Saturday, April 15, 2017

கடம்பன் சிவலிங்கா: கவிஞர் தணிகை

கடம்பன் சிவலிங்கா: கவிஞர் தணிகை

Related image

Kadamban Name and Title is related with Elephants.

Image result for 55 by 100 number

கடம்பனுக்கு ஜே.
கடம்பன் மனதை கல்லாக்கிக் கொண்டு பார்க்க வேண்டிய அரிய படம். காலத்துக்கு இப்படி ஒரு மலைவாழ்மக்கள் அழிவைச் சொல்லிக் கொண்டிருக்கும்படியான படங்கள் வந்து கொண்டிருந்தாலும் இது அவர்கள் வாழ்வை துணிச்சலுடன் நேர்மறையாக எதிர் கொண்டு வெற்றி காணும் படம். எனவே பார்க்க வேண்டிய படமாகிறது.

ஆர்யா கடம்பன் பாத்திரமாக மாறி இருக்கிறார். மிகவும் நன்றாக உழைத்திருப்பது நன்கு தெரிகிறது. இது போன்ற நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். ஆனால் இதன் வெற்றி எப்படி இருக்கிறது என மக்களும் காலமும் சொல்வார்கள்.

Related image


இராகவா என்பவர் இயக்கி எழுதி திரைக்கதை செய்திருக்கிறார். சூப்பர் குட் ஃபில்ம்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள். இது முன்பு விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து தனிக்காட்டு இராஜா என்ற பேரில் செய்வதாக இருந்ததாம் ஆனால் அவரால் செய்ய முடியாததால் ஆர்யாவை வைத்து செய்து நல்ல பேரும் ஈட்டி இருக்கிறார்கள். நான் கடவுள் அகோரி பாத்திரத்திற்கும் பின் ஆர்யா ஏற்றிருக்கும் மிக நல்ல முத்திரை பதிக்கும் பாத்திரம் இந்த கடம்பன்.

கேத்ரின் தெரஸா உண்மையாகவே கானகத்தின் இரதியாக, மலைக்குயிலாக வலம் வந்து குறும்பு செய்து கலக்குகிறார் ஓடி ஓடி கடம்பனை அடைந்தே விடுகிறார். நீங்கள் பணம் சம்பாதிக்க எதையும் செய்வீர் எனில் நாங்கள் எம் வாழ்வை காக்க காட்டை காக்க மலையை காக்க எதையும் செய்வோம் என ஆரியா சொல்வதும் தாத்தா, அப்பன், நாங்கள் எங்க மக்கள் எல்லாம் இதே மண்ணில் வாழவே வேண்டும் வாழ்ந்தோம், வாழ்ந்தே வருகிறோம் என்ற கருத்து ஒலிக்கிறது. ஒளிர்கிறது.

ஆனால் இதே போல் எல்லாப் போராட்டங்களும் நியாயமான போராட்டங்களும் வெல்கின்றனவா என்றால் சினிமாவில் வெல்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

Image result for kadamban

ஒரு யானைக்கு மது பாட்டல் காலில் ஏறி அதை வைத்தியம் பார்ப்பது, தேன் அழிப்பது, வேட்டையாடச் செல்வது,தோல் உரித்த புலி எனக் காட்டி தொங்க வைத்திருப்பது இப்படி மனதை பாதிக்கும் காட்சிகள்...கொடைக்கானலில் எடுத்ததாக சொல்கிறார்கள். அந்த அருவி மிகவும் அற்புதமாக இருக்கிறது. கடைசியில் அந்த 50க்கும் மேற்பட்ட யானைகளுடன் கடம்பனின் போர் யுத்திகள் படத்துக்கு மேலும் மகுடமாகிறது.

எதிரிகளை அழைத்து வந்து வளையத்துள் சிக்க வைப்பது, எதிரியை அவர்கள் பாசறைக்குள் சென்றே அழிப்பது என இரு யுத்திகளால் நாயகன் வெல்வதான கதை. நன்றாக இருக்கிறது.
Image result for kadamban


மதுவந்தி மகேந்திரனும், மகேந்திரனும், தன்னார்வத் தொண்டர்களாக நல்லது செய்வதாக சொல்லி தந்திரமாக அவர்களை மலை மக்களை ஏமாற்றும் கருவிகளாகி இருப்பதாக காண்பிப்பது தன்னார்வ இயக்கங்களை மறைமுகமாக எள்ளி நகையாடி இருக்கிறது. இதை சினிமாவுக்காக அந்த தனிப்பட்ட பாத்திரங்கள் வேண்டுமானல் அப்படி என கதைக்காக கொள்வதில்  தவறு ஏதுமில்லை.

மற்றபடி கடம்பன் நல்ல படம்தான். சிறந்த உழைப்பு. பார்க்க வேண்டிய படம்தான் காட்சிகள் யதார்த்தமாகவும் கதைக்காகவும் திரைக்கதைக்காகவும் இருக்கின்றன. வன இலாகாவின் கைக்கூலிகள் எப்படி இந்த மக்களுக்கு எதிரிகளாக இருக்கின்றனர் என்பதும், சொல்லப்பட்டிருக்கிறது.
Related image


என்ன வேகமாக ஆர்யா மரம் ஏறுகிறார், கொடியால் பின்னுகிறார், தொங்குகிறார், சேற்றில் விழுந்த வன இலாகா நபரைக் காப்பாற்றுகிறார் என்ன கிராபிக்ஸா? எப்படி இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது பா‍ஹுபலி கிராபிக்ஸை, சங்கரின் எந்திரன் 2.0 கிராபிக்ஸை இரசிக்கும்போது இதையும் இரசிக்கலாம்


சிவலிங்கா:
Image result for sivalinga

சிவலிங்கா ஏற்கெனவே கன்னடத்தில்  2016ல் வெளியான படம் இப்போது தமிழ் மறு உருவாக்கத்தில்.

இராகவா லாரன்ஸுக்கு மொட்ட கெட்டசிவாவை விட இந்த சிவலிங்கா சற்று பரவாயில்லை.

மனிதர் விவசாயிகள், மாற்றுத் திறானாளிக் குழந்தைகள் என அனைவர்க்கும் தம்மால் ஆன தர்மத்தை நிறைய செய்வதாக ஒரு தொலைகாட்யில் கண்டேன் . அது அவரை அனைவருடனும் அருகே கொண்டு செல்லும். ஆனால் இப்போதைய இந்த 2 படங்களும் அவருக்கு அந்தளவு புகழ் சேர்க்குமா என்பது கேள்விக்குறியே.

Related image
 சந்திரமுகி, போல காஞ்சனா போல வழக்கமான பேய் படங்கள் போல ஆனாலும் கடைசியில் அத்தனை திருகல்கள் செய்து கதையில் புறா போட்டியும் அதன் தோல்வியும்தான் ர‍ஹீமின் கொலைக்கு காரணம் என்று சொல்வதற்குள் படம் பார்ப்பாரை கொஞ்சம் திணற அடித்து விடுகிறார் வாசு.

சின்னத் தம்பி, சந்திரமுகி என கதையே இல்லாத கதையைக் கூட நன்றாக ஓடுமளவு திரைக்கதையாகத் தந்து விடும் அனுபவசாலியான இயக்குனர் இந்த படத்தில் தன் மகன் சக்திவேல் வாசுவை முக்கியமான ர‍ஹீம் பாத்திரத்தில் உலவ விட்டிருக்கிறார். பேயாகவும் பழி வாங்கவும்.
மேலும் அந்த ரித்திகா சிங் நன்றாகவும் பேயாகவும். மற்றபடி ஊர்வசியும் வடிவேலுவும் சிரிக்க வைக்க முயல்கின்றனர். எடுபடவில்லை.

ஊர்வசி மதுவுக்கு அடிமையாகி ஒரு கேரளத்து பொதுக்கூட்டத்திற்கே சென்று உளறியதாக செய்தி அறிந்ததிலிருந்து அவரை இரசிக்க முடியவில்லை  நன்றாக ஊதியிருக்கிறார்.

Banupria is coming as mother in law to siva linga....

ஜாலியாக சிக்கல் இல்லாமல் ஆரம்பித்து அப்படியே செல்லும் கதை கடைசியில் பெரிய முடிச்சாக அவிழ்க்கப் போகிறார்கள் என்ற கட்டத்தில் சிக்கிக் கொண்டு படாத பாடு படுகிறது.

எனது பார்வையில் சிவ லிங்காவை பார்க்கலாம் பார்க்காமலும் இருக்கலாம் ஒன்றும் நஷ்டமில்லை. பொழுது போக்க படம்.

Image result for 40 number out of 100

மறுபடியும் பூக்கும் வரை.
கவிஞர் தணிகை.

1 comment: