Friday, April 14, 2017

ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டா? திருவள்ளுவராண்டு 2048_ 2049 புத்தாண்டா? கவிஞர் தணிகை

ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டா? திருவள்ளுவராண்டு 2048_ 2049 புத்தாண்டா? கவிஞர் தணிகை



ஒரு முயலையே ஓடினாலும் பிடிக்க முடியாது, இதில் இரண்டு பக்கமும் வேறு வேறு திசையில் ஓடுகின்ற இரண்டு முயல்களை எங்கே பிடிக்க முடியும் கேட்டால் முயற்சி செய்யுங்கள் எல்லாம் பிடிக்கலாம் என கதை விடுவார்கள்.

ஒரு பாதி அல்லது ஒரு சாரர் பாரதி தாசன் சொன்னாரே தை தான் தமிழ் புத்தாண்டு எனச் சொன்னாரே அதுதானே தமிழ்ப் புத்தாண்டு என்பார், எடப்படி பழனி சாமி முதல்வரானவர் ஜெ தான் அதை மாற்றி விட்டாரே கலைஞர் ஆட்சி இனி காலம் போன கதை, சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என அறிக்கை கொடுக்கிறார், எனவே தமிழ் நாடு மாநில அரசின் அலுவலக ரீதியான தமிழ்ப் புத்தாண்டு இன்றுதான், ஆனால் இதை சமுதாயத்தில் தமிழ் மொழி பால் பற்றை வைத்திருக்கும் ஒரு சாரருக்கு ஏற்புடையதில்லை.எனவே இரண்டுமே நாம் கொண்டாடும் நிலையில் இருக்கிறோம். ஏன் எனில் இவர்கள் எதையுமே குழப்பமில்லாமல் தெளிவுபடுத்தி ஒன்றை மட்டுமே பின் தொடர அனுமதிப்பாரில்லை. ஒரு சாரருக்கு அங்கீகாரமில்லை, அங்கீகாரம் கொடுக்கும் நிலையில் உள்ளார்க்கு அந்தளவு அறிவும், தமிழ்ப் பற்றும் நெறியும் இல்லை.

எனவே தமிழார்ந்த அறிவார்ந்த ஒரு சபை ஒன்றைக் கூட்டி அதில் ஒரு நல்ல முடிவை ஏற்படுத்தி அதை அரசும் மக்களும் பின் தொடரவைக்கும் ஆட்சி முறை வேண்டும். அந்தக் காலத்தில் மன்னராட்சியில் கூட இது போன்ற சபை கூட்டலும் தீர்வு செய்தலும் முறையாக இருந்தது. ஆனால் இன்று ஏதுமில்லை

இந்தக் கட்சிக்காரர் வந்தால் அது என்கிறார், இந்தக் கட்சிக்காரர் ஆட்சிக்கு வந்தால் இது என்கிறார், மொத்தத்தில் எமைப் போன்றோர் இரண்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லது இரண்டையுமே கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

எனக்கு ஆங்கிலத்தில் 18.மார்ச் மற்றும் 23 மார்ச் இரண்டுமே பிறந்த நாளாக இருப்பது போல...ஒன்று அலுவலக அரசு முறைக்கும் ஒன்று உண்மையானதாக இருப்பது போல... எல்லாம் இரண்டு இரண்டாக இதுவும் இரண்டாக இருந்து விட்டுப் போகட்டுமே...அறிவியல் சார்ந்து இந்த விவாதம் பொருத்தமாக இல்லை எனிலும் இவை எல்லாம் அப்படித்தான் , அப்படியேதான் ஏற்றுக் கொண்டாக வேண்டும், நம்மால் அதை எல்லாம் மாற்றமுடிவதில்லை. மாற்ற முயன்றால் நாம் நம் நிலை மாறிப் போயாகவேண்டும், அல்லது மாயமாகப் போயாக வேண்டும்.

ஆறுமுக நாவலர் அல்லது ஓதுவார் என்பார் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஓதினார் இன்று மறைந்தார் அஞ்சலிதான் செலுத்துகிறார்கள் ஆனால் உச்ச நீதி மன்றம் அந்தக் கோயிலை தமிழுக்கும், பராந்தக சோழனுக்கும், தமிழருக்கும் தொடரபுடையதாக இல்லை அல்லது உரிமையுடமையாக இல்லை என்று தீர்ப்பு அளித்த பின் இன்னும் பக்தி மார்க்கம் மக்களை தொடர ஏமாற்று வேலைகள் தொடர்ந்தபடியே இருக்கிறது. எதுவும் மாறவில்லை எதையும் மாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை.அதற்காக மாற்ற முயற்சி எடுக்காமல் விட்டு விட முடியாதே என்று ஒரு குரல் கேட்கிறது  அது உண்மைதான் முயற்சி எடுப்பார் எடுத்துக் கொண்டிருங்கள் எனக்கு மற்றொரு கடமை இருக்கிறது.

சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி  கிளியே இவர் ....

இது போல நிறைய இருக்கிறது இந்நாட்டில். எந்தப் பக்கம் போலித்தனம் இருந்தாலும் அது தவறுதான் அது இரட்டை நிலையை வழிநடத்த வாய்ப்பளிக்கிறது சுய வாழ்வில் போலித்தனமாய் வாழ்ந்து கொண்டு பொதுவாழ்வில் வேடமிடும் போலிகளால் இவை எல்லாம் நேர்ந்தது விளைந்தது...கடவுள் மறுப்பு சிந்தனையாளர் என்பார் அவர்கள் தான் காசி இராமேஸ்வரம் முதல் சென்றுவருகிறார்கள் கடவுள் நிலையில் வேறு வேறாய் கூறுகளை பார்ப்பார் கூட போகாதிருக்கும்பட்சத்தில்...

தி.க, தி.மு.க என்பார் கொள்கை எல்லாம் இழந்து ஒன்று கட்சிய தமது குடும்பம் என்றும், கழகத்தை அறக்கட்டளையை தமது சுயநலத்திற்குமாக இவர் நடப்பதே முன்னிருக்கும் முட்டுக் கட்டைகள்...இவை எல்லாம் விடுத்து சுய நலமில்லா நேரடியான வெளிப்படையான தலைமைகள் இருக்கும் போது மட்டுமே செயல்படும்போது மட்டுமே எல்லாவற்றையும் சீர் செய்ய முடியும். இலங்கை தமிழ் இனப் படுகொலையாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சனையாக இருந்தாலும் சரி, காவிரி நீர்ப் பிரச்சனையாக இருந்தாலும் சரி தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவதாய் இருந்தாலும் சரி...

சேலத்தில் ஒரு பெரிய கடையில் விளம்பர போர்ட்: பாலஜி ‍அலுமினிய மெட்டல் மார்ட் என்றிருந்தது மிகப் பெரும் எழுத்துகளில்.பாலாஜி என்பதில் ஒரு கால் இல்லை.இதை ஏன் சரி செய்ய வில்லை மறுபடியும் பொருளாதர செலவு ஆகிவிடும் என கடைக்காரர் செய்யவில்லையா? தமிழ் எழுத்தை எழுதிய அந்தக் கலைஞர் அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதை மாற்ற என்பதாலா...ஆனால் அதை அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். தவறு நிலைத்து விட்டது அப்படித்தான் தமிழும் தமிழ் மொழியும் சீரழிந்தபடி இருக்க...தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடுவது பற்றி நாம் யோசித்து அசை போட்டுக் கிடக்கிறோம்.தமிழே இல்லை காவிரியே இல்லை இனி எதுக்கு எப்படி என்கிறீரா?




என்றாலும் என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்...

ஹே என்பதே வட மொழி எழுத்து, இதில் விளம்புதல் என்றால் சொல்லுதல், மேலும் ஒரு பொருள் அதற்கு: எழுதிய எழுத்தின் மேல் திரும்ப எழுதல் அல்லது திருத்திக் கொள்ளுதல்...ஆனால் இதை ‍ஹேமா என்றால் தங்கம் என்றும் இதையும் அட்சயை திருதியை ஆக்கி தங்கம் விற்று காசு பணம் இலாபம் சம்பாதிக்க நினைக்கிற கூட்டம்...

அங்கே விவசாயி பாதி மழித்துக் கொள்கிறான், நிர்வாணமாக போராடுகிறான், குட்டிக்கரணம் போடுகிறான், அதற்கு இங்கே கத்திப்பாராவில் ஒரு குரல் கேட்டால் அதை ஆதரிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை சட்டம், மயிரு, கட்சி என கட்சித் தலைமை என ஒப்பாரிகள் கேட்கின்றன...ஒரு மயிரில்லாத மண்டையன் ஒரு எம்.எல்.ஏவை இருந்து மதுவுக்கு எதிராக போராடச் சொன்ன தாயை தமிழ்த் தாயை மதுவை எதிர்த்து போராடும் தாயை மிருகமாக தாக்குகிறான் அவன் என்ன ஆனான்? அவன் மத்திய அரசுப் பணி என மாற்றிக் கொண்டு ஓடி விடலாம்...

ஆனால் தமிழ் நாட்டுக்கும் தமிழுக்கும் இது போன்ற ஒரு இழிவான அவலமான நிலை மோடி ஆட்சியைப் போன்று பிறிதொரு ஆட்சியில் விளைந்ததில்லை இதை உணராமல் இங்கிருக்கும் அந்த காவிக் கட்சித் தலைவர்கள் கட்சியை கட்சியின் நிலையை தூக்கிப் பிடிப்பதாக எண்ணி கூலிக்கு மாரடைப்பார் போல குரைத்தபடி இருக்கிறார்கள். தமிழும் தமிழரும் முன மழுங்கியபடியே போய் வெகு நாளாக ஆகிவிட்டது.

முன்பெல்லாம் தி.மு.க காரர்கள் துணிந்து போராடி எதிர்த்து நிற்பார்கள் இது  கூட இப்போதெல்லாம் இல்லை. ஏன் எனில் அவர்களும் சுயநலமிகளாய் பாலு போல கோடீஸ்வர நாட்டத்திலேயே இருப்பது போல ஆகிவிட்டது.

இப்படி எல்லாம் தமிழுடன் தமிழ்ப் புத்தாண்டு, அரசியல் , சமூக வாழ்வுடன் பிணைந்து கிடக்க இந்த நாளை நாம் எதிர் கொள்கிறோம்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.
பெரிய வெள்ளியில்


No comments:

Post a Comment