம் இடம் என்றும்
 தேட ஆரம்பித்தபடியே... திருமணமும் முடித்து ஒரு ஆண்குழந்தைக்கும்
தகப்பன் ஆனான்.

5 ஆண்டுக்குள் அபார வளர்ச்சி. தனி வகுப்பு எடுக்க
 தனது கடை வைத்துள்ள வீட்டின் மேலே இரண்டு அடுக்கு மாடி 
தளத‌ங்கள், 
திருமணம், குழந்தை,தந்தைக்கு சேலத்தில் சரக்கு ஏற்றி இறக்கும்
 பணி, 
தாய்க்கு கடை வருமானம்,மேலும் இடம் போதாமல் எதிர் வீட்டிலும் 
உள்ள
 காலி அறைகளைப் வாடகைக்கு எடுத்தல் இப்படி இது எல்லாம் 
போதாமல் 
தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் தங்களது 
வீடு அப்பா 
மேல் இருந்ததை தனது பேருக்கு மாற்றி அதன் பேரில்
 சென்ட்ரல் பேங்க் 
லோன் போட்டு ஒரு ஏழெட்டு சென்ட் அல்லது 20 சென்ட் நிலம் காலி 
இடத்தை
 வாங்கிப் போட்டு விட்டான் குரு நகர் என்ற இடத்தில் தனி வகுப்பு எடுக்க 
பெரிய கட்டடமாய்க் கட்டி விடலாம் என்று.

இந்த சூழ்நிலையில் தனது வீட்டுக்கு அருகாமையில் பாகம்
 பிரிக்கப் பட்டு 
இருந்த தனது சித்தப்பா வீட்டையும் விலைக்கு கேட்க
 ஆரம்பித்திருந்தான்.
 ஏற்கெனவே சொல்லி இருந்தேன் அவனது சித்தப்பா வீட்டில் இவனது
 வயதையும் மீறிய இரு மூத்த சகோதரர்கள். லாரித் தொழில் செய்து வந்தனர்.
 ஏழுமலையின் சித்தப்பா சீக்கிரம் இயற்கை எய்தினார் அதற்கு நான் கூட 
மேட்டூர் சென்று அந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன். 
ஏழுமலையின் அப்பா சிவம் தான் முன்னிருந்து கடைசிக் காரியங்களையும் 
சகோதரர்கள் சேர்ந்து செய்ததாக நினைவு.

Learning About "I Need You" vs. "I Want You" - The Good Men Project
அத்துடன் சிவம் கூட அடிக்கடி அந்த தம்பி மகன்களை அழைத்து
இன்னும் 
அத்துப் பிரச்சினை பொது சுவர் பிரச்சினை இருக்கிறது என்றெல்லாம் கேட்டு
 வந்தார் ஏன் எனில் இவர்கள் தந்தையின் பாத்தியதையில் இருந்த சொத்தை
 இவர்கள் 3 சகோதரர்க்கும் பிரிக்கும்போது நான் எனது கடமையை 
செய்ததாகவும் நினைவு.

சரி இனியும் கதையை வளர்த்த விரும்ப வில்லை. இது மிக நீண்ட 
கதை

குடும்பத்தார் எல்லாம் கூடி காவிரிக் கரை கல்வடங்கம் என்ற ஊரில்
 இது 
நெரிஞ்சிப்பேட்டை பூலாம்பட்டி இது போன்ற ஊர்கள் அருகே 
பாக்கியராஜ் 
பவுனு பவுனுதான் என்ற திரைப்படம் எடுத்து தோல்வியைத்
 தழுவியதே 
அந்த திரைப்படம் எடுத்த ஊர் அருகே உள்ளது

குடும்பம் எல்லாம் சேர்ந்து குல தெய்வம் கும்பிட கல்வடங்கத்தில்
 ஒன்று
 சேரப் போனார்கள்.
அன்றைய மாலை ஒரு தகவல் ஊர் வந்து சேர்ந்தது. ஏழுமலையை
 அவனது 
சித்தப்பா மகன் அதாவது அண்ணன் முறையில் இருந்த
 உடன் பிறவாச்
 சகோதரர் ஒருவர் அரிவாளால் கழுத்தில் வெட்டிக் கொன்று 
விட்டதாக.

இவன் ஓட ஒட அவன் துரத்திச் சென்று வெட்டியதாகவும் 
வெட்டப் பட்ட 
ஏழுமலை அந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து 
இறந்ததாகவும் செய்தி. நாங்கள் எல்லாம் அது உண்மையா
 உண்மையாக 
இருக்குமா என்று நம்ப முடியாத செய்தி உண்மையாகவே இருந்தது.

மறு நாள் ஏழுமலையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கும் பிறகு 
வெண்மை 
நிறத்துணிகளால் போர்த்தப்பட்டு அவ்ர்களின் கடை வாசலில்
 வைத்து 
எடுத்துச் சென்று எரியூட்டப்பட்டது...

கதை நீளம் என்பதால் இந்த முதல் பாகம் இங்கு நிறுத்தப் படுகிறது...
இதன் இரண்டாம் பாகம் அடுத்த பதிவாக 

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு. இதன் பின் தாம் இந்தக் கதையின் முக்கியக் காட்சிகளின்
 அரங்கேற்றமே இருக்கிறது எனவே இதன் இரண்டாம் பகுதியை 
படிக்கத் தவறாதீர். தொடருங்கள்.





-

No comments:

Post a Comment