எனது இளமையின் மழை மறைவுப் பிரதேசங்கள்: கவிஞர் தணிகை
வசந்தம் சென்று விடும் ஆனால் பூக்கள் திரும்ப மலரும்
யௌவனம் சென்று விடும் அந்த நாட்கள் திரும்பி வரா.
இந்த வரிகள் 1978ல் டைரி என்ற பேரில் அந்தக் கல்லூரி நிர்வாகம் கொடுத்த ஒரு பச்சை அட்டை போட்ட கோடு போட்ட 80 பக்க நோட்டில் எழுதப்பட்டிருந்தது. அது இன்னும் அப்படியே இருக்கிறது.
அறையைப் பகிர்ந்து கொண்டோம், ஆடையை மாற்றி பயன்படுத்தினோம். ஆனால் துன்பத்தை கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளும்போது யார் இருக்கிறார்கள்? எல்லாம் அனுபவத்து விட்டு இன்று கடைசி சுற்று என் நினைத்துக் கொண்டு மகனைப் படிக்க வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாம் 3 ஆண்டுகள் சேர்ந்தும் பிரிந்தும் இருந்தோம்
அந்தப் பருவம் ஒரு இரண்டுங்கெட்டான் பருவம். எதையுமே அப்போது நான் சரியாக செய்ததாக நினைவில்லை. சினிமா சேர்ந்து பார்த்தோம், சிலருடன் பயணமும் சேர்ந்து செய்தோம்...அனால் வாழ்வு வழி மாறி மாறிச் சென்று விட இன்று சேர்ந்து பார்க்கத் துடித்திருக்கின்றன சில நல்ல உள்ளங்கள்
உடலும் நமது சொந்தமில்லை எனவே அதை சரியான வழியில் பயன்படுத்தி புகைத்தல், மது அருந்தல் போன்றவற்றிடமிருந்து விடுபட்டு நோய் நொடியின்றி அனைவரும் முழு வாழ்வாக நிறை வாழ்வு வாழ அதாவது குறைந்த பட்சம் 80 ஆண்டை மீறிடும் பேறு பெற வேண்டுமென வாழ்த்துகிறேன் முதலில்.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
முக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பதே நட்பு.
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்றிடித்தற் பொருட்டு.
இந்தக் குறள்களுடன் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
40 ஆண்டுக்கும் முன் பார்த்த உங்களை எல்லாம் மறுபடியும் இன்று பார்க்க சந்திக்க எனது வாழ்வில் எல்லா மைல்கற்களிலும் என்னுடன் பயணம் செய்யும் ஒரு நட்பு உதவியிருக்கிறது.
அது நன்றியை எதிர்பார்க்காத நட்பு எனவே நீங்களும் நானும் நன்றி சொல்லத் தேவையில்லை. அந்த நட்புக்கு இன்றைய நடப்பாய் பாட(ல்) பிடித்திருக்கிறது.
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
( அதை நான் நீதிக்கும் பதிலாக மீதி என்றும் பாடுட்கிறேன்)
சொல்லில் வருஅது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி.
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை.
தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான்.
உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை.

தண்ணீர் தணல் போல் எரியும், செந்தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும் அது நாட்பட நாட்படப் புரியும்
அது நாட்பட நாட்படப் புரியும்...
உள்ளம் என்ப்து ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி..
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை...
எனது கதை பட்டுக் கோட்டையின் கதை போல
பட்டுக்கோட்டையை பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகை நண்பரிடம்
அவர் நடந்து, சைக்கிளில் கொஞ்சம் சென்று, ஆட்டோவில் ஏறி சிறிது தொலைவு சென்று அதன் பின் டாக்ஸியில் ஏறி பாட்டு எழுத ஸ்டுடியோ சென்றாராம்...பேட்டி கேட்டவர் சார் என்ன பேட்டி ஆரம்பிக்கலாமா என்றதற்கு பேட்டி முடிந்துவிட்டது இது தான் என் வாழ்க்கை என்றாராம்.
அது போல சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில்: சாலையின் ஓரத்தில் படுத்துறங்கியது முதல் உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதியுடன் அமர்ந்துண்டு அரை நாள் அளாவளாவியது வரை...
உண்மை, தியாகம், சத்தியம், நேர்மை என்பர்க்கெல்லம் கிடைப்பதென்னவோ ஒரே பரிசுதானே! அது ஏழ்மை, வறுமை, பொருளிண்மை, உடற்பிணிகள்.
எங்களது ஓட்டு வீட்டின் முகடுக்ள் தொங்கிய்படி கிடக்க நான் நாட்டை சீர் செய்வது பற்றிக் கவலைப்ப்ட்டுக் கொண்டிருக்கிறேன்.
பலிகடாவாக அல்ல களப்பலியாக ...களப்பலிகள் எப்போதும் அப்படித்தான் யோசிக்கும். கேப்டன்கள் அப்படித்தான் இருப்பார்கள் நான் விஜய்காந்தைச் சொல்லவில்லை
பிடல், சே, ஹோசிமின், லெனின், கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ், தற்போதைய ரோட்ரிகோ ட்யூட்ரெட், அருணிமா சின்ஹா, சிவாங்கி பதக், மாலவத் பூர்ணா, மகாத்மா, சுபாஷ், பகத், கலாம், தெரஸா, அம்பேத்கர் இன்ன பிற நாட்டுக்குத் தெரிந்த மாபெரும் மனிதர்கள்...
ஹோசி மின் பாறை மேல் படுத்துறங்கி, உணவகங்களில் எச்சில் தட்டு கழுவியவர் வியட்நாமின் தலைவிதியை மாற்றி எழுதியதாக சரித்திரம்..
கைக்குழந்தைக்கு பாலில்லா மாரும் உணவில்லா ஏழமையும் மார்க்ஸ் ஜென்னியிடம் இருக்கும்போதெல்லாம் அந்தக் குடும்பத்திற்கு ஏங்கெல்ஸ் உதவியதாகவும் அவருக்கு மட்டுமே மார்க்ஸ் அதை எழுதிக் கேட்டு வாங்கிக் கொண்டதாகவும் சரித்திரம்...அதுவும் மாறுபடா தத்துவம்..
கர்ண துரியோதன நட்பு மஹாபாரதக் கதையில் துரியோதனன் மனைவியின் சேலையைப் பிடித்து இழுத்து முத்துக்கள் சிதறி தெறித்து ஓட அங்கு வந்த துரியோதனன் எடுக்கவா கோர்க்கவா என்ற சந்தேகம் வரா நட்பூ...
கண்ணனின் நட்பு குசேலனிடம் அழுக்குத் துணியில் கட்டி வந்த அவலை வாங்கி மன்னன் கண்ணன் தின்றதாக...
இராமயணத்தில் இராமனின் நட்பு ஜடாயு, சபரி, விபீஷணன், அனுமன் என..
1978 முதல் 2018 வரை மாபெரும் வாழ்வின் பயணம். பெற்றோரை இழந்து, குடும்பம் என்றாகி சகோதர சகோதரிகள் இடைவெளியுடன்...உறவு நாடாண்ட நட்பு, போராட்டம் என உருண்டு...
எப்படி இப்படி ஒரு பிழை நடந்தது..
கல்லூரி நிர்வாகத்தின் திணித்த பிழையா?
மூத்தார் எனப் படித்த மாணவர் செய்த திருகலா?
தன்னுணர்வில்லா முடிவா?
பெற்றோரை குடும்பத்தை கலந்து செய்யாத முடிவா?
தவறுதான் நிகழ்ந்து விட்டது விதியின் கைகள் மேற்சென்று எழுதிவிட்டது..
என்னிடம் 1981ல் இருந்த இருந்த அந்தக் கல்லூரியின் ஒலிபெருக்கியின் யூனிட் ஒன்றை பாலமலை மக்களுக்கு அங்கே பொது ஊராட்சி ஒன்றியத்தின் ரேடியோ மற்றும் ஒலிபெருக்கியை தம் வீட்டுக்கு பயன்படுத்தி வந்த முன்னால் உதவி ஊராட்சித்தலைவர் ஒருவரிடமிருந்து மக்களை தயார் செய்து போராடி பெற்று இந்த யூனிட்டை அதற்கு தானமாக கொடுத்து மக்களுக்கு ரேடியோ ஒலிபெருக்கி அமைப்பை ஊருக்குப் பொதுவாக ஏற்படுத்திக் கொடுத்து ....
காந்தி தம் பாட்டியிடம் இருந்த தங்கக் காப்பைத் திருடினார் தீயப்பழக்கத்துக்கு, வான்மீகி வழிப்பறிக் கொள்ளையனாக இருந்தார், நானும் அந்த யூனிட்டை கட்டிய கட்டணத்துக்கு பதிலாக எடுத்து வந்தபோதும் அதுவும் தவறுதான்...எனவே தவறுகளிலிருந்துதான் சரி பிறக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை.
திரு நீறு பட்டையாக நெற்றியில் போட்டபடி காமன்ரூம் விளையாட்டு அறையின் பொறுப்பாளராக அந்த இரண்டாமாண்டு படிக்கும்போதே பகுதி நேர பணி புரிந்தவன்..அப்படி எல்லாம் இருந்த எனக்கு கல்லூரி நிர்வாகம் தந்த பேர் ... வேறு
ஆண்டு விளையாட்டுப் போட்டியில் எவருமே கலந்து கொள்ளாமல் 3 பேர் மட்டுமே கலந்து கொள்ள அவர்களுக்கே 3 பரிசுகள்...என மாணவர்கள் அனைவருமே அந்த விளையாட்டுப் போட்டியை புறக்கணிக்க நடத்தியே தீருவோம் என நிர்வாகம் பிடிவாதத்துடன் எவரும் கலந்துகொள்ளாமலேயே போட்டிகளை நடத்தி முடித்து எஸ்கேசி ஸ்வீட் காரம் காபி கூட கொடுக்காமல் கல்லூரியின் தாளாளர் நாட்டின் முக்கிய் பிரமுகரை அழைத்து அதுவும் விடுதியின் உள் அரங்கு அமைக்க பந்தல் அமைத்து ஒலிபெருக்கி எல்லாம் கட்டி முதல் நாளே தயார் செய்து வைத்திருந்தது மறு நாள் அனைவரும் காலை எழுந்து பார்க்கும்போது காணாது போயிருக்க...
நாட்டின் முக்கிய பிரபலம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வு நடக்காமல் ரத்தாகிவிட...அதுவும் மேடை துவம்சம் செய்தது போலாகிவிட்டால் சும்மா விடுவார்களா?
ஆரம்பித்தது. அனைவர் வாழ்விலும் அதன் பாதிப்புகள்...கல்லூரியின் ராஜதந்திரத்தின் முடிவில் பெற்றோர்களும் மாணவர்களும் ஈடு கொடுக்க முடியவில்லை...
விதை போடப்பட்டது..விதி தொடர்ந்தது...திட்டமிட்டார் தூங்கி விட விதி எழுப்பியது...வினை செய்ய ...
உழைப்பு என்ற தலைப்பில் எழுதிய கவிதை கல்லூரியிலும் கோவை வானொலிப் பதிவிலும்... இடம்பெற அதே நண்பன் சேர்க்க வேண்டிய இடம் சேர்த்து உதவினான் நேரில் சென்று தான் கொடுக்காமல் பழனி சென்று விட
உழைப்பிற்கு உரு கொடுத்தோர் கொடுத்த தலைப்புக்கு கரு எடுத்து
இத் தலைப்புக்கு உயிர் தருவேன் முன் களைப்புக்கு விடை கொடுத்து
கவிதைக்கு செவி மடுப்பீர் என முதலிலும் கடைசியில் உயிர் தந்தேன், செவி மடுத்தீர் என்றும் முடிவிலும் இருந்த மரபுக் கவிதை...
இலஞ்ச ஊழல் எதிர்ப்பு, மது விலக்கு போராட்டம் வறுமைப் பிணி அகற்றி சமதர்ம சமுதாயப் பூங்காவாக நாட்டை மாற்றி சமத்துவ சமுதாயப் பணியில் 3 இயக்கங்களிடை தலைமைப் பொறுப்புகளில் வழிகாட்டி, சசிபெருமாள், சின்ன பையன் போன்றோரை இயக்க கருவிகளாக்கி, நிறையப் பட்டோம் இடையில் ஏற்பட்டதுதான் பாரதக் குடியரசுத் தலைவராக விளங்கிய மேன்மை மிகு அப்துல் கலாம் அவர்களின் தொடர்பு...
எல்லாத் துறைகளிலும் இலஞ்சத்துக்கு எதிராக போராடியதன் விளைவாக பல விழுப்புண்கள் பெற்று...மேல் படிப்புக்கு என மதுரை காமராசர் பல்கலைக்கு சென்ற சான்றிதழ் திரும்பி வரவே இல்லாமல் போக...
40 ஆண்டு கால பிரேதப் பரிசோதனை தேவையா...சேமிப்பை சம்பாதிக்கலாம் என பிறரிடம் கொடுத்து ஏமாந்த கதை சொல்லவா?
1983 முதல் 1984 வரை நேரு யுவக்கேந்திராவில் தேசியத் தொண்டராக சேவை செய்த கதையில் பிரிபடாத சேலம் மாவட்டம் எங்கும் திரிந்து கவிதை பாடி, பேருரையாற்றி பெருவிழிப்பூட்டிய கதை சொல்லவா?
1985 முதல் 1995 வரை திட்ட அலுவலராக இந்தியாவெங்கும் மலை வாழ் மக்களுக்காக மேம்பாடு செய்ய பணிச்சேவை புரிந்த கதை சொல்லவா?
அதில் உச்ச நீதிமன்ற நீதிபதியை சந்தித்து, அவர் மேடையிலேயே பேசி அவருடன் உணவு உண்டு முன்னேற்றப் பணி பற்றிப் பேசி கலந்து அரை நாள் கலந்தளாவிய கதை சொல்லவா?
1997ல் டிசம்பர் 4ல் இந்தியாவின் பொன் விழா ஆண்டில் வேலை இல்லாமலே திருமணம் செய்து 1998 டிசம்பர் 16ல் மகனைப் பெற்றதைச் சொல்லவா
1986ல் தந்தையை இழந்த கதையை சொல்லவா, 2006ல் தாயைப் பறி கொடுத்த கதையை சொல்லவா, தந்தையை இழந்து சுமார் 20 ஆண்டுகள் தாயுடன் வாழ்ந்த கதை சொல்லவா?
1995 முதல் 2015 வரை நிறைய எழுதி, நிறையப் பேசி, நிறைய போர் புரிந்து, நிறைய இரு நாளுக்கொரு சேதி எழுதி போவோர் வருவாரை எல்லாம் மகிழ வைத்து சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து..வாழ்ந்த கதை சொல்லவா?
மறுபடியும் மகனைப் படிக்க வைக்க 2016ல் கல்லூரிப் பணிக்கு சேர்ந்த கதை சொல்லவா?
அதனிடையே 1985 முதல் தியானம் கற்று தியான குருவாகி பலருக்கும் தியான வகுப்பு எடுத்த கதை சொல்லவா? 1985 முதல் இன்று வரை அதாவது 2018க்கும் மேல் 34 ஆண்டுக்கும் மேலாகியும் அதை தொடரும் கதை சொல்லவா?
இன்று 40 ஆண்டு கழித்து மறுபடியும் உங்களுடன்
என்ன செய்யப் போகிறீர்? என்ன சொல்லப் போகிறீர்?
இடையில் இரண்டு..
உள்ளம் என்பது ஆமை..அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி...நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி..
சொல்லில் வருவது பாதி ...நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதீ..மீதீ...
காதல் என்றால் அது காதல்
இல்லை என்றாலும் இல்லை சாதல்
உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை..
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
இந்தப் பதிவு எனது மகன் மணியம் மற்றும் என்னை நேசிக்கும் தோழர்க்கு சமர்ப்பணமாக...
15.06.1988 in my Visitor's Note
BROTHER DHANIKACHALAM WORK IS AN JUST LIKE THE WORKS OF MAHATMA GANDHI AND MOTHER THERESA. I APPRECIATE HIS WORK. I WISH HIM SUCCESS.
signed
Dr.. V. SUBRAMANIAN M.B.B.S ; D.O
ASSISTANT SURGEON\
GOVT. HOSPITAL
NAMAKKAL.....DATED; 15.6.88

கழுகுபார்வையில் உங்கள் வாழ்வை பார்த்ததுபோலிருந்தது! பெருமிதம் கொள்ளத்தக்க வாழ்வுதான்! இன்னும் உன்னதம் படைக்க உள்ள வாழ்வுதான்!வாழ்க வளமுடன்!
ReplyDeletethanks for your feedback on this post . vanakka. please keep contact
ReplyDelete