Thursday, August 30, 2018

புதுசாம்பள்ளி தெய்வானை சுப்ரமணியம் மகனாகிய நான்: கவிஞர் தணிகை

 புதுசாம்பள்ளி தெய்வானை சுப்ரமணியம் மகனாகிய நான்: கவிஞர் தணிகை


சிறு சிறு உதவிகளில் சிலிர்த்திடும் நெஞ்ச‌ம்
அடுத்தவரை மகிழ்ச்சிப் படுத்த மகிழ்ந்திடும் நான்..

தந்தையின் பேர் யாருக்காவது இருந்தாலும் அவர்களுக்கு நன்மை செய்யத் தோன்றும், அம்மாவின் பேரும் அப்படித்தான். நமக்குகந்த நண்பர்கள் சகோதர சகோதரிகள் பேரும் அப்படித்தான். அவர்கள் இல்லாதபோது அருகில்லாதபோது மேலும் மேலும் அந்நியராக இருந்தாலும் அவர்களிடம் நமக்கு ஏதோ ஒரு இனம் புரியவில்லை என்றாலும் ஒரு பிடிப்பு ஒரு ஈர்ப்பு, ஒரு நெருக்கம்.

சுப்ரமணிய ஆசாரி தச்சு வேலை செய்தவர் வயது 76. அவரது மகன்கள் இருவரும் என்னிடம் சிறிய வயதில் இலவச தனி வகுப்பில் பயின்றார்கள். அவர் நேற்று கல்லூரிக்கு பல் மருத்துவம் செய்து கொள்ள வந்திருந்தார். என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்தேன்.

எக்ஸ் ரே இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்தேன். இரத்தச் சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ள நானே அழைத்து சென்று நீலக்கண்ணனிடம் சொல்லி பக்குவமாக இரத்தம் எடுக்கச் செய்தேன். அவர் மிகவும் சிறந்த தொழில் விற்பன்னர். கையில் சுருக் எனக் கூட வலிக்காமல் மிகவும் நல்ல முறையில் தமது பணியை நிறைவேற்றுபவர். இரத்த சர்க்கரை அளவு 124 மில்லி கிராம் அளவே இருந்தது.

Image result for little things small helps


அந்த அறிக்கையை அவரை மேல் ஏற விடாமல் நானே பெற்று அறை எண் 2 அறுவை சிகிச்சி அறைக்கு அழைத்து சென்று என்னுடன் பாலமலைக்கு வந்த பயிற்சியில் இருந்த டாக்டர் இலக்கியா, டாக்டர் பீட்டர் , டாக்டர் ஆசிக்கா ஆகியோரிடம் ஒப்படைத்து நல்ல முறையில் பல்லை எடுக்கச் செய்தேன்

மேலும் மருந்துகளை எங்களுக்கு உள்ள சலுகை விலையில் 10சதவீதம் குறைத்து பெற்றுக் கொள்ள்ச் சொல்லி அதன் பின் எங்கள் கல்லூரிப் பேருந்திலேயே என்னுடன் அழைத்துவந்து  தொடர் வண்டியில் ஏற்றி எங்கள் ஊர் வரை அழைத்தும் வந்து சேர்த்தேன்.

இடையில்: தொடர் வண்டி கால நேர மாறுதல் குறித்து வணிக நிலை துணை மேலாளரைக் கண்டு கல்லூரி மாணவர்களுக்கு மாலை 5 மணிக்கு புறப்படுவது இடைஞ்சலாக இருப்பது பற்றி புகார் கூறிவிட்டு

விசாரணைப் பிரிவில் புகார்ப் புத்தகம் இருக்கிறது என்ற அறிவிப்பை பார்த்து உள் சென்று கேட்டேன் முதலில் இல்லை நீங்கள் சென்று நிலைய மேலாளரைப் பாருங்கள் என்றவர்கள் எனது கேள்விக்கணைகளைத் தாங்க மாட்டாமல் இடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரிஜீஸ்டர் வரிசைக்குள்ளிருந்து எடுத்து தந்தார்கள் . ஆங்கிலத்தில் ரயில் நேரம் 5. 30 மாலையில் இருந்து முன் கூட்டி 5 மணிக்கு என மாற்றிய ஆட்சேபக் கருத்துகளை புகாராக பதிவு செய்தேன். அவர்கள் நேரப்படி 17. 30 மணி முதல் 17 மணி...

மேலும் தமிழ் இந்து நாளிதழ் வைத்திருக்கும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிலையைப் பதிவு செய்தேன்.

இப்படிப்பட்ட செயல் எதிலுமே எனக்கு துளியளவும் பயனில்லை அடுத்தவர் நலம் சார்ந்த செயல்பாடுகளே இவை...என்னைப்பொறுத்த வரை நேரத்தில் வந்தால் கொஞ்சம் அதாவது பாதி வாக்கிங் போகலாம், கொஞ்சம் எழுதலாம், கொஞ்சம் தியானம் செய்யலாம்...ஆனால் கல்லூரி மாணவர்களின் கைக்காசு பேருந்துக்கு அதனால் ரூ 10க்கும் மாறாக 30 செலவாகிறது மட்டுமல்லாமல் எவருமே வந்து குறித்த நேரத்தில் தொடர் வண்டியைப் பிடிக்க முடியாத சூழல் பற்றிய பிறர் நலமே பொது நலமே இவையெல்லாம் நான் செய்யும் காரணங்களாகின்றன‌.

Image result for little things small helps


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: