மது விலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கினால் வருமானம் குறைவதாக சொல்லபடும் கருத்து எல்லாம் பொய் என்று அறிவுரை கூறியுள்ளார் மதுவிலக்கை தனது மாநிலத்தில் சாத்தியபடுத்தி இருக்கும் பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிகார் முதல்வர் நிதிஷ்குமார், “உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு பிறகு தான் இந்த நாட்டில் நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகள் அகற்றபட்டுள்ளது. மக்களின் மனநிலையே போதைக்கு அடிமையாகிவரும் நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுவருகிறது. மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும், அதே நேரம் நாடு முழுவதும் போதை பொருள்களையும் தடைசெய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு இது தான் அவசியம்.
சீனாவை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் போதை வஸ்துகளுக்கு அந்த நாடு தடைபோட்ட பின் தான் அசுர வளர்ச்சியை அந்த நாடு கண்டது. நம்நாட்டிலும் அந்த நிலையை கொண்டுவர வேண்டும்.
மதுவிலக்கு கொண்டுவந்தால் வருவாய் பாதிக்கும் என்ற கருத்து நாடு முழுவதும் உள்ளது. எனது மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்திய பிறகு எந்த வருவாய் இழப்பும் ஏற்படவில்லை. மது அருந்தியவர்கள் இப்போது பால் அருந்துகின்றார்கள். ஆரோக்கிய பானங்களை மக்களே நாடிச்சென்று வாங்கி பருகுகின்றார்கள். மதுவிலக்கை போலவே விளை பொருள்களுக்கும் உரிய விலையை நாங்கள் வழங்குவதால் ஒரு விவசாயி கூட எங்கள் மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்ளவில்லை” என்றார் பெருமிதமாக. நாடு முழுவதும் மதுவின் தீங்குகள் அதிகரித்து வரும் நிலையில் நிதிஷ் குமாரின் இந்த பேச்சு மதுவிற்கு எதிராக போராடி வருபவர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
thanks
thanks
Vikatan
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment