எடப்பாடி பழனி சாமி அரசின் எனக்குத் தெரிந்த இரண்டு நன்மைகள்: கவிஞர் தணிகை.
உடனே இந்த அரசைப் பற்றி நான் கொண்டாடுகிறேன் என்பதெல்லாம் இல்லை. அதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.
சேலத்தில் மேம்பால வேலைகள் நடந்து வருகின்றன நான் ஒரு கட்டடவியல் பொறியாளரோ ஒப்பந்ததாரரோ அல்லது அது போன்ற அனுபவம் பெற்றவனோ இல்லை...அதை எத்தகையது எவ்வளவு பட்ஜெட்...எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது எவ்வளவு தவறான வழியில் போகிறது என்பது பற்றி எல்லாம் சொல்ல இந்தப் பதிவு அல்ல.
1. அந்த மேம்பாலத்தின் அடியில் இரண்டு இடங்களில் அதாவது குரங்குச் சாவடி முதல் ஏவி ஆர் ரவுண்டானா அல்லது எஸ் பி ஐ காலனி முதல் பேருந்து செல்லும்போது கவனித்தேன் அந்த மேம்பாலத்தின் அடியில் காலையில் நடைப்பயிற்சி செய்ய, உடற்பயிற்சி செய்ய என பாதை போடப்பட்டு புற்கள் நடுவே வளர்க்கப்பட்டு நிறைய சேலம் நகர் சார்ந்த மனிதர்களுக்கு வசதி வாய்ப்பு செய்யப்பட்டுள்ளது. எவரின் தயவும் அனுமதியுமின்றி யார் வேண்டுமானாலும் நடந்து பயிற்சி செய்யலாம். செய்கிறார்கள். பார்க்க சுவையாக இரசிக்கத் தக்கதாக இருக்கிறது.
2. கல்வித் துறையில் க.ப. செங்கோட்டையன் நல்ல முறையில் செயல்படுவதாக தற்போது கூட பள்ளி மேனிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களின் சுமை தீர்த்து மதிப்பெண்ணை 600க்கு கொண்டு வந்ததாகவும் செய்திகள் வருகின்றன...
மற்றபடி மின் வெட்டு அருகாமையில் இருக்கிறது என்ற செய்தியும் அந்த பதவி பறி போன எம்.எல்.ஏக்களின் வழக்கு ஏன் இன்னும் தீர்ப்பை அடையவில்லை என்பதையும் குட்கா வழக்கையும், அந்த 7 பேரின் தலைவிதியை நிர்ணயிப்பதிலும் ஏன் இந்தக் குளறுபடிகள் என்பவை எல்லாம் இந்த அரசுக்கு நன்மை பயப்பதாய் இல்லை...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
பி.கு
ஒரு நாள் பாலம் இடிந்து கீழே நடைப்பயிற்சி செய்பவர் மேல் விழுந்து உயிர்ச் சேதம் ஏற்படாதிருக்க எல்லாம் வல்ல இயற்கையையும் வேண்டுகிறேன். பிரார்த்திக்கிறோம். அதைக் கட்டிய வல்லுனர்கள் அதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்படியாகவும் வேண்டுகிறேன் ஏன் எனில் புதிது புதிதாக கட்டிய பாலம் கூட உடனே சிதைந்து விடுகின்றன என்ற செய்திகளும் வந்ததே.. அதே வேளையில் பாலத்தின் மேல் செல்லும் வாகனத்தை எந்தக் குடிகார ஓட்டுனரும் தாறு மாறாக ஓட்டி மேலிருந்து கைப்பிடிச் சுவரை இடித்துத் தள்ளி கீழே செல்வோர் மேல் விபத்தை ஏற்படுத்தாதிருக்கவும் நாம் வேண்டிக் கொள்கிறோம்.

சேலம் மேம்பாலத்தை பற்றிய உங்க தகவலும் படமும் சுவையானதே.
ReplyDeleteஜனதொகை அதிகம் கொண்ட ஊரில் நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புற்கள் கொண்ட பாதை போடப்பட்டது மகிழ்ச்சியான பாராட்ட வேண்டிய விஷயம்.
பாலம் இடிந்து கீழே விழுமோ மற்றும் குடிகார ஓட்டுனர் பற்றிய உங்க அச்சம் நியாயமானதே. ஊழல், மோசடி செய்யாம அந்த பாலம் கட்டபட்டிருந்தா 99.5% இடிந்து விழாது.
thanks for your feedback on this post. vanakkam
Delete