Monday, September 17, 2018

இருளும் ஒளியும்: கவிஞர் தணிகை

இருளும் ஒளியும்: கவிஞர் தணிகை

இன்று பெரியார் 140 வது பிறந்த நாளைக் குறிக்கும் பொருட்டு ஒரு போஸ்டரில் பெரியார் சொல் அல்ல பகை முடிக்கும் ஆயுதம் என்றிருந்தது. பெரியார் பெயர் அல்ல பகை முடிக்கும் ஆய்தம் என்றிருக்கலாமோ என்று தோன்றியது.
Related image



குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்னும் குறள்.

இருள் என்றால் என்ன மிகவும் குறைந்த ஒளிதானே என்னும் அறிவியலும் பாரதியும்.

காமராசருக்கு இருளும் ஒளியும் ஒன்றாகவே இருந்தது. அதாவது எல்லாருக்கும் இரண்டு பக்கம் என்று சொல்வார்கள் அல்லது அனைவருக்குமே மறுபக்கம் ஒன்று உண்டு என்று சொல்வார்கள்.

மேலை நாடுகளின் ஊடகம் யாவும் எல்லாவற்றையும் தூண்டித் துருவி தனிப்பட்ட வாழ்வை அலசினாலும் அவற்றை அவர்களின் பொது வாழ்வின் செயல்பாடுகளுடன் சேர்த்து வைத்து எடை போடுவதில்லை அப்படிப் போட்டிருந்தால் அமெரிககாவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்க முடியாது.

ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் புற வாழ்வு அக வாழ்வு இரண்டுமே ஒழுக்கம் சார்ந்து இருக்க வேண்டும்... என்றே சான்றோர் விரும்புவர் போற்றுவர்

 அதன் படி பார்க்கப் போனால் காமராசருக்கும் பின் வந்த அண்ணா கூட அவள் ஒன்றும் பத்தினியும் கிடையாது நானொன்றும் புத்தனும் கிடையாது என்று பாடல் இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, திரைக்கதை என அனைத்துத் துறைகளிலும் திரைப்படத்தில் சுவாசித்த பிரகாசித்த ஜொலித்த பானுமதியைப் பற்றியும் தன்னைப்பற்றியும் சொன்னதாக ஏடுகளில் வந்ததாக சொல்வார்கள்...

கலைஞர் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களின் வெளி வாழ்வு போற்றப்பட்ட நிலையில் இருந்த போதிலும், அறிவுக் கூர்மையைப் பற்றி அனைவரும் மெச்சிய போதிலும் இவரது குடும்ப அரசியல், பெண் வழிச் சாரல் எம்.ஜி.ஆர் என்னும் மனிதரிடம் ஆதரவு கேட்டு பெற்று முதல்வராகி அதன்பின் அவரையே கட்சியை விட்டு அனுப்பி அவர் உருவான  அவரை உருவாக்கிய வரலாற்றின் காரணம் இவரது சுய நலம்...மேலும் கலாமை மறுபடியும்  குடியரசுத் தலைவராக்க ஒத்துழையாமை, மூப்பனாரை பிரதமர் பதவியில் காண மறுத்தது, கலாமை செம்மொழி மாநாட்டுக்கு அழைக்காமல் விட்டது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

எம்.ஜி.ஆர் மக்கள் திலகம். ஏழைகளை கட்டிப் பிடித்து ஆறுதல் கூறி ஆட்சிக்கட்டில் ஏறியவர்...பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்தே சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் என்று பேர் பெற்றவர் பகைத்துக் கொண்டால் அழித்தும் விடுவார் என அனைவரும் பயந்தவர்கள் நிறைய பேர்.
ஆனால் பகை இல்லாமலே சந்திரபாபு, அசோகன் ஆகியோருக்கு கால்ஷீட் கொடுக்காமலேயே கொன்றவர் . ஜெ வை சுய நலக் காரணங்களுக்காக வளரவைக்கவும் முடியாமல் வெளியேற்றவும் முடியாமல் கட்சியை நடத்தியவர்...ஒரு ஐந்து ஆண்டுக்காலம் நல்ல முறையிலும் மறு ஐந்தாண்டுக்காலம் மந்திரி பிரதானிகளை கட்டுக்குள் வைக்காமலும் வைக்கமுடியமலும் நோயில் வீழ்ந்தவர்...

ஜெ ஒன்று பணபலம் இல்லையேல் படை பலம். பாத்திமா பீவி முதல் இந்து என் ராம், தேர்தல் தலைமைக் கமிஷனர் சேஷன், மணி சங்கர அய்யர்
வழக்கறிஞர் சண்முக நாதன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் , சந்திரலேகா ஐ.ஏ.எஸ் இப்படி ஒரு பட்டியலே நீண்டு போகும் இருளிலும் ஒளியிலும்.

ஆக ஆண்டவர்கள் வெளி வந்த ஒளி வட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ஆட்சியாளர்களாக விளங்கிய போதிலும்...இருள் உள்ளத்திலும் வாழ்ந்து வந்தனர்.

 பெரியாரும் அண்ணா, கலைஞர் ஆகிய தம்பிமார்களுடன் எல்லா ஊர்க்ளிலும் சென்று பேசி அதையே மூலதனமாக்கி அறக்கட்டளை எல்லாம் செய்து, தள்ளாத முதுமையிலும் பழுத்த பழமாய் சுழன்றாடியவர்...

ஆனால் அவர் தம்பி மார்களே அல்லது கண்ணீர்த் துளிகளே ஏற்க முடியாமல் மணியம்மையை ஏற்க அதிலிருந்து வீரமணி என அறக்கட்டளை என அதுவும் பிரிந்து கொள்ள...இப்போது திராவிடர் கழகமும் இரண்டு மூன்றாக பிரிந்து கிடக்கிறது...

 மற்ற இருள் பற்றி எல்லாம் எழுதும் எண்ணம் ஏதுமில்லை. ஏன் எனில் அவர்களிடம் எல்லாம் இருளும் இருந்தது, ஒளியும் இருந்தது...இனி வரும் இவர்களிடம் எல்லாமே இருள்தாம்...

வாஞ்சி நாதன் கதையும், காந்தியிடம் கொடுத்தனுப்பிய் தமிழர் பணம் செக்கிழுத்த செம்மலை சென்றடையாத பணம் என்றெல்லாம் செய்திகள் புதிய சிந்தனையை ஒளியில் கிடைக்கச் செய்கின்றன. இவற்றைப் பற்றி எல்லாம் ஏற்கெனவே ஒரு நண்பர் என்னிடம் குறிப்பிட்ட இருளின் கதைகள் இவை என்பதும் நினைவிற்கு வருகிறது.


Image result for periyar kamaraj kalaignar MGR J etc
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment