பவர் பாண்டி: கவிஞர் தணிகை
தமிழ் சினிமா தலைப்பு வேண்டும் அப்போதுதான் தமிழக அரசின் உதவித் தொகை கிடைக்கும் என்பதற்காக பவர் பாண்டியை ப பாண்டி என்று மாற்றி இருக்கிறார்கள். தனுஷ் கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடித்தும் இருக்கிறார். பின்னே விடுவாரா இளம் பவர் பாண்டி ரோலை அடுத்தவருக்கு....
மடோன்னா செபாஸ்டியன் இளமை ஊஞ்சலாடுகிறார்.
ரேவதிக்கு பதிலாக தேவயானியோ,ஸ்நேகாவோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
ராஜ்கிரண் பற்றி சொல்லவே வேண்டாம் படம் அவர் பேர் சொல்லும். அதாவது இந்தப் படம் ஏதாவது விருதை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
மாலாக்கா மாலாக்க ஐ லவ் யூ மாஸ்டர் ராகவனை ஸ்டார் ஆக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது.அவர்தான் தாத்தாவை முகநூலில் மறுபடியும் கண்டு கதைக்கு திருப்பம் கொடுக்கிறார். தன்னை விட மூத்த பக்கத்து வீட்டுக்கார இளைஞரை தாத்தாவை கிழவன் என்று சொன்னதற்காக என்னடா எங்க தாத்தாவை கிழவன் என்று சொல்கிறாய் என அடிக்கப் போவதாக ஆர்ப்பரிக்கிறார்
சாயாசிங்க் மிக அழகான மருமகளாக மனைவியாக பொருந்தி இருக்கிறார், பிரசன்னாவை தேவை என்றே போட்டிருக்கிறார்கள். மிகச் சரியான தேர்வு.
மகனாக நன்றாக துடித்திருக்கிறார்.
நாம் எதிர்பார்த்தபடி இல்லாமல் வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு சிம்பு பைக்கில் காதலியை ஏற்றிக் கொண்டு பயணம் செய்வது போல இவர் புறப்படுகிறார் அதன் பின் இவரின் வயது ஒத்த தோழர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு தனது பூந்தென்றல் தேடி ஹைதராபாத் புறப்படுகிறார். அவ்வப்போது ரெடிமேடாக பைட் வேறு. அதில் ஹைதராபாத் பைட் நன்றாகவே வெளித் தெரிகிறது ரெடிமேடாக தேவையில்லாமல் புகுத்தப் பட்டது போல.
மொத்தத்தில் ராஜ்கிரண் என்ற ஒரெ நடிகரை வைத்து வரைந்த ஓவியம். அவரும் நன்றாகவே வரைய முயன்றிருக்கிறார். ரேவதி ஆடிக்கொண்டே தம் வீட்டில் அறைக்குள் செல்லப் போவது எந்த வையதிலும் நமக்கு துணைத் தேவைப்படுகிறது என்று காண்பிக்கிறது.
இந்த சினிமா பார்க்கும்போது நன்றாக இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனாலும் நிறைய பேர் வாழ்வில் ஒட்டியும் ஒட்டாமலும் துருத்திக் கொண்டே இருக்கிறது.
காதல் நன்றாக இருக்கிறது. தனுஷ் தம்மை புரூஸ்லீ என அழைக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை காதலி மடோன்னா செபாஸ்டியன் வழியாகவும், வசனம் தாமே எழுதியதன் வழியாகவும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
இவர் டி.என்.ஏ டெஸ்ட் செய்ய வர மறுத்து அந்த வயது முதிர்ந்தோருக்கு நீத்மன்ற வழக்கில் இருந்து நழுவிக் கொண்டே இந்த மாதிரி படம் எடுப்பது எந்த வகையில் பொருந்துமோ அது எனக்குத் தோன்றவில்லை...
மேலும் அச்சம் என்பது மடமையடா காதல் பைக் ரோட் ஷோ போல இந்த பவர் பாண்டி காதல் ரோட் ஷோ என இருவருக்கும் ஒரு மௌனயுத்தம் நடக்கிறதோ என்று நினைவு படுத்தும் காட்சிகள்.எல்லாம் சினிமாடிக்காக இருந்தாலும் சினிமாவாக பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது.
பவர் பாண்டி வாழ்வு தற்கால வாழ்வுக்கு ஒட்டாமல் போய் கஞ்சா விற்பவரகளை அடிப்பது, அதற்கு ப்ரசன்னா ராகவன் தண்டம் கட்ட போலீஸ் ஸ்டேசன் போவது, தேவையில்லாமல் உதவி செய்து உபத்திரவம் தருகிறீர் என மகன் சலித்துக் கொள்ளுமளவு நடந்து கொள்வது, ஜிம் ட்ரெயினராக இருந்து வேலையை உதறுவது, சினிமாவில் நடிக்க டையலாக் வராமல் திணறுவது, அதே பைட்டிங் சீனில் மிகச் சரியாக செய்வது, குடித்து விட்டு கீழே விழுமுன்னே மகனை கடித்துக் குதறுவது, தூக்கம் விழித்துக் காப்பாற்றினேனே அதற்கு எப்போது நாங்கள் வருத்தப்பட்டோம் என்றது எல்லாம் டச்சிங்.
பவர் பாண்டியன் பக்கத்து வீட்டுத் தோழனாக ஒரு பீர் தோழன் .அவன் தான் தற்கால இளந் தலைமுறைக்கு நல்ல அடையாளமோ இல்லையோ, அவன் இனி சினிமாவில் மாலாக்கா மாலாக்கா ஐ லவ் யூ போல பயன்படுத்தப் படலாம்.
பழைய காதலிகளை காதலர்களை இதே போல சந்திக்க ஆசைப்படும் அனைவருக்கும் இந்தப் படம் ஒரு ஆறுதல் அஞ்சலி தரும்.
நூற்றுக்கு 50 தரலாம்.
மறுபடியும் பூக்கும் வரை.

நன்றி நண்பரே
ReplyDeletethanks sir vanakkam
ReplyDeleteஅருமை. நன்றி.
ReplyDelete