Friday, September 28, 2018

இந்தியக் காமக் கதவு மேலை நாடுகளின் போக்கிலே முற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது: கவிஞர் தணிகை

இந்தியக் காமக் கதவு மேலை நாடுகளின் போக்கிலே முற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது: கவிஞர் தணிகை

Image result for indian sex gateway today opened

நிறைய போராடுகிறார்கள் அவர்கள் எல்லாம் அமெரிக்க கைக்கூலிகள் இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் ஊறு செய்யும் அவர்களை ஒதுக்கி விட வேண்டும் என்றார் நண்பர். ஆனால் ஓரினப்புணர்ச்சி ஏற்புடையது, என்றும் மணத்துக்கு மாறிடும் மாற்று உறவு குற்றமாகாது என்னும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கவனித்தால் அது அமெரிக்கா ஐரோப்பிய வழிகளில் செல்ல ஆரம்பித்துள்ளதை தெளிவாக உள்ளங் கை நெல்லிக்கனியாகவே காணலாம்.

அய்யப்பன் கோவிலுக்கு அனைவரும் செல்லலாம் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயம்...இந்த  கள்ளக் காதல், நல்ல காதல் , திருமணம் பந்தம் மீறி பிறர் மனை சாரும் காதல் தவறல்ல ...தற்கொலைக்கு இட்டுச் செல்லும் வரை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி பேசாதார் இல்லை. இன்றைய ஊடகத்தின் டாக் ஆப் தி சப்ஜெக்டே முக்கியமாக இதுதான். நானும் ஏதாவது சொல்ல வேண்டுமே...எனது சொந்தக் கருத்து எப்படி இருந்தாலும் ஒரு சமுதாயம் ஒழுங்காக இருக்கும் சிறப்பை தக்க வைக்க வேண்டுமெனில் தியாகம் அவசியம்,அதன் வழிகாட்டுதல் நல்ல மேம்பட்ட அமைப்புக்கு இட்டு செல்ல வேண்டியதாகவும் இருக்க வேண்டும். அதை சுட்டிக் காட்டும் கடமை ஆள்வோர் அமைப்புக்கு உண்டு. அதுதான் நல்லாட்சி, நல்ல தீர்ப்பு.

சந்தேகம் வரும்போதெல்லாம் நாம் திருவள்ளுவனை திருப்பிப் பார்ப்பது, திரும்பிப் பார்ப்பது வழக்கம்.

Related image

அதில் பிறனில் விழையாமை என்ற அதிகாரம் எண் 15 இதைப்பற்றிய பத்து குறளில் வித விதமாகச் சொல்லும்.குறள் எண் 141 முதல் 150 வரை. அதில் ஒரு குறள்: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு என்பார் பொருள் : பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை,சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று நிறைந்த ஒழுக்கமாகும் என்பது.

 அது சரி அது சான்றோர்க்குத் தானே. நமக்கென்ன நாம் சான்றோரா என்றும் கேள்விகள் இருக்கும்.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் காலக்கெடுவுக்குள் இப்படி முடித்திருக்கவே தேவையில்லை . மாறாக இது பற்றி ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கவே வேண்டாம். அவற்றை பேரறிவாளன் மற்ற 7 பேர் வழக்கை விட்டதுபோல கை கழுவி விட்டிருக்கலாம். அதன் பொறுப்பை எல்லாம் கை கழுவி  விட்டு விட்டு இது போன்ற வழக்கில் திட்ட வட்டமாக வரையறுத்து தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்.

அது ஒன்றும் நடக்காமல் இல்லை. அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டவரிடமும் கலைஞர் என்று அழைக்கப்பட்டவரிடமும், பெரியார் மற்றும் அவரது கழக வாரிசுகள் அனைவரிடமும் மட்டுமல்ல எம்.ஜி.ஆர், ஜெ ,மோடிஜி எல்லாருமே குடும்ப வட்டத்தை மீறிய கட்சிகளின் தலைமையில் இருந்தாரே..நாட்டின் தலைமைப்பதவியிலும் இருந்தாரே...

    .பொதுவாகவே எல்லாத் தரப்பிலுமே, துறைகளிலுமே பொது மக்களிடமும் நடந்து வருவதுதான். இருந்தாலும் இலை மறை காய் மறையாக இருந்ததை இப்போது பெரு வாயிலை திறந்து விட்டது போல விட்டு விட்டார்கள். நாட்டுக்கு இருந்த பெரும் பொறுப்பு புகைப்பது, மது குடிப்பது, ஆகியவற்றின் மேல் இருப்பதை கை கழுவி விட்டது போல மக்களுக்கு வழி காட்ட வேண்டிய நெறியாள்கை செய்ய வேண்டிய அரசமைப்பின் உச்ச அதிகார அமைப்பும் இதையும் பொறுப்பில்லை என தட்டிக் கழித்து இன்று வாசலை நன்றாக அகலமாக திறந்து விட்டுள்ளது.

இது பாரதிய ஜனதா அரசு என்று சொல்லும் அரசாட்சிக்கு ரஃபேல் விமான வியாபாரத்தில் கிடைத்தது போன்ற பெரிய அடி.... பெரும் தோல்வி. கலாச்சாரக் காவலர்கள் காதலர் தினத்தில் போய் அடித்து அசிங்கமாக நடந்து கொள்வார் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்...

இந்தியாவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டு இதன் மூலம் அவிழ்க்கப்பட்டு விட்டது சட்ட ரீதியாக நீதி வழியாக. ஆனால் அவரவர் தனி மனித சுபாவம் பற்றி அவரவர் ஒழுக்க நியதிக்கேற்ப இது அமையும் என்றலும் இரண்டு பேரும் ஒத்துப் போனால் யாரும் எதுவும் செய்ய முடியாது...என்பார்கள் மதில் மேல் பூனை போல எதற்கும் துணிய முடியாதார் ஏமாந்த சோகத்தை தாங்கி தோல்வி பெற்ற வாழ்வு வாழ்ந்த விரக்தியில் வாழலாம் அல்லது சாகலாம். அல்லது அவரும் வேறொரு ஜோடி தேடலாம் இதையும் செய்ய முடியாது அதையும் செய்ய முடியாது இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தெ முடியலாம். இப்படி இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும்போது நீ எது வேண்டுமானலும் செய் ஒன்றும் தப்பில்லை என தவறு செய்வதற்கு ஊக்கம் கொடுப்பதா நல்ல தீர்ப்பு? பெற்றோர்கள் பிள்ளைகளை கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது போல அல்லவா தீர்ப்பு இருந்தால் நல்லது.
Related image


இலக்கியத்தின் வழியே அவளுக்கும் அவனுக்கும் ஒத்துப் போனால் அது ஒரு பசி தீர்ப்பது போல்தான், தாகம் தணிப்பது போல்தான் தண்ணீர் குடிப்பதுபோல்தான் அதை செய்வதில் ஒன்றும் தவறில்லை என்ற எழுத்துகள் நிறைய உண்டு. அதன் வழியேதான் இந்த  தீர்ப்பும் தீப்பற்றியது போல வந்து நின்று இருக்கிறது இன்று.

ஆன்லைனில் மருந்து விற்கிறான் எங்களுக்குத் தொழில் பாதிக்கிறது என மருந்துக் கடைக்காரர் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து கடை மூடி இருக்கும் பிரச்ச்சனையை விட இது மிக முக்கியமாகப் போய்விட்டது...

அதுவும் வெளி நாட்டிலிருந்து ஒருவர் போட்ட வழக்கு இன்று முடிவுக்கு வந்து விட்டது... அதுக்காக அடிச்சிக்கிட்டு சாகாதீங்கடா, சரி சரி என‌ விட்டு விட்டுப் போங்களேன் போய் வாழுங்கள் எப்படியோ என்று சொல்லி இருக்கிற தீர்ப்பைப் பற்றி இன்று ஹல்லோ எப்.எம்மில் நேயர்களுடன் காலையில் கலந்துரையாடல்... ஆனால் காலை முதல் மதியம் வரை கமல் பாடல்களே ஒலித்துக் கொண்டிருக்கின்றன...அப்படி ஒலிபரப்பி வருகிறார்கள்... சட்டமும் நீதியும் சொல்லி விட்டால் மட்டும் என்ன இவர்கள் விட்டு விடப்போகிறார்களா என்ன?

குடும்ப அமைப்பு என்ற ஒன்றுதான் இந்த நாட்டிலே வலுவாக இருந்தது அதையும் இன்று சட்ட ரீதியாக நீதி வழியாக அடித்து துவம்சம் செய்து விட்டார்கள்...மகனும் மகளும் தாயை தந்தையை வேறு ஒருவருடன் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டிய தேவையை சொல்லி இருக்கிற தீர்ப்பு.
மணி ரத்தினம், பாலச்சந்தர் , பாரதிராஜா போன்ற பிரபல சினிமாத்தயாரிப்புகளும் ஏற்கெனவே செய்த சினிமா நீதி இன்று நாட்டின் சட்ட நீதியாகவே ஆகிவிட்டது.

அனைவரும் மகிழ்ச்சி அடையலாம்...

வேலை இல்லாதவனுக்கு வேலை கொடுக்க , சம்பளம் குறைவாக இருப்பார்க்கு சரியான சம்பளம் கொடுக்க , கல்வி மருத்துவம் அனைவர்க்கும் ஒழுங்காக கொடுக்க ஒங்க சட்டம் நீதி ஒன்றுமே சொல்லவில்லையே சொல்லி இருந்தாலும் செய்ய வில்லையே..அதற்கும் எதற்கும் ஒரு 70 அல்லது 80 ஆண்டுகள் எவராவது வழக்கு நடத்தி முடிவு கண்டால் விடிவு வருமோ...
Related image
ஜெ வழக்கு கர்நாடகாவுக்கு தோல்வி...ஜெவை குற்றவாளி என அறிவிக்க முடியாது என.. உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளதாம். அவர் இல்லாததால்... அந்த வழக்கின் முடிவையும் கவனியுங்கள் அதெப்படி அவர் குற்றவாளி ஆக இல்லாதபோது சசியும் இன்னொருவரும் பத்து கோடி அபராதமும் ஜெயில் தண்டனையும் பெற்று அனுபவிப்பது சரியாக இருக்க முடியும்...எங்கேயோ இடிக்கிதே... அவங்களையும் வெளியே அனுப்பி விடுங்களேன்...

 பெற்றவரே இப்படி நடந்து கொள்கிறார் என்னும்போது நாம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் எனப் பிள்ளைகளுக்குத் தோன்றுவதில் வியப்பென்ன இருக்க முடியும்? அல்லது அவர்களை இனி எவர் கட்டுப்படுத்தி நேரிய வழியில் செல்க என வழிகாட்ட முடியும்? இனி நாட்டால் அரசால் சட்டத்தால் நீதியால் எல்லாம் ஒன்றும் விளையப்போவதில்லை அவரவர் தனிமனித ஒழுக்கம் பேணாவிட்டால் எல்லாம் அரோகராதான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. சில செயல்கள் தவறுகளாக இருக்கலாம். ஆனால் எல்லா தவறுகளையும் கிரிமினல் குற்றமாகக் கருதக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம். இத்தவறால் பாதிப்படைந்தவர்களுக்கு சட்டத்திலேயே வேறு வழி இருக்கிறது (விவாக ரத்து). சில கல்லூரிகளில் செல்போனை எடுத்துவரக்கூடாது என்று விதி இருக்கிறது, இன்னொரு கல்லூரியில் மாணவர்கள் செல்போன் எடுத்து வருவது தவறில்லை என்று கூறுகிறது. அதனால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் போனில் பேசிக் கொள்ளலாம் என்று அர்த்தமில்லை.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post. vanallam. please keep contact. difference of opinion prevails in all subjects and matters.

      Delete
  2. நாட்டில் உள்ள பெரும்பாலோர் திருமணம் செய்து ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக, நம்பிக்கையுடன் வாழ்வதாகவே நம்புகிறேன். இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்கபோவதில்லை.எனது அப்பாவின் வங்கி அட்டையை அம்மா தான் பாவிப்பார். தனது PIN நம்பர் என்ன என்பது அப்பாவிற்கே சரியாக தெரியாது.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பானது மனைவி ஒருவர் தனது கணவன் தவிர்ந்த வேறொருவருடன் விரும்பி உறவு கொண்டால் அது குற்றம் என்று சொல்லி இதுவரை ஆணுக்கு மட்டுமே தண்டணை என்று இருந்தது வந்தது. இனி இல்லை.விருப்பி உறவு வைத்து கொள்வது குற்றம் இல்லை.
    மனைவியானவர் தனது கணவணுக்கு செய்யும் தனிப்பட்ட துரோகத்திற்கு இன்னொருவரை தண்டித்து, காலம் காலமாக பாரம்பரியமாக நாம் கடைப்பிடித்து வரும் புனிதமான திருமண உறவை காப்பாற்றி விட்டோம் என்று பெருமை கொள்வதில் அர்த்தமேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post. vanakkam. keep contact

      Delete