Monday, May 11, 2020

ஏழு: உண்மைக் கதை 7: கவிஞர் தணிகை

ஏழு: உண்மைக் கதை 7: கவிஞர் தணிகை

Drinking and driving... in Pakistan? | The World from PRX


வழக்கம் போல பாட்டாளி மக்கள் கட்சி தமது ஏதோ ஒரு காரணத்துக்காக பந்த் செய்தபடி இருந்த நாள். அப்போது.நான் வீட்டில் இருந்தேன். நிலை எப்படி இருக்கிறது என கவனிக்க அல்லது வெறும் சாலையில் நடக்க கைலி/லுங்கி கட்டியபடி சாலையில் செல்ல ஆரம்பித்தேன் என்னை அடையாளம் தெரிந்து கொண்ட ஒரு துணைக் காவல் ஆய்வாளர் சல்யூட் அடித்தார். எனக்கு எஸ்.ஐ சல்யூட அடிப்பது யார் எனப் பார்த்தால் சார் நான் இப்போது மேச்சேரி காவல் நிலையத்தில் எஸ்.ஐ...பதவி உயர்வு பெற்று வந்து பணியில் இருக்கிறேன் இன்று இங்கு பந்தோபஸ்து பணி என்றார். எனது நினைவு பின்னோக்கி ஓடியது.

அது 1990க்கும் 1991க்கும் இடைபட்ட காலம் என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. என்னைப் பேட்டி காண பெங்களூர் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையிலிருந்து ஒரு குழு வந்திருந்தார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவு வசதி வாய்ப்புகளை அவர்கள் வசதிப்படி மிகவும் உயர் தரமாக செய்து கொடுத்தேன். அதில் வந்திருந்த அந்தக் குழுவின் தலைவர் பெயர் : ஸ்டீபன் என நினைக்கிறேன் குடும்பஸ்தர். இளைஞர்.

அப்போது கல்ராயன் மலையில் பெரிய கல்ராயன் மலையில் எனது மக்கள் பணி.மலைவாழ் மக்களுக்கானது. எனது குழுவில் சுமார் 25 இளைஞர்களுக்கும் மேல் பணி புரிந்து வந்தனர். அப்போதே நூற்றுக்கும் மேலான கிராமங்களில் சுருக்கமாகச் சொல்லப்போனால் எனது கொடி பறந்து கொண்டிருந்தது.

பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டிய நிலையில் இருந்ததால் இரவு, அதிகாலை, மாலை இப்படி கோடையின் வெயில் அல்லது வெயில் சுட்டெரிக்காத நேரத்தையே பயணத்துக்குப் பயன்படுத்துவது வழக்கம். எமது இளைஞர்கள் சொல்வார்கள் ,சார் ஷூ வை....காலணியை இழுத்துக் கட்டி விட்டார் என்றால் எங்களால் கூட போட்டி போட முடியாது அப்படி நடப்பார், நடந்து கொண்டே இருப்பார் ...எனப் பெருமையாக...

அப்படி ஒரு நாள் அதிகாலையிலேயே குன்னூர் கிராமத்தில் இருந்தோம். கிராம சபைக் கூட்டம். அப்படி அதிகாலை அல்லது இரவில் கிராமத்துக்கு செல்வதில் ஒரு பயன்பாடு மக்களை ஒருசேர ஊருக்குள் பார்க்கலாம்.நமது செய்தியை ஒரேயடியாக சேர்த்து விடலாம். இல்லையேல் அவர்கள் வேலை நேரத்தில் சென்றால் அவர்கள் அனைவருமே தனித்தனியாக காடு மேடுகளில் பிழைப்புக்காக சென்று விடுவார்கள்....
High and dry - Frontline
எனவே குன்னூரில் நாங்கள் இருந்த சமயத்தில் அடியனூரில் இருந்து அடியனூர் பொன்னுசாமி என்ற இளைஞர் ஏன் எனில் ஒவ்வொரு ஊரிலுமே பொன்னுசாமி என்ற பேர் இருக்கும் எங்கள் கிராமங்களிலேயே அடியனூர் பொன்னுசாமி, நாகலூர் பொன்னுசாமி, இப்படி இருப்பார்கள் எனவே ஊரை சேர்த்துக் கொள்வோம் பேருடன்....அங்கு வந்து எங்களிடம் ,சார் எனது அம்மாவை அவர் ஒரு சத்துணவு ஊழியர் ஓய்வு பெறும் வயதில் இருப்பவர் காவலர்கள் வந்து அடித்து சத்துணவுக் கூடத்தில் சிறை வைத்து இருக்கின்றனர் என தெரிவித்தார்...

குன்னூருக்கும் அடியனூருக்கும் நாலைந்து கிலோமீட்டர் இருக்கும் மண்சாலை இருமருங்கும் உண்ணி முள் செடி இருக்கும் புதராக....சரி வாருங்கள் என கிளம்பினோம் ....அங்கு சென்று பார்த்த போது இரண்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த ஒரு தலைமைக் காவலர், இரண்டு காவலர்கள், அவர்களுக்கு வழிகாட்ட வந்திருந்த கீழ் இருந்து அதாவது ஆத்தூர் மலையடிவாரத்தில் இருந்து வந்திருந்த இரண்டு நபர்கள் இருந்தனர். அதில் காவலர்கள் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு முழு பாட்டில் சாரயத்தை வைத்தபடி குடித்த படி இருந்தனர். இதுதான் நாங்கள் கண்ட முதற் கண்ணில் பட்ட காட்சி... எங்களைப் பார்த்தவுடன் குடிப்பதை நிறுத்தி விட்டு மது பாட்டில்களை ஒதுக்கி வைத்தனர்.

மெதுவாக ஆரம்பித்தோம்...என்ன சார் என்ன ஆச்சு, அந்த அம்மாவை ஏன் அடித்து சத்துணவுக் கூடத்தில் வைத்து இருக்கிறீர்களாமே....

அவங்க புருஷன் சாராயம் காய்ச்சுகிறான் எனப் புகார், அவனைத் தேடி வந்தால் அவனைப் பிடிக்க முடியவில்லை, எனவே அவன் மனைவியைப் பிடித்தால் தான் அவன் வருவான் என அதிகாமக எல்லாம் அடிக்கவில்லை...எனப் பிடித்து வைத்துள்ளோம் என்றார்கள்....

இதெல்லாம் சரியில்லை சார் என எங்கே அந்த அறையைத் திறங்கள் என்றோம் ,அந்த அம்மாள் பேச்சு மூச்சின்றி கிடந்தார்...
How the original inhabitants of Idukki were systematically ...
உடனே அனைவரையும் ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்து வரச் சொல்லி அதில் போட்டு உடனே இவரைக் காப்பாற்ற வேண்டும் என விரைவு படுத்தினேன்...செய்வதனைத்தையும் பத்திரிகை குழுவினரும் கவனித்தபடி இருந்தனர்.

அங்கிருந்து பகுடுபட்டு வரவேண்டும் அங்கிருந்து கருமந்துறை அல்லது கீழ் உள்ள மருத்துவ மனைக்கு ஆத்தூர் அல்லது சேலம் கொண்டு வர வேண்டும்  இடையில் குன்னூரில் முதல் உதவி செய்து கொள்ளலாம் எனத் திட்டம். அங்கு குன்னூர் முக்கிய கிராமம் அங்குதான் நியாய விலைக்கடை ,பள்ளி, சிறு அஞ்சல் நிலையம், ஒரு செவிலியர் கொண்ட சிறு அரசு உதவி மருத்துவ மையம் எல்லாம் உண்டு...

அவர்கள் நாங்கள் எல்லாம் ஒரு கூட்டமாக அந்த அம்மாவை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். இடையில் நான் அந்த அம்மாவின் நாசியில் கை வைத்துப் பார்த்தேன் நன்றாக மூச்சு வந்து கொண்டுதான் இருந்தது...இவர்கள் காவலர்கள் அடித்திருந்தது உண்மைதான்...

சற்றேறக் குறைய கொஞ்ச தூரம் நடக்க ஆரம்பித்து குன்னூர் வரும் வழியில் உணர்ச்சி மயமான இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்ற மகாத் துணிச்சலில் அந்தக் காவலரை, தலைமைக் காவலரை,அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த அந்த இரு நபர்களையும் நையப் புடைக்க ஆரம்பித்தனர்....பக்கத்தில் இருந்த உண்ணி முட் செடியில் எல்லாம் இழுத்துப் போட்டு நான் தடுக்க முனைவதற்குள் சம்பவம் நிறைவேறிவிட்டது...அதில் தலைமைக் காவலருக்கு தலையில் வேறு அடி...இரத்தம் வர ஆரம்பித்து விட்டது

டேய் விட்டுடுங்கடா விட்டுடுங்கடா செத்துடப் போறாங்க எனத் தடுத்தேன்...ஒரு வாறு அடங்கினார்கள். அடக்கி விட்டேன்...குன்னூர் வந்தோம் காவலர்களுக்கு முதல் உதவியாக காயத்திற்கு ப்ளாஸ்டர் பற்று போடப்பட்டது...நமக்கு அந்த அம்மாவைக் காப்பாற்றுவதுதான் குறிக்கோள் . எனவே இருதரப்பையும் சமாதானப்படுத்தி இரு தரப்பும் இனி இதற்கு மேல் எந்த மேல் நடவடிக்கையும் எடுத்து விடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டேன்...

அந்த அம்மாவை விரைந்து அங்கிருந்து அடுத்த கட்டமாக கீழ் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். இந்தக் காவலர்களும் சென்றார்கள் பத்திரமாக...நாங்களும் பத்திரிகைக் குழுவினரும் கீழே வந்து விட்டோம் மலைச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு.
எனக்கு உள்ளூர பயம் காவலரையே கைவைத்து விட்டனரே என்ன ஆகப் போகிறதோ காவலர் வாகனத்தில் நிறைய காவலர் எல்லாம் வந்து ஊரைச் சூறையாடி விடுவார்களோ என்றெல்லாம் கனவு கற்பனை...

அந்த அம்மாள் நல்ல நிலையில் இருப்பதாகவும் , எனது பயத்திற்கேற்ப ஏதும் நடக்கவில்லை என்பதும் இரு தரப்புமே அமைதியாக இருந்தார்கள் என்பதும் நடந்த முடிவு....

அந்த தலைமைக் காவலரே எனக்கு சல்யூட் அடித்த துணைக் காவல் ஆய்வாளர் என்று சொல்லாமல் சொல்லி முடிக்கிறேன்














IAS officer caught taking Rs 12 lakh bribe in Thane
பொருள்: கள்ளச் சாராயம் காய்ச்சுங்கள் என காவல்துறைச் சொல்ல, நாங்கள் காய்ச்சக் கூடாது மதுவிற்கு அடிமையாக இருக்கக் கூடாது என மக்களுக்குச்  சொல்ல இரண்டுக்கும் இடையில் அந்த மலைவாழ் மக்கள் இருந்த நிலையில் நடந்த சம்பவம் இது....இவர்களுக்கு மாமூல் அதாவது சரியாக இலஞ்சம் சென்று சேரவில்லை என்பதற்காகவே மலை மேல் இந்த சம்பவம் நடந்தது.... இதன் தொடர்புடைய இலஞ்சம், மது என்பதான மற்றொரு சிறு கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment