Sunday, April 2, 2017

காதல் விஷம்:கவிஞர் தணிகை



காதல் விஷம்:கவிஞர் தணிகை

Image result for love is a sweet poison


விஷமாயிருந்தாலும் அதையும் ருசித்து பார்த்து விடுவதுதான் நமது வழக்கம், பழக்கம்.அது எப்படிப்பட்ட உணவாயிருந்த போதும் அதை ருசித்துப் பார்க்கும் ஒரு சமையல்காரன் போல...

தீவிரவாதத்தால் இழக்கும் உயிர்களை விட காதலால் நடக்கும் தீவிரவாதம் இந்தியாவில் நாளுக்கு ஒரு கொலை, 14 தற்கொலை, 47 கடத்தல் என தற்போதுதான் படித்தேன், இது இராதாகிருஷ்ணன் நகர் தேர்தலை விட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடன் தமிழரான சதாசிவம் முன்னால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், தற்போதைய கேரள ஆளுனருமான இவர் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் ஈடுபடுகிறார் என்பதையும் விட பெரிய செய்தியாக, விஷால் திரைப்பட தயாரிப்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றதை விட சமூக அக்கறை அதிகம் காட்ட வேண்டிய செய்தியாக எனக்கு இருப்பதால் எனது கவலையை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.   

செய்தி :    TNN
                  Related image    

இந்தியாவில் தீவிரவாதத்தை காட்டிலும் அதிக உயிரிழப்புகள் காதல் விவகாரங்களால் ஏற்படுவதாக அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
2001 முதல் 2015 வரையான உயிரிழப்புகள் பற்றிய மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், 38,585 கொலைகள், 79,189 2.6 லட்சம் காதல் விவகாரம் தொடர்பான கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த விவரங்களின் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ஒரு கொலை, 14 தற்கொலை, 47 கடத்தல் காதல் விவகாரம் தொடர்பாக நடப்பதாக தெரியவந்துள்ளது.
காதல் தொடர்பான வழக்குகளில் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளன. இந்த மாநிலங்கள் அனைத்திலுமே 2001-2015 வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் காதல் விவகாரங்களால் நிகழ்ந்துள்ளன.
காதல் விவகாரத்தில் அதிக தற்கொலைகள் பதிவான மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 2001-2015 வரை 15 ஆயிரம் தற்கொலைகள் காதலின் காரணமாக நடந்துள்ளன. இரண்டாவதாக, தமிழகத்தில் 9,405 தற்கொலைகள் காதல் விவகரத்தினால் நிகழ்ந்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் உள்ள அசாம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
19 மாநிலங்களில், காதல் பிரச்னைக்காக தற்கொலை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை ஆண்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.தற்கொலைகள் நடந்திருக்கின்றன.
courtesy: samayam
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
                      

3 comments: