Thursday, September 13, 2018

பொறுப்பற்ற தீர்ப்புகளில் இதுவும் ஒன்று: கவிஞர் தணிகை

Image result for supreme court of india




ஒன்றே வாளின் சட்டம் கூராயிருந்தால் வெட்டும்.

ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றத்தில் தொடர்புடையதாக 25 ஆண்டுக்குக்கும் மேல் தண்டனையை அனுபவித்த அந்த 7 பேர் விடுதலையின் பேரில் உச்ச நீதிமன்றம் மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற தீர்ப்பு வழங்கியுள்ளது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதான தீர்ப்பாகவே விளங்குகிறது.

பந்தை மாநில அரசுக்கு அடித்து விட்டு எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக உள்ளது.

இவர்கள் விடுதலை செய்யச் சொல்லி தீர்மானித்து சட்டசபையில்/ அமைச்சரவையில் தீர்மானித்து ஆளுனரின் அனுமதிக்கு அல்லது அங்கீகாரத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதை ஏற்றே ஆகவேண்டும் என இவர்கள் தரப்பில் சொல்ல, சு.சாமி மற்றும் உள் துறை ஆகியவை அதை அனுமதிக்க மாநில ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனச் சொல்லிவருவதும் சாதாரண என் போன்ற பாமரனுக்கெல்லாம் குழப்பத்தை ஏற்ப‌டுத்துகிறது.  அதனால் தேவையற்ற கால தாமதமும் ஏற்பட்டுள்ளது

ஜெ தீர்ப்பு அவர் முடிவுக்கும் பின் வந்தது போல, ஓரினச் சேர்க்கை சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படும் நாடுகளுள் 25 வது நாடாக சென்று சேர்ந்து கொண்டது போல ஏதாவது ஒரு தீர்ப்பை உறுதியாக வழங்கி இருக்க வேண்டும் இந்தியாவில் நிலைப்பாடு அந்த 7 பேர் வாழ்க்கை மீது.

அதை விடுத்து இப்படி நழுவி இருப்பது எந்த உட்பொருளுடன் இந்த செயல்பாடு கையாளப்படுகிறது என்றே எம் போன்ற ஞான சூன்யங்களுக்கு விளங்கவில்லை.

அப்பா, அம்மா பிள்ளை செய்வது ஒன்று தவறு, அல்லது சரி என ஓர் நிலையில் நின்றே சொல்வார்கள் அது வருத்துவதாக இருந்தாலும், உறுத்துவதாக இருந்தாலும்...

எல்லாவற்றிலுமே யாருக்கு எதனால் அடுத்து வரும் தேர்தலில் வாக்கு வங்கி குறைந்து விடுமோ என்ற போக்கே நிலவுகிறது. நடப்பது எவருக்குமே எதுவுமே தெரியாத போதும். இவை எல்லாம் முன்னெச்சரிக்கை. விளையாட்டாகவே இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment