Monday, May 4, 2020

நான்கு உண்மைக் கதை நான்கு: கவிஞர் தணிகை

நான்கு உண்மைக் கதை நான்கு: கவிஞர் தணிகை
Buying a new car? Be careful about hidden costs - Moneycontrol.com


இலஞ்சம் என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அது என்ன வடிவத்தில் இருக்கிறதென சரியான வடிவத்தை புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். எனவேதான் இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த போது மக்கள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் எனக்கு எழுதிய கடிதத்தில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கும் நிலையை வாழ்நாள் முழுதும் மேற்கொள்ள வேண்டும் அப்படிப் பட்ட குடும்பங்கள் பெருகப் பெருக தானாக இலஞ்ச ஊழல் மறையும் என தனிப்பட்ட முறையில் போராடி மடிந்து போகாதே என ஆற்றொழுக்குப் படுத்தி இருந்தார்.

உணவகத்தில் உணவருந்தி விட்டு நமக்கு உணவெடுத்து வந்து கொடுத்தவர்க்கு கொடுக்கும் டிப்ஸ் என்பதும், ஒரு வேலையை முடித்துக் கொடுத்த நபருக்கு தாமாக விருப்பப் பட்டு மனமுவந்து கொடுப்பதெல்லாம் இந்த இலஞ்சத்தில் வராது...இந்த வேலையை நியாயமாகவோ அநியாயமாகவோ முடித்துக் கொடுத்து விடுகிறேன் ஆனால் நீங்கள் எனக்கு அதற்காக இதைச் செய்ய வேண்டும் இதைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கும்போது அது இலஞ்ச ஊழலின் வித்து அதுவே இலஞ்ச ஊழலின் ஊற்றுக் கண்ணாக இலஞ்ச ஊழலின் தாயாகிறது...இந்த இலஞ்ச ஊழலே அரசின் இலவசங்கள், வாக்குக்கு கொடுக்கும் மது, பணம், உணவு யாவுமே அதன் கீழ் வருகிறது மேலும் குடிநீரைக் கூட விற்பனை செய்ய அங்கீகாரம் பெறுவது தனியார் மயத்துக்கு அடிப்படியாவது இவை போன்றவை அதன் பிள்ளைகளாக கிளை விரிக்கிறது.

ஒரு முறை ஒரு சொத்து வாங்குவதில் விற்பதில் அதன் செயல்பாட்டில் நான் பங்கு கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு என ஒரு இடைத்தரகர் அவர் ஒரு  x என்றே குறிப்பிட வேண்டும் என ஒரு நண்பர் குறிப்பிட வேண்டும் என்பார்....நெற்றி நிறைய திருநீறு எல்லாம் பூசிக் கொண்டு நெடு நெடு என இருப்பார் அவர் எப்படியோ வாங்குவோர் விற்பார் வழியே எனக்கு அறிமுகமானார்.

அந்த செயல்பாட்டில் நான் அவரிடம் சொன்னேன் அரசை ஏமாற்ற வாங்குவார்க்கு விருப்பமில்லை என்ன அளவீடுகள் இருக்கிறதோ அதற்கேற்ப பதிவுத்துறைக்கு கட்டணம் கட்ட வேண்டும், மேலும் அளவீடுகளை எல்லாம் மாற்றி எல்லாம் போட வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டேன். இருப்பதை அப்படியே குறிப்பிடுங்கள் என்று தெளிவாகச் சொன்னோம்.
File RTI TamilNadu Online in Simple Steps-RTI Guide by OnlineRTI.com

ஆனால் அந்த ஈனன் நானறியாமலே பத்திரப் பதிவுக்கு ஏற்பாடு செய்து இதில் இன்னொரு விடயம் குறிப்பிட வேண்டுமெனில் அந்த வீடு முதலில் இன்னொருவரிடமிருந்து இந்த வாங்குவாருக்கு மற்றொரு நபரால் வாங்கப்பட்டு கொடுக்கப்படுவதாக இருந்ததால்...எங்கோயோ தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவதாக இருந்தது. முதலில் பதிவு செய்ய வேண்டும் என்ற சென்ற நாளில் அந்த முதல் விற்பனையாளர் அதாவது அவரிடமிருந்து பெற்று பதிவு செய்யாமலேயே நம்மிடம் விற்பனை செய்த நபர்கள் வந்திருந்தனர்...ஆனால் முதல் விற்பனையாளர்கள்  வரவில்லை என மற்றொரு நாள் என்றார்கள்... வாங்குவோர் ஏமாந்து திரும்பி வர வேண்டி நேர்ந்தது முதல் முறை.

அதில் அந்த இடைத்தரகர் என்ன செய்தார் எனில்  நாம் சொல்லியதற்கு மாறாக குறைத்து போட்டு எல்லாம் முடித்து விட்டு அதன் பின் மற்றும் சில காலம் ஆன பின் வாங்கியவர்களை அவர்களின் பிரதிநிதியை நீங்கள் அங்கே வந்து நில்லுங்கள் இங்கே வந்து நில்லுங்கள் என அவர் வருகிறார் இவர் வருகிறார் என ஏமாற்றி சேலத்திலிருந்தோ சென்னையிலிருந்தோ ஒரு சர்வேயர் அளவீட்டாளர் பெரிய நபர் வருகிறார் எனச் சொல்லி அவர் மறுபடியும் அளந்து பார்த்து அவருக்கும் இவருக்கும் மேலும் கையூட்டை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்துவிட்டார்....

இவ்வளவு தூரம் சொன்னபோதும் இந்த மனிதர் ஏன் இவ்வளவு ஈனத்தனமாக நடந்து கொண்டார் என்று அந்த நபரைக் கண்டபோதெல்லாம் நான் நொந்து கொள்வது உண்டு...அவரால் ஏன் அப்படி செய்யப்பட்டது என கேள்வி கேட்டுக் கொண்டு பார்க்கும்போது அனைவருமே அதில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது அது இந்த ஒரு வரவு செலவுடன் இல்லை இது போல பல பதிவுகள் வரும்போதெல்லாம் அவர்களிடம் தொடர்பு நீடிக்க வேண்டும் என்றும் அதற்கு இந்த வாங்குவோர் போன்ற சோணகிரிகள் எப்போதெல்லாம் கிடைப்பார்களோ அப்போதெல்லாம் இவர்களின் நாக்கு நீண்டு தொங்கிக் கொண்டு இருக்கும் நாய்களின் எலும்புத் துண்டுக்கு ஏங்கும் பணி தொடரும் என்பதெல்லாம் அதன் பின் தாம் தெரிந்து கொள்ள முடிந்ததாக இருந்தது. இவர்கள் எல்லாம் வேறு சைவர்கள் அசைவம் உண்ணாதார் என்ற அடையாளம் வேறு. உண்மையில் மனிதர்களின் பச்சை ரத்தம் உறிஞ்சிக் குடிக்கும் காட்டேறிகள் என்றால் அது இவர்கள்தாம்.

அது போன்ற செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட போதும் அதன் பின்  அந்த சொத்துக்கு பட்டா வாங்கித் தருகிறோம் இப்பொது பாதி செய்து தருகிறோம் அதன் பின் மீதி செய்து கொள்ளலாம் என மற்றொரு நபரிடமிருந்த வந்த செய்தியை மறுத்து எந்த வேலையையும் நீங்கள் செய்ய வேண்டாம்...அது முழுதாக கிடைக்கும்போது நேராகவே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அதை தவிர்த்து விட வேண்டியதாகி விட்டது.

அதன் பின் எவர் அறிவுரைக்கு வந்தாலும் நீங்கள் நேரடியாக அலுவலகம் செல்லுங்கள் பத்திரம் வாங்கி அதை எழுதி பதிவு செய்து கொள்ளுங்கள் இது போன்ற இடைத்தரகர்கள் அவர்கள் பிழைக்க அனைவரையும் ஏய்த்துப் பிழைக்கவே ஆவன செய்து வருகிறார்கள் என்று வழிமுறைப் படுத்த வேண்டிய நிலை கிடைத்திருக்கிறது. அதுவும் இப்போது ஆன்லைனில் எல்லாம் செய்து முடிக்கலாம் என்கிறார்கள் அதிலும் நேர்த்தி இல்லை. அதிலும் இல்லை நேர்மை. இழுப்பறிதான்.

என்று முடிவது இந்த நடைமுறைச் சிக்கல் எல்லாம் ...இதன் படிதான் இன்னும் போக்குவரத்து அலுவலகங்கள் எல்லாம் கூட இடைத்தரகர் பிடிக்குள்ளேயேதான் சிக்கிக்க் கிடைக்கிறது. அது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வழியாகச் சென்று ஓட்டுநர் உரிமம் பெறுவதானாலும் ஓட்டுனர் பயிற்சி பெறுவதனாலும் சரி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment