Wednesday, May 6, 2020

ஐந்து உண்மைக் கதை 5. கவிஞர் தணிகை

ஐந்து உண்மைக் கதை 5. கவிஞர் தணிகை

 Indian Bank pre-tax profit up three-fold to Rs 593 cr; net NPA ...

இந்தியன் வங்கி எங்கள் ஊரில் மிக அருகே உள்ள கிளை. வரைவோலை எடுத்து அனுப்பச் சென்றிருந்தேன் அது 1987 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பது என் நினைவு.

இயங்குவது போலத் தெரிந்தது. ஆனால் இயங்காமல் அனைவரது கால நேரத்தையும் விரயம் செய்து கொண்டிருந்தது அந்தக் கிளை...அதாவது அதன் ஊழியர்கள் அத்தனை மெத்தனமாக பணி செய்தவாறு இருந்தனர். இந்த நாட்டில் மட்டும் வேலை கிடைக்கவில்லை எனில் வேலை கிடைக்கவில்லை எனக் கூப்பாடு போடுவார். கிடைத்துவிட்டால் அவர்கள் வேறு உலகத்து மனிதர் ஆகிவிடுவர். அப்படித்தான் அந்தக் கிளை ஊழியர்களும்  இருந்தனர்.

அதிலும் முக்கியமாக முன் வரிசையில் வாடிக்கையாளர்களுக்கு பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்த இரண்டு அருகே அருகே அமர்ந்திருந்த இரு பெண்மணிகள் தாங்கள் எடுத்துக் கொண்ட சேலையைப் பற்றி விவரமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளர்கள் நிறைய வரிசையில் இருக்கின்றனரே என்னும் கரிசனம் துளியும் இன்றி.

இவர்கள் மட்டுமல்ல எல்லா இடங்களிலுமே வாடிக்கையாளர்கள் நின்று கொண்டு அமர்ந்தபடியே இருந்தனர். பணி விரைவாக நடைபெறவில்லை....எனது பக்கம் சில அறிவிப்புப் பலகைகள் அழகான சட்டம் இட்டபடி போட்டோவில் தொங்கிக் கொண்டிருந்தது...அதில் வரைவோலைக்கு இத்தனை நிமிடம் காசோலைக்கு இத்தனை நிமிடம் ஒவ்வொரு பணிக்கும் இத்தனை நேரத்தில் முடிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தியபடி இருந்தது.  மகாத்மா காந்தி வேறு புகைப்படமாக வாடிக்கையாளரே எங்கள் சேவையில் அரசர் என்று சொல்லியபடி இருந்தார்.

நான் எனது பணி முடிவான நேரத்தை கவனித்தேன் இருபது  அல்லது 30 நிமிடத்தில் முடிய வேண்டிய பணிக்கு சுமார் 2 அல்லது 3 மணி கூட ஆகியிருக்கும் இப்போது சரியாக நினைவில்லை...எனது வரைவோலை கையில் கிடைத்ததும் அதைப் பெற்றுக் கொண்டு அந்த வேலையை அடுத்து செய்து கொள்ளலாம் என முதலில் அந்த அறிவிப்புப் பலகையில் இருந்த ஆர்.எம்.பழனியப்பன் ரீஜினல் மேனேஜர் சேலம் என்றிருந்த விலாசத்துக்கு அது அப்போது எல்.ஆர்.என் காலனியில் டி.எம்.எஸ். கண் மருத்துவமனை அருகே இருந்தது என நினைக்கிறேன்...அவருக்கு உங்கள் விளம்பரப் பலகை சொல்வது இப்படி பணி நடக்கிறது இப்படி என எழுதினேன்.

சிறிது நாட் கழித்து அந்த வங்கியில் இருந்த சில முக்கியப் புள்ளிகள் எனது வீடு வந்து சேர்ந்தனர். ஆம் எழுதியது உண்மைதான் என உறுதி செய்தேன். அந்த வங்கி மேலாளர் முதல் நிறைய மாறுதல் நடைபெற்றதாகவும் அறிந்தேன். அந்த ரீஜினல் அதாவது பிராந்திய மேலாளர் மிகவும் நல்லவர் போலும் மிகவும் நன்றாக அந்த புகாரின் விளைவுகள் இருந்தன. அதன் பின் அந்த வங்கி நன்றாக இயங்கி வந்ததாகவும் அறிந்தேன். அனால் அது எவ்வளவு காலம் என்றுதான் எனக்குத் தெரியாது....

ஆனால் அந்த சமயத்தில் உள்ளூரில் அந்த வங்கியில் பணி செய்து வந்த ஒரு நபரும் அவருடன் மற்ற சிலரும் வந்து எனது வீடு எனது நிலை எல்லாம் கேட்டறிந்து கொண்டு எனக்கு ஏதாவது ஊறு விளைக்க முடியுமா என்றெல்லாம் முயன்றதை அறிந்தேன். ஆனால் அந்த பூச்சாண்டி எல்லாம் இந்த நபரிடம் காட்ட முடியாது என அவர்கள் அறிந்து ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டனர் என்பதையும் காலம் எனக்கு காட்டிக் கொடுத்தது. அதில் இன்னொரு ருசிகரமான சம்பவம் என்ன வெனில் எனது மலைவாழ் மக்கள் பணிக்காக கருமந்துறை என்ற வங்கியில் பணி புரிந்த மற்றொரு நபர் அப்போது இந்த வங்கியில் ஒரு மேல் அலுவலர் பதவியில் இருந்து பின் இருக்கையில் இருந்தபடி நடந்த நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்தது ஏன் எனில் இவரிடம் நான் அந்த மலை வங்கியில் நடந்து கொண்டிருந்த போது எத்துணை பணிவாக நடந்து கொண்டேனோ அதெல்லாம் அவருக்குத் தெரியும் அந்த நபரா இவர் இங்கு இந்த அளவு துணிவைக் கைக்கொண்டார் என அவர் வியப்படைந்ததையும் என்னால் கவனிக்க முடிந்தது.
IndPay - Apps on Google Play
இதன் விளைவாக நிகழ்ந்த மற்றொரு வங்கி சார்ந்த இதை விட மேலும் ருசிகரமான நிகழ்வை மற்றொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment