Saturday, September 22, 2018

கயமை இது டாக்டர் மு.வ வின் கதை அல்ல: கவிஞர் தணிகை

கயமை இது டாக்டர் மு.வ வின் கதை அல்ல: கவிஞர் தணிகை

Related image

Related image


மணி தினமும் அந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக கடைசிப் பெட்டியில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொள்வதே வழக்கம்.
முன்பெல்லாம் கோவை , நாகை விரைவு வண்டிகளில் வரும் சோமு, மணிகண்டன், மாது, மிலிட்டரிக்காரர் ஆகியோர் அந்த பதினைந்து நிமிட பயணத்துக்காக அவனுடன் வந்து பேசிக் கொண்டிருந்து விட்டு ஓமலூரில் இறங்கிக் கொள்வதும் அதை அடுத்து மின் வாரியத்தில் பணி செய்யும் மாற்றுத் திறனாளி குப்புவும், மகளிர் அமைப்பில் எம்.டி ஆக இருக்கும் சந்திரகுமாரும் கடைசி வரை கம்பெனி கொடுப்பதாகவும் இருக்கும். ஆனால் இந்த ரயிலின் நேரம் இந்த சுதந்திர நாளுடன் மாற்றி முன் 5 மணிக்கு என்றாகி விட்டதால் எல்லா கூட்டணியும் சிதறி விட்டது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் போல.

கல்லூரி மாணவர்கள் மணிக்காக அந்த இடத்தை ஒதுக்கி விட்டு வேறு இடத்தின் உள்ள இருக்கைகளில் சென்று அமர்ந்து விடுவதும் வாடிக்கையான ஒன்று ...இப்போது நேர மாறுதல் காரணமாக அவர்களும் அதிகமாக காணப்படுவதில்லை.

அந்த நல்ல உயரமான உடல் வலுவான‌ அந்த மனிதன் வந்து அமர்ந்தான். வாயில் வெற்றிலைப்பாக்கு புகையிலை மெல்லுதலுடன். வந்தவுடனே என்ன சார் முருகன் வந்தானா? அவன் நேற்று நம்மிடம் வந்து வாங்கி சரக்கு அடித்து விட்டு சென்றிருக்கிறான், இன்று அவன் வாங்கித் தர வேண்டுமல்லவா? என்று அவனாகவே பேச ஆரம்பித்து விட்டான்

அவனைப் பார்த்தாலே மணிக்கு ஏதோ பிடிக்கவில்லை...

அவன் அரசு உத்தியோகத்தில் இருக்கிறானாம். ஒரு இலட்சம் மாசம் கிடைக்கிறதாம், இப்போது கூட கலெக்டர் மீட்டிங்கிற்கு சென்று வருகிறனாம்.

ஒரு இலட்சம் வாங்குகிறவன் ஒரு கூலிக்கு கோர்ட்டர் வாங்கி கொடுத்து சேர்ந்து குடித்து விட்டு, இன்று அவன் வாங்கித் தரவேண்டுமே எனத் தேடிக்கொண்டிருக்கிறாயே?

அவன் ஞாயிற்றுக் கிழமையில் கூட சென்று ஒரு கடையில் நிறுத்தல் அளவுகள் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மாவட்ட ஆட்சியர் வந்து அவனை அவனது வேலையை என்ன எனப் பார்த்துவிட்டு அவனை அப்படியே அவரின் காரிலேயே கூட்டிக் கொண்டு சென்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கலந்து கொள்ள வைத்ததாகவும் ஞாயிற்றுக்  கிழமைகளில் கூட பணி செய்யும் இவனது பணி ஆர்வத்தை பாராட்டி அனைவருக்கும் சென்று சொல்லிப் புகழ்ந்ததாகவும் அளந்தான்.

மேலும் இவன் இலஞ்சம் ஏதுமே வாங்கவும் மாட்டானாம். முன்னாளில் மிலிட்டரியில் பணியில் இருந்தானாம். அந்த கசங்கிப் போன ஒரு தாளின் நகலைக் காண்பித்தான் அதில்...இவன் பேர் தவறாக இருந்ததைப் பார்த்தான்.

அது இந்திக்காரன்களுக்கு பேர் சரியாகத் தெரியாதில்லையா ...அதனால் இப்படி எழுதி விட்டார்கள். இதையும் கலெக்டரிடம் காண்பித்தேன் என்றான்/

ஒருவருக்கு கரும்புக்கடைத்திடல் செல்பேசி...நான் வருகிறேன்,எந்த ஆண்டில் புதுப்பித்தது, அந்த சான்றை என்னிடம் காண்பியுங்க‌ள்..எல்லாம் நான் செய்து தருகிறேன், உங்க பெண் குழந்தை கொடுத்த எண் ஆறுக்கு பதிலாக ஒன்பது போட்டேன் சரியாக தொடர்பு கிடைத்துள்ளது...நான் வருகிறேன் காலையில் வந்து பார்க்கிறேன்...என  ஒரு புறம் மிரட்டல்,ஒரு புறம் உதவுவது போன்ற நடிப்பு, இரையை சரியாக கவ்விப் பிடிக்கும் மிருகமாக எல்லாப் பக்கங்களிலும் அடைப்புக்குறிகளை அடைத்து சிக்கிய இரை தப்பி விடாமல் இருக்கும்படி மிகவும் சாதுரியமாகப் பேசினான்.

Image result for cheat corruption and bribe persons

நான் அங்கு தான் குடி இருக்கிறேன் என மணிக்குத் தெரிந்த ஊரையும் சொல்லி அடையாளப்படுத்திக் கொண்டான்...நீங்கள் என்ன ரயில்வேவா எனக் கேட்டான்....பொய் சொல்லவே விரும்பாத மணி அவனிடம் கல்வித் துறை என்று சொல்லி விட்டு மேலும் அவனுடன் பேசப் பிடிக்காமல் தமது இடத்தில் ஓடிக்கொண்டிருந்த போதே ரயிலில் இருந்து இறங்கத் தயாரனான்.


Image result for cheat corruption and bribe persons

இவனை ஏன் நாம் வெறுக்கிறோம் இவனுக்கும் நமக்கும் என்ன? இப்படி இருந்தால் எப்படி அனைவரையும் திருப்தி செய்து, அனைவர் ஒத்துழைப்பையும் பெற்று நாம் நாடாள்வது? தெரஸா சொன்னது போல ஒருவரின் குற்றத்தைக் காண ஆரம்பித்தால் அவரை நேசிக்கவே முடியாதே...

கருவறுக்க வேண்டும் களைகளை...நாடு நாடாக இருக்க வேண்டுமானால்...

ஒரு புறம் தெய்வீகமும் காந்தியமும், இன்னொரு புறம்...கம்யூனிசமும் அலையோட....மக்களுக்கு நீதி வழங்க இரண்டுக்கும் இடையே மைய்யத்தில்  இருப்பதாக இருபுறமும் இல்லாதிருந்தான்...

Image result for cheat corruption and bribe persons


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment