பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL VS KAVIGNAR THANIGAI.
எனது யுத்தமும் BSNL 7 ரூபாய் மோசடி & மோடி அரசின் நாணய வீழ்ச்சி காலமும். : கவிஞர் தணிகை
பல ஆண்டுக்கும் முன் பி.எஸ்.என்.எல் லுக்கும் எனக்கும் வலுவான மோதல். வெற்றி என் பக்கம் தான் ஏன் நியாயம் என் பக்கம்தான். அப்போதே சொன்னேன் ஒழுங்கா வேலை செய்யலைன்னா உருப்பட வழி இல்லைன்னு...இன்னும் அதன் செயல்பாடுகள் அப்படியேதான் உருப்பட வழி இல்லாம போன பின்னாலும்...
வெட்ட வெட்டக் குறையாத வருவாய்ச் சுரங்கத்தை தனியார்க்கு தாரை வார்த்துவிட்டு, சரியாக வேலை செய்யாமல், சரியாக நிர்வாகம் செய்யாமல் சரியான திறமின்றி பார்த் சஞ்சார் நிகாம் லிமிடெட் தத்தளித்துக் கொண்டிருக்கிறது...
அப்போது ஒரு வில்போன் என்று கொடுத்தார்கள் ஏற்கெனவே ஒரு நிலவழித் தொடர்பு தொலைபேசி இருந்தும் வாங்கிக் கொண்டேன். ஆனால் அது சரியாக எடுக்கவில்லை எனது வீடு பள்ளத்தில் இருந்ததால். உடனே அதைத் திருப்பிக் கொடுத்து விட்டேன். ஆனால் அதை வாங்கி வரவு வைக்காமல் குளோசர் செய்யாமல் பில் அனுப்பியே நோகடித்தார்கள். அத்துடன் யுத்தம் ஆரம்பித்தது...அது மண்டல மாநில அக்கவுண்ட்ஸ் மேலாளர்கள் கொண்ட குழுவினருடன் நீள்வட்ட மேஜை மாநாடாக...
பி.எஸ்.என்.எல்லின் அப்போதைய நடவடிக்கைகளை கடிதத்தில் சொல்லி இருந்தேன் அவர்களால் பதில் சொல்ல வழியின்றி. நான் சொன்ன தகவல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு கட்டிய பணத்தை திருப்பித் தந்துவிட்டனர்.
அதை அடுத்து அந்த வெறுப்பில் அகண்ட அலை வரிசை எண்ணையும் அதிலிருந்து அதை விட பில் கட்டணம் குறைவாக கொடுத்த ஒரு தனியார் கம்பெனிக்கு மாற்றிக் கொண்டேன். அதாவது அதை குளோஸ் செய்து.
மறுபடியும் அந்த தனியார் கம்பெனி அந்த சேவையை அந்த இடத்தில் தொடர முடியாததால் பி.எஸ்.என்.எல் சேவைக்கே புதிய சேவை எண்ணை பெற்றுத் தொடர்ந்து வருகிறேன்.
இது வரை சரிதான். அதன் பின் ஒரு செல்பேசிக்கான எண்ணையும் பெற்றேன். ஒழுங்காகவே சென்று கொண்டிருந்தது. திடீரென 18 ஆம் தேதி ஒரு கால் அது 114 என்ற முதல் 3 எண்களுடன் ஆரம்பித்திருந்தது...நான் கூட அது ஒரு டில்லி கால் என்று எண்ணிக் கொண்டிருந்தேன் ஏன் எனில் அது மோடீஜி சுவச் பாரத், சுச் கல்யாண், மன்கிபாத் போல ஹை ஹி என்று இருந்தது..நான் நேற்றே டில்லி என்றால் ஏமாற்றுதானா? என்ற பதிவில் சொல்லியது போல ...இது அந்தக் கல்லூரியின் நோடல் ஆபிசராக கோடை உறைவிட தூய்மை பாரதப்பணியை பாலமலையில் 20 பல் மருத்துவரைக் கொண்டு செய்திருந்ததால்...அது குறித்து ஏதாவது இருக்கலாம் என நினைத்து அட்டன்ட் செய்தால்...அது ஹிந்திக்கு ஒன்று, தெலுங்குக்கு 2 என தமிழுக்கு 5 என வந்து சொல்லிக் கொடுத்து வர நாம் தாம் கவிஞர் ஆயிற்றே புத்தக எழுத்தாளர் ஆயிற்றே... தமிழ் என்றவுடன் எண்ணை 5 அழுத்தி விட...உடனே 7 ரூபாய் பிடிக்கப்பட்டு விட்டது...அதாவது அவர்கள் கால் செய்து நமது எண்ணிலிருந்து கணக்கிலிருந்து காசை எடுத்துக் கொள்வாராம்.
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.. என்ன இது இப்படி ஆகிவிட்டதே என பொருமிக் கொண்டே இருந்தேன் இது ஏதோ டில்லி விவகாரம் என கனன்று கொண்டிருந்தேன்.
பிபின் என்ற எனது கல்லூரி மருத்துவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதை சொன்னேன். சார் அது பி.எஸ்.என்.எல் விவகாரம்தான் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்றார்...ஒ ஹோ...அப்படியா பார்த்துக் கொள்ளலாம் என...முடிவு செய்திருக்கும் வேளையில்...
எனது மகனிடமிருந்து கோவையில் இருக்கிறார். ஒரு கால் வந்தது...உடனே அதை டச் ஸ்க்ரீன் தான்...எடுக்க முடியாமல் இந்த பி.எஸ்.என்.எல் லின் செய்தி மூடி இருக்க அந்த செய்தியில் உங்கள் 7 ரூபாய் 5 நாளுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு ஓ.கே கொடுங்கள் என்றிருந்தது...கொடுத்தவர்கள் ஓகே அல்லது நாட் அல்லது நாட் ஓகே என்று வாய்ப்பும் கொடுக்க வேண்டுமல்லவா...அதில் ஓகே கொடுங்கள் என்பது மட்டும் இருந்தது. அதை செய்தால் தாம் காலே நாம் அட்டன்ட் செய்து பேச முடியும் என்ற நிலை...
மகனுடன் என்ன ஏதோ, முக்கியமான விஷயமோ என அதை ஓக்கே கொடுத்து நகர்த்திவிட்டு காலைப் பேசி முடித்தேன்.
நான் 0.00 பேசியதாகவும் அதற்கு 7 ரூ எடுக்கப்பட்டிருந்ததாக இருந்து வந்த செய்தி என்னை உறுத்தியபடி உலுக்கியபடி இருந்தது..இதற்கெல்லாம் காரணம் எப்போதும் மிகக் குறைவாகவே இருக்கும் எனது செல்பேசியில் சில நாட்கள் முன்னால் எனது துணைவியார் ஒரு 15 அல்லது 20 ரூ போட்டு ஒரு 35 ரூ இருந்ததுதான்.
ஆக அந்த 7 ரூ போக எனது கணக்கில் இப்போது 28 ரூ இருக்கிறது...இந்நிலையில் நான் 1500 வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டேன் வழக்கம்போன்ற இழுத்தடிப்புக்கும் பின் அந்த பெண் இது லேன்ட் லைன் தொடர்பு வாடிக்கையாளர் பிரிவு சார் இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றும் நீங்கள் 1503 எண்ணைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்
அதில் தொடர்பு கொண்டேன். உடனே வழக்கம்போல் தலையைச் சுற்றி காதைத் தொட்டு பேசினேன்...அவர் என்னால் எங்களால் ஒன்றும் முடியாது இதெல்லாம் மார்க்கெட்டிங் பிரிவுதான் சார் என்று சொல்லி விட்டு கன்ஃபெஷன் என்றால் என்ன என்றே தெரியாது என்று சொல்லி அவருக்கும் மேல் உள்ள ஒரு பெண் அலுவலருடன் தொடர்பு ஏற்படுத்தினார். காத்திருந்து பிறகு அவருடன் சத்தமுடன் ஒரு யுத்தம் நடத்தினேன்...உடனே புகாரைப்பதிவு செய்து கொண்டு 48 மணி நேரம் கால இடைவெளிக்குள் உங்களின் 7 ரூ வரவு வைக்கப்பட்டு விடும் என்று வேறு ஏதேனும் விளக்கம் வேண்டுமா என்று கேட்டு முடித்துக் கொண்டார். அந்த புகார் எண்ணையும் குறித்துக் கொள்ளச் சொன்னார்கள். அது குறுஞ்செய்தியாகவும் வந்திருந்தது... கல்லூரியில் எனது உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கேட்டார்கள் விவரம் சொன்னேன்.
48 மணி நேரம் போயிற்று....ஆனால் அதற்குள் எந்த மாற்றமும் இல்லை எனவே அதற்கும் முன்பாகவே இவர்கள் வரிசை ஏற்கெனவே எனக்கு நன்கு தெரியும் ஆதலால் ஒரு மின்னஞ்சலும் வாடிக்கையாளர் பிரிவுக்கு அனுப்பி நடவடிக்கை இல்லை எனில் தொலைத்தொடர்பு மற்றும் பி.எஸ்.என்.எல் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் விவரம் கொடுக்கப்படும் என்றும் சொல்லி இருந்தேன்
48 மணி முடிந்ததும் இன்று பார்த்தால் மறுபடியும் அவர்களிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி மறுபடியும் ஒரு 7 ரூ எடுத்துக் கொள்ள ஒரு 5 நாள் டைம் தருகிறோம் கன்ஃபெசன் சர்வீஸ் புதுப்பித்துக் கொள்க என்றும் இல்லை எனில் 155223 என்ற எண்ணில் தொடர்பு கொள்க என்று...
மறுபடியும் தொடர்பு கொண்டேன்...அந்த பெண் எனக்கு இதெல்லாம் தெரியாது சார், மேலிடத்துக்கு கொடுத்து தொடர்பு செய்கிறோம் விட்டு விடுங்கள் என்றும் கன்ஃபெசன் சர்வீஸ் என்றால் எனக்கு என்ன என்றே தெரியாது என்றும் சொல்லி விட்டார்.
இப்போது மறுபடியும் ஒரு ஆண் குரல்...அதே சத்த யுத்தம் அத்துடன் விவரம் கேட்டேன் 1. 48 மணி நேரம், 2. புகார் எண் என்ன ஆயிற்று...ஏன் 3 இப்படி மறுபடியும் குறுஞ்செய்தி என அவர் முன்பு கன்ஃபெஷன் என்றால் என்ன என்றே தெரியாது என்று சர்வீஸ் விவரம் சொன்னவர் அப்படி சொல்லவில்லை அது ஒரு விளையாட்டு... என்றார். நான் பேசுவது பதிவு செய்யப்படுவதால் அலுவலகம் என்பதால் சற்று மட்டுப்பட்டு பேசச் சொன்னார்.
பேருந்தில் , ரயிலில் அவர் செல்லும்போது அவரது பணத்தை ஒரு திருடன் பிக் பாக்கெட் அடித்து விட்டு அவர் கையும் களவுமாக பிடித்து விட்டால் அவருடன் எப்படி பழகுவார் நானாவது காந்தியம் படித்ததனால் சற்று மிதமாக பேசுகிறேன்...
நான் எனது தரப்பு நியாயம் எல்லாம் சொன்னபிறகு அவர் அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு மறுபடியும் 24 மணி நேரம் தாருங்கள் சரி செய்து கொடுத்து விடுகிறோம் என கால அவகாசம் கேட்டுக் கொண்டார். நான் கேட்பதெல்லாம் அந்த 48 மணி நேர அவகாசமும்,முதல் புகார் எண்ணும் என்ன ஆயிற்று? அந்த மின்னஞ்சல் புகார் என்ன ஆயிற்று...அதெல்லாம் பயனின்றி..மறுபடியும் காசு எடுக்க அதுவும் நான் அந்த சர்வீஸ் கால் வரும்போதெல்லாம் அதைக் கட் செய்த பிறகும் மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளுங்கள் அல்லது இந்த எண்ணுக்கு அது டோல் ஃப்ரீயாம் பேசுங்கள் என்பதெல்லாம் என்ன கதை? என்ன குறுஞ்செய்தி...என்ன தகவல்கள்...
படிக்காத பாமரன், மொழியறிவு இல்லாதவன் , என்ன செய்வான்? என்ன பி.எஸ்.என்.எல் கொள்ளையடிக்கும் கூட்டத்தில் சேர்ந்து மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டதா?
விடவே மாட்டேன் அந்த 7 ரூபாய் கிடைக்காவிட்டால் இந்த செய்தியை நாடு முழுதும் கொண்டு செல்வேன் அதற்குரிய மந்திரிக்கும் அதை தெரிவிப்பேன் கடைசி வரை போராடியே வெல்வேன் என்றும் இந்தப் பதிவை செய்கிறேன்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
P.S:
கன்ஃபெஷன் என்றால் விளையாட்டாம்...விளையாடிக் கொண்டிருக்க அதுவும் செல்பேசியில் விளையாடிக் கொண்டிருக்கத்தான் எங்களுக்கு நேரம் இருக்கிறதாம். அதுவும். காசு செலவு செய்தபடி...கன்ஃபெஷன் என்றால் வாக்குமூலம் ஒரு வேளை போனில் இவர்களுக்கு திருட்டு, கொள்ளை, நகை பறிப்பு, கற்பழிப்பு, கொலை செய்தவர்கள் இப்படிப் பட்டவர்கள் தங்கள் காசை செலவு செய்து வாக்கு மூலம் பாவ மன்னிப்பு கேட்டு திருந்தி வாழ பி.எஸ்.என்.எல் வழி செய்கிறதோ...நாடு திருந்த நல் மார்க்கம் காண்பிக்கிறதோ...பி.எஸ்.என்.எல்...தான் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும் இது போன்ற சேவையால்..இது சேவையா காசு பிடுங்கியபடி செய்யும் எதுவும் சேவையே ஆகாது...அது வேறு...நாட்டை நல்ல மனிதரை காப்பாற்ற...தீயவரை பாவ மன்னிப்பு கேட்க வைக்க சிறந்த சேவை அளிக்கிறதோ?..

No comments:
Post a Comment