காற்று வெளியிடை: கவிஞர் தணிகை
ஐரோப்பியன், வெஸ்டர்ன், ரசியன் மொழி கதை சார்ந்தது போன்ற ஒரு காதல் கதையை மணி ரத்னம் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் ஒரு வேளை ஹிட் கொடுக்கலாம். தமிழில், தெலுங்கில் பிரதேச மொழி வெளிப்பாடுகளில் பெரு வெற்றி பெறுவது என்பதும் படம் ரீச் ஆவதும் சந்தேகத்துக்குரியதே.
எனக்கு தனிப்பட்ட முறையில் படம் பிடித்திருக்கிறது என்பது வேறு. மணி ரத்னம் மற்ற படங்களை ஒப்பிட்டு தனியாக இந்த படத்தை வேறு எந்த நினைவும் வராமல் பார்த்தால் ஓ.கேதான்.
ஆண் பெண் என்ற சங்கமம், இதில் சமம் சமானம் என்பது தேவையில்லா சமாதானமான உறவாக விசி, வருண் என்ற பைட்டர் பிலேன் கார்த்திக்கும் ஆர்மி டாக்டர் லீலாவுக்கும் உள்ள ஏற்படும் நெருக்கமான உறவை சித்திரிக்கிற படம்.
பாடல் சரட்டு வண்டியிலே, வான் வருவான், நல்லை போன்றவை புதிதாக கேட்பவர்க்கு பிரமிப்பூட்டும். காட்சியுடன் சேர்ந்து பார்க்க இயல்பாக இருக்கிறது.
தாலி திருமணம் என்ற சடங்கு இல்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த நாகரீகமான உறவு முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவன் பைட்டர் ப்ளேன் பைலட், அவள் ஆர்மி டாக்டர் இருவருமே நல்ல உயரமான வாழ்வு நிலையில் இருப்பதால்...அதெல்லாம் சகஜமப்பா என்று தோன்றுமளவு.
ஆனால் வலுவான உறவு என்றும் நிலைத்திருக்கும் என விசி பாகிஸ்தான் சிறையிலிருந்து ஏழு கடல் ஏழுமலை தாண்டி தமது மனைவியை குழந்தையை பார்க்க வந்ததாக சொல்வது கதையின் ஆணிவேர்.இத்தனைக்கும் அவள் தாலி கட்டாமல் மேளம் கொட்டாமல் மணம் முடிக்காமல் உடலை பகிர்ந்து கொண்டவள்.ஆனால் இந்த ஆண் பயந்து கொண்டு பொறுப்பிலிருந்து தப்பித்து அதெல்லாம் சரியாக வராது என்ற நிலையில் பெண் தாம் பார்த்துக் கொள்வதாய் துணிச்சலுடன் சொல்லிப் பிரிகிறார் பிரிவதாய் அப்போது தெரியாமலே...
அதன் பின் ஏர் கிராஷ், பாகிஸ்தான் சிறை , சித்ரவதை என்றெல்லாம் கதை நிலை மாறி கடைசியில் ஒன்று சேர்கிறது. மணி ரத்னத்திற்கு ஒரு காலக் கட்டத்திற்கும் பிறகு படம் தொடர்பு இடைவெளியில் விழுந்து விடுகிறதோ என்று பேசிக் கொள்கிறார்கள், காதல், மதம் , தேசியம் இதிலிருந்து இன்னும் இவர் மீளாமல் படம் செய்யும்போதெல்லாம் கீழ் இறங்கி விடுகிறார். ஒருவேளை இதே படத்தை பின்னாளில் இதே இந்தியப் படவுலகம் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லலாம்.
இந்தியப் பெண்கள் திருமணமில்லாமல் உடலுறவும், குழந்தை பெற்றுக் கொள்வதையும் ஏற்றுக் கொள்ளும் எனில் இந்தப் படத்தையும் ஏற்றுக் கொள்ளும். எனக்கென்னவோ படம் வியாபார ரீதியில் வெற்றி பெறும் எனச் சொல்லத் தோன்றவில்லை.
இது நல்ல காமிர, நல்ல லொகேஷன், நல்ல படம்தான், ஒரு நல்ல கதையை நல்ல நாவலை படித்த உணர்வைத் தரும் படம்தான். ஆனாலும் இதன் நிறையை எது குறைக்கிறது என்றுதான் புரியவில்லை. விசி அடிக்கடி கோபப்படுவதும், லீலா தமது ஆற்றாமையை கோபத்தை வெளிப்படுத்துவதும் ஒரு பாண்டேஜ் இருவரிடையே இருப்பதும் இல்லாததுமாக சில உறவுகளில் இருப்பது போல
மொத்தத்தில் சராசரியை விட மேலான மனிதரை நோக்கி அவர் வாழ்வை எடுத்துக் காட்டும் படமாக இருப்பதால் மாஸ் அப்பீல் இதில் இல்லை. அனைவரையும் சென்று சேராது.
மறுபடியும் எனைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல படம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
தனியாக இயக்குனரின் பின்னணி பற்றி எல்லாம் ஆராயாமல் அவர் முன் பின் படம் எல்லாம் ஒப்பிடாமல் பார்த்தால், நல்ல படம். கொஞ்சம் வெள்ளை மழை, கொஞ்சம் ரஷியன் நாவல், கொஞ்சம் பாகிஸ்தான், இந்தியா என கலந்து போய் இருக்கிறது மழை இல்லா எங்களது நாட்களில்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

அருமையான விமர்சனம். நன்றி.
ReplyDeletethanks for your feedback on this post sir .vanakkam
ReplyDelete