மது விற்பனையில்தான் ஆசிரியர்களுக்கு சம்பளமே தரப்படுகிறது படுகிறது......தரம் தாழ்த்தப்படுகிறது
.:தமிழக அமைச்சரின் பேச்சை நினைவில் கொள்ள வேண்டும் அனைத்து தமிழக ஆசிரியர்களுமே...
v.o.chithambaram : Freedom Fighter. Person rendered Shipping business against English Govt.
செப்டம்பர் 5.
அன்னை தெரஸா நினைவு நாள்
கப்பலோட்டிய செக்கிழுத்த ஒட்டப்பிடார வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்
சர்வபள்ளி டாக்டர் சர். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்
ஆசிரியர் தினம்.
இத்தனை நினைவோட்டமும் இன்றைய நாளில் பின்னிப் பிணைய எழுதியே ஆக வேண்டும் என்ற மனக்கிடக்கையின் காரணமாகவே இந்தப் பதிவு.
ஒரு சிறுமியாக இந்த நாட்டை சொந்த வீட்டை தாயை பிரிந்து வந்து ஒரு ஆசிரியையாக வாழ்க்கையை ஆரம்பித்து தெய்வ நிலை அடைந்த ஒரு திருமணமாகாத அருந்தாய்...
ஓ. பெண்களே
உங்களில்
யாராவது தெரஸாவாக
தயாராக இருந்தால்
அவர்க்கு
செருப்பாகத் தயாராயிருக்கிறேன்
என நான் கவிதை எழுத ஆரம்பித்த காலத்திலேயே எழுதியதுண்டு.
அவரின் நினைவு நாள் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்
ஏன் எனில் அவர் வாழ்வை மிகவும் உன்னதமான ஒளியுடன் வாழ்ந்து முடித்து மனித குலத்துக்கே மாமருந்தாய் தம் பிறப்புக்கு ஒரு பொருள் தந்து மறைந்திருக்கிறார்.
கப்பலோட்டிய தமிழனுக்கு பிறந்த நாள் என நாட்காட்டியில் ஒரு பக்கம் போட்டுக் கொண்டு அவர் மகன் வாலேஸ்வரன் வறுமையில் வாடி இறந்த செய்தியையும் நாம் காணும் இவ்வுலகத்தில் நாம் நமது மண்ணை மீட்டுத்தந்த அந்த செக்கிழுத்த புண்ணியவானுக்கு நாம் தமிழ் மண்ணில் செய்ய முடிந்த நல்லது அதுதானே... வாழும்போதே நொந்துதானே செத்தார் அவரது வாரிசுகள் மட்டும் என்ன செய்ய முடிந்தது...எல்லாமே பொய்களிலுமே பணப்பைகளிலுமே உலகு முடிந்து விட்டதே...
அவரின் பிறந்த நாளை மட்டும் ஏன் இந்த அரசு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்...எவன் எவளின் பிறந்த நாளை நாட்காட்டியில் போடுவது போல இதுவும் ஒன்றாகத் தானே ஆகிவிட்டது?
அடுத்து இராதாகிருஷ்ணன் வாழும்போது உச்சம் தொட்டு வாழ்ந்து முடித்தவர்...ஆசிரியராக ஆரம்பித்த வாழ்வு இந்தியாவின் முதல் குடிமகனாக வாழ்ந்த வரலாறு சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
மேலும் அந்த நாளை ஆசிரியர் தின நாளாக சொல்வதற்கு இவர் பிறந்த நாளைத்தானே சொல்கிறோம்...
நல்லதை மகிழ்வை பகிர்ந்து கொண்டு நினைவு நாளாக நினைத்துப் பார்த்ததற்கு மாறாக ரஷியவில் திருமணமான தம்பதிகள் கூட நாட்டுக்கு உழைத்தவர் நினைவிடத்தை முதலில் சென்று தரிசித்து வருவது போல இந்த நாட்டிலும் இனிமேல் வென்றவர்கள் வாழ்வை விட தியாகம் புரிந்து சரியாக வாழ்வை அனுபவிக்கதவர்களின் நாட்களைத்தான் நாம் நினைவில் கொள்ள ஏடுகளும் எழுத்துகளும் நாடும் உதவிட வேண்டும்...அது தான் இந்த நாட்டு மக்களுக்கு நல்வழி ஏற்பட நம்முன் இருக்கும் ஒரே வழி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment