2.0 சினிமாவில் வேடிக்கை: கவிஞர் தணிகை
டூ பாய்ண்ட் ஓ ஒரு நிமிடம் மற்றும் 30 செகண்டுகளுக்கு அதாவது 90 செகண்டுகளில் ஒரு டீசர் வெளியிட்டிருக்கிறது சங்கர் லைக்கா ப்ரொடக்ஸன்ஸ். ஏ. ஆர் ரஹ்மான் இசை. ரஜினிகாந்த், அக்சய குமார், ஏமி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்க மிகவும் பெரிய பொருட்செலவில் 500 கோடி செலவிட்டு 3000 பேர் பணிபுரிந்து படம் எடுத்து விசூவல் எபக்ட்ஸ் மட்டும் ஓராண்டுக்கும் மேல் பணி எனச் சொல்லப்படும் இந்த ஆண்டின் இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படம்.
ரோபோ, செல்போன் பறப்பது, அதே அறிவியல் அமைப்புடனான கதை, எந்திரன் போலவே.... ஒரே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய அனைத்து பிரதான மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வெளி வர இருப்பதன் ஒரு முன்னோட்ட வெளியீடு இன்று பெரும் எதிர்பார்ப்புடன் நடந்தேறி இருக்கிறது
படத்துக்கு 50 முதல் 60 கோடி வாங்கும் சூப்பர் ஸ்டார் எனப்படும் ரஜினிகாந்த் அதே போல உ ஊ எனக் கத்தியபடி வயதில் இளையவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். எல்லாப் பக்கங்களிலும் சுடும் துப்பாக்கி ஒரு மனிதனை சுற்றி எதிர் வரும் ஆயிரக்கணக்கான எதிரிகளையும் சுட்டுத்தள்ள...
பிரும்மாண்டம் என்ற பேரில் எல்லாத் தரப்பையும் வியப்பில் ஆழ்த்தி வசூலை 3 டி 2 டி என எடுத்து விடுவார்கள்...காமிக்ஸ் கதை இரும்புக் கை மாயாவியின் கதையை சிறுவனாக இருக்கும்போது விரும்பிப் படிப்பது போல அனைவரும் பார்க்கலாம். தியேட்டருக்கு அனைவரையும் இழுக்கும் ஒரு அரிய முயற்சி.
படம் வரட்டும் முழுதும் பார்த்துவிட்டு இன்னும் பேசலாம்.
இதற்கு அடுத்து வர இருக்கும் இந்தியன் 2 பார்ப்பதற்குள் தேர்தல் வந்து நிற்கும் என்றே நினைக்கிறேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment