Tuesday, September 18, 2018

டில்லின்னாவே ஏமாற்றுதானா? கவிஞர் தணிகை

டில்லின்னாவே ஏமாற்றுதானா? கவிஞர் தணிகை



114 என்று ஆரம்பிக்கும் எண்களிலிருந்து ஒரு கால் வந்தது...தெரியாத எண் எனவே வேண்டாம் என நினைத்தும், இப்போதுதான் தூய்மை பாரதத் திட்டம் அது இது என டில்லி செய்யச் சொல்லிக் கொண்டே இருக்கிறதே...எங்கள் கல்லூரியில் அந்த தூய்மை பாரதத் திட்ட கோடை உறைவிடப் பயிற்சிக்கு  அடியேன் தான் எங்கள் கல்லூரியில் நோடல் ஆபிசர், அது மட்டுமல்ல‌ மன் கி பாத் அது இது என தமிழகத்தை குறி வைத்து ஏதேதோ நடக்கிறதே எனவே இந்தியில் பேசிய அதன் குரல் புரியவில்லை என்றாலும் கூட என்ன எனக் கேட்க ஆரம்பித்தேன்.. இந்திக்கு ஒன்று, தெலுங்குக்கு இரண்டு தமிழுக்கு 5என செல்ல ஆரம்பித்தது. தமிழ் நமது ஜீவனாயிற்றே எனவே எண் 5 ஐ தொட்டோம். உடனே இந்த கால் கட்டணம் பற்றி சொல்லும் முன்னே உடனே தொடர்பை துண்டித்து விட்டேன்.

என்றாலும் அடுத்த அழைப்பு வரும்போது  ஓகே என்று திரையில் காண்பித்து 7 ரூபாய் கழிக்கப்பட்டிருந்தது என் கணக்கிலிருந்து அது மட்டுமல்லாமல் அது ஒரு கன்வெஸ்ஸன் என்று வேறு இருந்தது.

திருட்டுப் பயல்களை செருப்பால் அடித்தாலும் தவறில்லைதானே....

இதை எப்படி அவர்கள் உபயோகித்து அவர்களாக நம்மை அழைத்து நமது கணக்கிலிருந்து காசை எடுக்கிறார்கள், எப்படி நமது கணக்கிலிருந்து கழிக்கிறார்கள்? இதுதான் எனக்குப் புரியவில்லை...

ஆனால் அனைவரும் விழிப்புடன் இருங்கள் எனக்கு ஏற்பட்ட இழப்பு உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கான பதிவே இது.

நேற்று ஒரு சம்பவம் கல்லூரியில் நடந்தது... டில்லியிலிருந்து இரண்டு இந்திக்கார இளைஞர்கள் வந்து கல்லூரி முதல்வரை சந்தித்து வீணாகும் பேப்பரில் இருந்து கை வினை அழகுப் பொருட்கள் செய்து காண்பதற்கு அனுமதி வேண்டி முதல்வர் இல்லாத போது சில முறை  முன் நாட்களில் வந்து நச்சரித்திருந்தார்கள்.

நேற்று காலையும் வந்து முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அமர்ந்திருந்தார்கள். முதல்வரின் உதவியாளர் நான் வேறு பணிகள் நிமித்தம் அவரை சந்திக்கச் செல்லும்போது இவர்கள் வந்திருப்பதையும் தெரிவிக்கச் சொன்னார்.

நானும் எந்தவித ஆட்சேபணையுமின்றி இதில் என்ன வந்து விடப் போகிறது எனச் சொன்னேன். முதல்வரும் நீங்களே நடத்திக் கொடுத்து விடுங்கள் மாணவர் செயல்பாடுகள் என நமக்கும் ஒரு அறிக்கைக்கான சான்றுகள் கிடைக்கும் என்றார்.

உடனே அவர்களை அன்றே மதியம் இரண்டு முப்பது மணிக்கு வரச் சொல்லி விட்டு அன்று நிறுவனர் கூட்ட அரங்கில் தேர்வு எனத் தெரிந்து கொண்டு டி. எம் ஹாலில் ஏற்பாடு செய்து அது தொடர்பான அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியரிடமும் தெரிவித்துக் காத்திருந்தால் மணி இரண்டு, இரண்டே கால், இரண்டரை என ஓடிக் கொண்டே இருக்க இந்த இந்திக்கார இளைஞர்கள் வரவேயில்லை. அவர்கள் பதிவேட்டில் குறித்து வைத்த  செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் அது ஒன்று ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது அல்லது அவுட் ரீச்சில் உள்ளது என பதில்...
பார்க்கும் வரை பார்த்து விட்டு இரண்டே முக்கால் மணி அளவில் காத்திருந்த மாணவ மாணவியரை கலைந்து போகச் சொல்லி விட்டோம்.
அந்த இந்திக்கார கைவினை செய்து பழைய பயன்பட்ட காகிதத்திலிருந்து பயனாகும் கலை அழகுப் பொருட்கள் செய்து காண்பிக்க வருவதாக்ச் சொல்லிச் சென்ற அவர்கள் வரவேயில்லை...

அதை முதல்வரிடம் தெரிவித்தால், அவரோ மிக மென்மையாக உங்களுக்கு யார் எப்படி என கணிக்கத் தெரியவில்லையோ என்ற பொருள்படும்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தி விட்டார் என்னிடம்.

எனக்கு அந்த உணர்வுகள் அடங்க வெகு நேரமாகியது. ஏன் எனில் அந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் கல்லூரிக்கும், மாணவ மாணவியர்க்கும், எனக்கும், அதை செய்து காண்பிக்க வந்ததாகச் சொன்ன அவர்களுக்கும் உற்சாக மனநிலை ஏற்பட்டிருக்கும்...அது ஒரு ஏமாற்றமாக முடிந்து விட்டது. அவர்கள் ஏன் வரவில்லை என்பதையும் நாங்கள் தெரிந்து கொள்ள அவர்கள் தொடர்பில் இல்லை.

முன் ஒரு காலத்தில் டில்லியிலிருந்து மிக்ஸி, சட்டை, பேன்ட் துணிகள், மின் விசிறி ஆகியவை குறைந்த விலைக்கு கொடுக்கிறோம் ஆர்டர் எடுத்து பணம் அனுப்புங்கள் என ஒரு பணி வந்தது. செய்ய முய்ற்சி செய்தேன். அவர்கள் அனுப்பிய பொருட்கள் எல்லாம் தரம் குறைந்து குறுகிய காலத்தில் என் பேரைக் கெடுப்பதாகவே இருந்தன. மின் விசிறி, மிக்ஸி, துணி மணி வாங்கிய அனைவர்க்கும் எனது இழப்பீடு கொடுப்பதாகவே அமைய அந்த பணியை விட்டால் போதும் என நிறுத்தி விட்டேன்.

அட அதெல்லாம் சரிங்க...டில்லியின் ராஜா மோடி நடு ராத்திரியில் ஆயிரம்  செல்லாது என்று சொல்லி இப்போது இர்ண்டாயிரம் நோட்டு அடித்து நம்மை எல்லாம் கொஞ்ச காலம் பணம் பணம் என்று அதன் பின்னாலேயே அலையவைக்கவில்லையா..

அவரே பெட்ரோலியப் பொருட்கள், சமையலெரி வாயு, போன்றவற்றில் விலையி அவ்வப்போது கூட்டியபடியே ஆளவில்லையா?

உச்ச நீதிமன்றம் அந்த 7 பேருக்கு தீர்ப்பை ஏமாற்றி மாநிலமே முடிவு செய்து கொள்ளலாம் எனச் சொல்லவில்லையா

அல்லது ஜெ இறந்த பின்னே அவர் குற்றவாளிதான் என்று சொல்லவில்லையா

இருபது முப்பது ஆண்டுகள் கழித்து நெல்லையின் அறிவியல் விஞ்ஞானி நம்பி ராஜன் அப்பழுக்கற்றவர் அவரை கேரள அரசு படாடத பாடு படுத்தியது தவறு என இழப்பீடாக ஐம்பது இலட்சம் வழங்க வேண்டும் என்று சொல்லவில்லையா?

இப்படி டில்லின்னாவே ஏமாத்தறது தானா?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. உண்மை தான்
    நானும் 20 வருடங்களுக்கு முன் ஏமாந்து இருக்கின்றேன்.
    கமெராவிற்கு 500ரூபாய் மணி ஆர்டர் செய்தேன்
    வந்ததோ 5 ரூபாய் ப்லாஸ்டிக் கமெரா.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback on this post Saravanan Duraisamy . vanakka. please keep contact.

      Delete