பாரதிய ஜனதாக் கட்சியின் தவறான அணுகுமுறைகள்: கவிஞர் தணிகை
தமிழகத்தின் புழக்கடை வழியே புகுந்து பி.ஜே.பிதான் ஆட்சி நடத்தி வருகிறது இங்குள்ள உதிரியாகிப் போன அ.இ.அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்வோரின் தவறான பணக்கொள்ளையடிப்புக் குவியல் பற்றி மத்திய அரசுக்குத் தெரியும் என்பதால்....அவர்கள் அனைவரும் ஆடிப் போய் இருக்கிறார்கள்...நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க .அடிப்படையில் பாடல் ஒலிப்பில் பாதை அமைத்த கட்சியில்.
மேலும் சொல்லப்போனால் நீதிமன்றங்கள் எல்லாம் கூட சார்பில்லாமல் இயங்கவில்லை என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் குறிப்பிடலாம், ஜெ இறப்பு வரை வெளிவராத வருவாய்க்கு மீறிய சொத்து சேர்ப்பு வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சசிகலாவையும் இளவரசியையும் மட்டும் பாதிக்க ஜெ வை தப்பிக்க விட்டது 20 ஆண்டுகள் அவரின் அரசியல் ஆட்டங்கள்.
அவர் வாழ்க்கை முடிந்தபின் மோடி ஆடிய ஆட்டம் நீதியாகிவிட்டது. இன்று பன்னீர் செல்வத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார்கள் அல்லது ஆறுமாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து தேர்தல் நடத்தி விட்டால் ஏதாவது கிடைத்து விடலாம் அது அந்த 5% வாக்கு விகிதத்துக்கு அதிகமாகி விட்டால் அதுவே அந்தக் கட்சிக்கு பெருவெற்றி பெரிய வெற்றி என்பார்கள்.ஆனால் அதை எல்லாம் விட இந்த தமிழகத்தில் இப்போதுதான் அ.இ.அ.தி.மு.க ஆட்சி அமைத்திருக்கும் காலக் கட்டத்தில் மறைமுக ஆட்சியே மிகச் சிறந்தது என்னும் போக்கை பி.ஜே.பி நடத்திட விரும்புவதை அவர்கள் தலைவர்கள் என்னும் சொல்லிக் கொள்வோர் பேசிடும் அகந்தை காட்டுகிறது.
அந்தப் பிடிகளில் சிக்கியபடி சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம், எடப்பாடி எல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதை விட மேலும் சொல்லப் போனால்
ஸ்டாலின் சொல்கிறபடி தி.மு.க என்ற கட்சி ஆளும் கட்சியின் இடத்தைப் பிடித்து விடக்கூடாது அது நிரந்தர ஆட்சியாகி 4 வருடம் 5 வருடம் ஓட்டி விடும் என்பதில் தெளிவாக இருந்து கொண்டு காய் நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
41 நாள் புல்லைத் தின்று, மண்ணைத் தின்று, சிறு நீர் எல்லாம் குடித்த தமிழக விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை வாங்கி முதல்வர் தருவதாக பிரதமரிடம் சொல்லி வாங்கித் தருவதாக சொல்லிச் சென்றிருக்கிறார்கள் நம்புவோமாக..
இந்த ஏழை கடன் வாங்கினால் அதற்காக தற்கொலை செய்யுமளவு செய்வார்கள்...அம்பானியும், மல்லையாவும் அதானிகளுக்கும் சிவப்பு பட்டுக் கம்பளி விரிப்பார்கள்...இந்திய ஆட்சிகள் அன்றும் இன்றும் என்றும் தனியார் மயத்தையே ஆதரித்து அரசு நிறுவனங்களை கூட வைத்து விடுவதற்கு ஒரே உதாரணம் பி.எஸ்.என்.எல்லும் ஜியோக்களும்...
ஜெ இறப்பு தமிழக ஆட்சிக்கு அந்தக் கட்சியில் ஒரு வெற்றிடம் என்றால், தி.மு.க கட்சிக்கு அதன் நிரந்தரத் தலைவர் மௌனமானது ஒரு பின்னடைவுதான் இல்லை என்றால் இந்த பா.ஜனதா கட்சியினர் இந்த அளவு துணிச்சலுடன் பேசுவதற்கு உடனடியான பதில் கிடைக்கும் அல்லது பதிலுரையாவது வார்த்தை வடிவத்தில் கிடைத்திருக்கும்...தி.மு.கவும் பயந்து கிடப்பது போல் தெரிகிறது அதை பதுங்கிக் கிடக்கும் புலி பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்ற இருக்கும் எச்சரிக்கையாக கொள்ளலாமா இல்லை அதுவும் இராஜா கேஸ் கனிமொழி கேஸ் மாறன் கேஸ் என செல்வ வளத்துள் சிக்கிக் கிடப்பதாகக் கொள்வதா?
அவங்க கட்சி அத்வானி போன்றவரையே பாபர் மசூதி வழக்கு என மறுபடியும் தூசி தட்டி குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து விலக்கி வைத்திருக்கும் மோடிக்கு தமிழகத்தின் உச்ச நீதிமன்ற முன்னால் தலைமை நீதிபதி மற்றும் கேரள கவர்னர் சதாசிவம் அல்லது ரஜினிகாந்த் பேர்களை பரிசீலனை செய்யப் பரிந்துரைக்கப் படுவதாகவும் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
அமித் ஷா முறை பருப்புகள் தமிழகத்தில் வேகாது என்பது நிச்சயமாகப் படுவதால் நீர் பிரச்சனை, கர்நாடகாவை நீதிக்கு பணிய வைக்காமை, போன்றவையும் தமிழகத்தில் வேண்டுமென்றே நிறைய நிர்பந்தங்கள் தலைமை ஆட்சியிடம் இருந்து ஏற்படுத்தப் படுகின்றன.
காந்தியை முடித்த அதே அடிப்படையில் இருந்து எழுந்த கட்டுமானக் கட்சி இன்று எதை எதையோ பேசி மக்கள் செல்வாக்கை பெற எத்தனையோ அணுகுமுறைகளை எடுத்து வருகிறது. தமிழகத்துக்கு ஒரு நீதி. உ.பிக்கு ஒரு நீதி. அங்கே ஆதித்யநாத் 60000 கோடி கடன் தள்ளுபடி செய்கிறார் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே...ஆனால் இந்த தமிழக விவசாயிகள் மலம் தின்ன விட்டுவிடுவார் போலும் இந்த மன்கி பாத்காரர். எல்லாரும் இந்நாட்டு மன்னரே.எல்லாம் இந்தியக் குடிமகன்கள் என்ற போதிலும் எப்போதும் தமிழர்கள் மாற்றான் தாய் பிள்ளை போலவே இந்திய நடுவண் அரசுகளால் அது இந்திரா இந்தியா ஆனாலும் காங்கிரஸ் ஆட்சி ஆனாலும் மோடி இந்தியா ஆனாலும் பி.ஜே.பி இந்தியா ஆனாலும்...அப்படியேதான் நடக்கிறது...இதெல்லாம் நல்லதுக்கில்லை என்று கவலைப்பட ஆள் யாரும் இல்லை என்பதுதான் கவலைக்குரிய பெரு விசியம் விஷம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான பதிவு. வேதனையான செய்திகள். நன்றி.
ReplyDeletethanks sir for your feedback on this post vanakkam sir.
Deleteவேதனை வேதனை
ReplyDeletethanks for your expressions on this post sir. vanakkam
ReplyDelete