Tuesday, September 11, 2018

முப்பெரும் நினைவும் மூன்றாம் விளைவும்: கவிஞர் தணிகை

முப்பெரும் நினைவும் மூன்றாம் விளைவும்: கவிஞர் தணிகை

Image result for age of vivekananda

38 வயதில்  மறைந்த பாரதியின் நினைவு நாளும், 39 வயதே வாழ்ந்தும் 1893ல் சிகாகோவில் சர்வ சமய ஆராய்ச்சிக் கழகத்தில் அமெரிக்க சகோதரி சகோதரர்களே என ஆரம்பித்த பேச்சு என்றும் நிலை பெற்றதாகிவிட்ட நாள் மேலும் அமெரிக்காவின் வணிக இரட்டை கோபுரங்களை தகர்த்த நாளும் இதுதான்.



பின் லேடன் பிணத்தை கடலுள் கொண்டு ஆழ்த்திய அமெரிக்கா அவர் ஒளிந்திருந்த பாகிஸ்தானுடன் இன்னும் நல்லுறவையும் ஆய்த விற்பனையையும் சுமூகமாகவே செய்து வருகிறது. எல்லாவற்றுள்ளும் ஒரு சுயநலம்.

பாரதியின் நினைவு நாள் பின்னால் வந்தது விவேகானந்தர் அமெரிக்கப் பிரசங்கம் செய்த நாள் 1893 செப்டம்பர் 11 முன்னால் வந்தது. இவற்றுள் எல்லாம் ஒரு பிணைவு நிகழ இயற்கையின் இயல்பான காரணங்கள் ஏதும்  இருக்கின்றனவோ என்னவோ..

மூன்றாம் பிறையை தனிக் கீற்றாக அறிவியல் அறிந்தவரால் பார்க்க முடிவதில்லை. அதன் முழு வடிவில் அதன் முழு உருண்டையை குறைந்த பட்சம் ஊகித்து கற்பனையாக அல்லது லேசாகத் தெரிவதை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது. சூரியனின் சிறு அளவான ஒளி அதன் மேல் படுவதை, அல்லாமல் படாமல் இருப்பதையும் சேர்த்து நம்மால் கவனிக்க முடிகிறது.

நண்பர் பாரதியின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை அளிக்கலாமே என்கிறார். அவற்றை எல்லாம் விட அவரின் சமத்துவ கனவை நினைவாக்க குறைந்த பட்சம் ஒரு உயிருக்கு/ சில உயிருக்கு அதிக பட்சம் ஒரு கிராமத்துக்கு உங்களால் முடிந்த நன்மையை செய்யுங்கள் அவரின் பார்வையில் அந்தக் கோணத்தில். அந்த மனிதர் எவ்வளவோ பிற்காலத்தில் வாழ வேண்டிய வாழ்வை எல்லாம் முன்னரே வாழ்ந்ததால் ஒரு கோமாளி போல கருதப்பட்டார். ஒரு பைத்தியக்காரன் போல் சித்தரிக்கப்பட்டார். அவர் ஒரு கஞ்சாப் பேர்வழி எப்போதும் போதையில் இருப்பார் என பாரதி தாச விரும்பிகள் அவரை மறுப்பதுண்டு வேரை விட்டு விட்டு கிளையின் பூக்களைக் கண்டு இரசிப்பது போல பாரதியை விட்டு விட்டு பாரதி தாசனை மட்டும் பார்த்துக் கொண்டு...

காலம் சரியாக கை கொடுக்க மறுக்கிறது . உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்கினால், தியானத்துக்கென நேரம் ஒதுக்கினால் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நேரம் கிடைக்கவில்லை...இதற்கு என நேரம் ஒதுக்கினால் நடைப்பயிற்சியும் தியான நேரமும் முடக்கப்பட்டு விடுகிறது.

எனவே விரிவாக பின்னொரு காலம் பேசட்டும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Image result for twin tower attack


No comments:

Post a Comment